குழிப்பணியாரம்

தேதி: July 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (7 votes)

 

பச்சரிசி - ஒரு கப்
வெல்லம் - 1 1/2 அச்சு
சாதம் - ஒரு கைப்பிடி
மைதா - ஒரு கைப்பிடி
தேங்காய் - நான்கு துண்டு
ஏலக்காய் - மூன்று
ஆப்பசோடா - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி சிறிது நீர்விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கி இலகுவாக கரைத்து வடிகட்டி வைக்கவும். சிறிய துண்டுகளாக தேங்காயை நறுக்கி சிறிது நெய் விட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்.
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து விட்டு மிக்ஸியிலோ கிரைண்டரிலோ சாதம் உப்பு சேர்த்து தண்ணீருக்கு பதிலாக கரைத்த வெல்லத்தை ஊற்றி நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் மைதா, வறுத்த தேங்காய், பொடித்த ஏலக்காய், ஆப்பசோடா, சேர்த்து இட்லிமாவு பதத்துக்கு கலக்கவும் (மாவு மிக கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்க்கலாம்)
பணியார சட்டியை அடுப்பில் வைத்து குழிகளில் கால் பாகம் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றவும் தீயை சிறிதாக வைக்கவும்.
சீக்கிரம் இரண்டு மூன்று நிமிடத்துக்குள் வெந்துவிடும். வெந்ததும் திருப்பி விட்டு சிவந்து வெந்ததும் எடுக்கவும்.
மாலை நேர டிபனுக்கு சூடான சுவையான குழிப்பணியாரம் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் முகப்பில் பார்த்தவுடன் குளோப் ஜாமூன் என்று நினைத்தேன் ருக்சானா!உள்ளே வந்து பார்த்தா அருமையான குழிப்பணியாரம்,செய்து பார்க்கனும்னு ஆசை,ஆனால் இந்த சட்டி இல்லை,நீங்க செஞ்சி அனுப்பி விடுரீங்களா?

Eat healthy

அருமையான குறிப்பு..... பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு..... எங்கம்மா கிட்டத்தட்ட இது மாதிரி தான் பணியாரம் செய்வாங்க.... ஆனா சாதம் சேர்க்க மாட்டாங்க..... இதில் நீங்க சாதம் சேர்ப்பதற்கு ஏதாவது காரணம் உள்ளதா.....

குழிப்பணியாரம் அழகா இருக்கு.. சுவையாவும் இருக்கும்;) நிச்சயமா செய்தடறேன். கொஞ்சம் சுக்கும் சேர்க்கலாம்னு நினைக்கிறேன். நன்றி மற்றும் வாழ்த்துகள்;-)

Don't Worry Be Happy.

ருக்சானா நல்ல குறிப்பு நான் கொஞ்சம் வேற மாதிரி செய்வேன் வாழ்த்துக்கள்
குறிப்பு மட்டும் வருது ஆளை காணலை என்னாச்சு?????????

ஹாய் ருக்சானா நேற்று உங்க குழிப்பணியாரம் செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது சுவையான குறிப்பு அளித்ததற்கு நன்றி.

senbagababu

அழகா குண்டு குண்டா பார்க்கவே சாப்பிடணும்போல இருக்கு
சூப்பர் குறிப்புங்க...வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.