கால் வீக்கம்

எனது அப்பாவின் முழங்காலின் கீழ்ப்பகுதி வீங்கி உள்ளது. ஸ்கேன் பண்ணிய டாக்டர் நீர் நிறைந்துள்ளது அதனை எடுக்க வேண்டும் என்று சொன்னார், இது என்ன பிரச்சினை இதனை எப்படி குணப்படுத்தலாம். தயவு செய்து யாராவது உதவுங்கள்,

தயவு செய்து அவசரமாக பதில் தரவும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று,
எனக்கு அது பற்றி தெரியலைங்க.அப்பாவுக்கு சீக்கிரமே சரியாயிடும்.கவலை படாதீங்க.உங்க பதிவு பார்த்துட்டு பதில் போடாமல் போக முடியல.இது பற்றி தெரிந்த தோழிகள் பதில் சொல்லுவாங்க.

ஒரு சிலருக்கு உடலில் இது போல் நீர் கட்டிகள் வரும் தான்... சில தானாகவே சரி ஆகும், சிலதை கீறி விடுவாங்கன்னு சொல்வாங்க. அந்த நீரை வெளியே வர வைப்பாங்க. எனக்கு வலி இருந்தது, வீக்கம் இல்லை, ஆங்கில மருந்தில் ஆபரேஷன்னு சொன்னாங்க, சித்தாவில் சில நாள் ஏதோ ஒரு எண்ணெய் தேய்க்க சொன்னாங்க... தேய்ச்சேன்... இத்தனை வருஷமா திரும்ப வரல. இது அது போல் தானா, வேறு எதாவதான்னு தெரியலங்க. வேறு மருத்துவரிடமும் ஒபீனியன் கேளுங்க. கண்டிப்பா விரைவில் குணமாகிடும், கவலை வேண்டாம், எங்கள் பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்