சுகப்பிரசவத்திற்கான உடற்பயிற்சிகள்

சுகப்பிரசவத்திற்கான உடற்பயிற்சிகள்

தோழிகளே எனக்கு முதல் குழந்தை சிசரியன்.காரணம் குழந்தை மோசன் போய்ட்டான்னு சொல்லி அரைமணியில் நடந்தது இந்த மாற்றம்.
இப்ப அவனுக்கு 3வயது ஆகப்போகின்றாது.இது எனக்கு இரண்டாம் கர்ப்பம்,இந்த பிரசவத்தை முடிந்தவரை சுகப்பிரசவமாக்க முயற்சி செய்யலாமென உள்ளோம்.....
அதற்க்கான உடற்பயிற்சிகள் என்ன?எப்போதுசெய்யலாம்?எப்படி செய்வதுன்னு யாராவது? சொன்னால் நன்றாக இருக்கும்
உமா நீங்கள்தான் நிறைய இதுபோன்றா குறிப்புகள் கொடுத்து வருகின்றீர்கள்.எனக்கு இப்போது இரண்டுமாதம்,அதிக வாமிட் இருக்கு சாப்பிட்டால் உடனே வந்துவிடுகின்றாது.இல்லைன்னாலும் வெறூம் எச்சிலாவது வருதுப்பா.என்ன செய்யலாம்?முதல் குழந்தைக்கு மூன்றாம் மாதம் துவங்கி பிறக்கும்வரை வாமிட் இருந்தது.....
குழந்தையின் எடைகூட,ஆரோக்யமாக இருக்க என்ன சாப்பிடலாம்?அனுபவம் உள்ளவர்கள் கூறவும்.....

மீண்டும் என் வாழ்த்துக்கள். நல்லபடியாக பிள்ளை பெற்றெடுக்க பிராத்தனைகள். இந்நேரத்தில் உங்களூக்கு ஓய்வு தான் வேண்டும். இன்னும் சில மாதம் கழித்து தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுவும் முறையாக மருத்துவமனையில் கற்று கொண்டு செய்யுங்கள். இப்படி கேட்டதை வைத்து செய்தால் அது இந்த நேரத்தில் ஏதும் பிரெச்சனை உண்டாக்கலாம். இது என் அபிப்ராயம்.

நல்ல ஆரோக்கியமான உணவா சாப்பிடுங்க. நிறைய மாதுளை, பேரீச்சை, அத்தி பழம், ஆரஞ்சு சேருங்க. தினம் ஒரே ஒரு வாழப்பழம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டா இச்லருக்கு சுகர் கூடும், எடை கூடும். தினம் ஒன்னே ஒன்னு சாப்பிட்டா உங்களுக்கு இது போல் நேரத்தில் மலச்சிக்கல் வராம இருக்கும்.

வாந்தி வரும் போது எலுமிச்சை கசக்கி ஸ்மெல் பண்ணுங்க... நிக்கும். இல்லைன்னா காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொஞ்சம் தண்ணீர் குடிங்க... கொஞ்ச நேரத்தில் வாமிட் வந்துடும். அப்படி வந்துட்டா அதன் பின் நீங்க சாப்பிடும் உணவு வராது. இது எனக்கு மட்டுமில்லை, என் தங்கைக்கும் உதவியது. முயற்சி செய்து பாருங்க.

கவலை, குழப்பம் இல்லாம நிம்மதியா நல்லா இருங்க... ஆரோக்கியமா சுகப்பிரசவம் ஆகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணுகா, எப்படி இருக்கீங்க? என் பெயர் ஆர்த்தி. முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வனிதா சொல்லுவது சரி. உடற்பயிற்சி, டாக்டரை கேட்டு செய்வது தான் நல்லது. எனக்கு 2 குழந்தைகள். இரண்டுமே நார்மல் டெலிவரிதான். நான் சென்ற ஆஸ்பத்திரியில் எனக்கு கர்ப்ப காலத்தில் செய்யக் கூடிய யோகாஸனங்கள் சொல்லிக் கொடுத்தார்கள். அதை ரெகுலராக செய்தேன். இதனால் நார்மல் டெலிவரி ஆகியிருக்கலாம் என்பது என் கருத்து.

ஆனாலும் சிலருக்கு உடல் வாகு, குழ்ந்தையின் நிலை, மற்றும் வேறு சில காரணங்களால் சிசேரியன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனக்கு யோகா சொல்லிக்கொடுத்தவங்க 'இந்த யோகாவை கர்ப்பமாக இருக்கிறவங்களோட உடம்பை பொறுத்து தான் செய்யனும்.' என்று சொன்னாங்க. அதனால் நீங்களும் டாக்டரின் ஆலோசனையை கேட்டு செய்யுங்க. உடம்பை பாத்துக்கோங்க.

என்றும் அன்புடன்,
ஆர்த்தி..

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

வாழ்த்துக்கள் ரேணு.ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு.ஏனென்றால் அறுசுவையில் முதல் நண்பி நீங்கதான்பா.நான் கொஞ்சம் கொழுத்துதான்.5 வருடமாய் டொக்டர் எடை குறைங்க என்றுதான் சொன்னாங்க.குறைத்து குழந்தை உருவான பின் நன்றாக கூடிவிட்டேன்.அத்துடன் நான் சரி சொப்ட் டைப்.ஊசி குத்தினால் கூட அந்த நாள் முழுக்க அழுவேன்.யாரும் நம்பவில்லை.நோர்மல் டெலிவரி ஆகும் என்று.என் பையனின் எடை 4 கிலோ.நான் செய்தது 3 விஷயம்.முதலாவது 5 மாதத்தில் இருந்து ஒரு நாள் விடாமல் நன்றாக நடப்பேன்.அடுத்தது துணிகளை கையால் கழுவுவேன்.அடுத்தது நன்றாக தண்ணீர் உள்ளே இருந்து தலைக்கு குளிப்பேன்.3 வது சொன்னது இருக்கே அது ரொம்ப பயன்படும்.குளிக்கா விட்டாலும் பரவாயில்லை.ஒவ்வொரு நாளும் இடுப்பு நனையும் அளவு தண்ணீரில் இருக்க வேண்டும்.ஹொஸ்பிடல் போற நாளும் நன்றாக தண்ணீரில் ஊறி குளித்துவிட்டு போனால் இலகுவாக இருக்கும்.இடுப்பு விரிந்து கொடுக்கும்.நடையை தவிர மற்ற உடற்பயிற்சிகள் அனைத்தும் டொக்டரின் ஆலோசனையுடன் செய்வதுதான் மிகவும் சிறப்பு.ஏனென்றல,உங்களின் உடல் நிலை குழந்தயின் உடல் நிலை அவருக்குதான் தெரியும்.மற்றபடி 7 மாதத்தின் பின் நன்றாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் சுகப்பிரசவத்திற்கு உதவியாய் இருக்கும்.உங்களுக்கு சுகப்பிரசவமாய் அழகான ஆரோக்கியமான குழந்தை கிடைக்க எனது பிரார்த்தனைகள்.(((ஜிலு ஜிலு கூல் கூல்ண்டு சொல்றப்பவே நினைத்தேன்.சும்மா ஜோக்தான் தப்பா எடுக்காதிங்க ப்ளீஸ்)))

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

வனி,ஆர்த்தி,ஷிமி:
அனைவரின் வழ்த்துக்களுக்கும் நன்றி......

வனி: எனக்கும் சரியான ஆசிரியர் இல்லாமல் யோகாவோ,உடற்பயிற்சியோ செய்வதில் குழப்பம் இருந்தது.இருந்தாலும் நார்மலான ஆரோக்ய உடலுக்கு என பயிற்சிகள் இருக்குமல்லவா அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம்..

ஆர்த்தி:
நன்றி வாழ்த்துக்களுக்கு,முதல் டெலிவரி,நாரமல் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. இரண்டாம் கட்டத்தில் இருந்தேன் ,வலியும் விட்டுவுட்டு இருந்தது.திடீர்னு பையன் மோசன் போய்ட்டான்.அதனால் ரிஸ்க் எடுக்க வேணாம்னு சிசரியன் ஆயிடுத்து.
வாக்கிங் நிறைய போவேன்ப்பா......இப்ப பெரியவனை பள்ளியில் விட்டு அழைத்துவருவது நாந்தான்.இங்கு யாரும் இல்லை அனைத்து வேலைகளும் நாந்தான்.என்ன இங்கு(ஊட்டி)குளிர் அதிகமென்பதால் பெரியவன் பிரந்ததும் வாசிங் மெஷின் வாங்கியாச்சு.துவைப்பது மட்டும் அதில்தான்..

ஷிமி:
மிக்க நன்றீ,உன் முதல் தோழி நாந்தானா...?சந்தோஷம் ,பையன் எப்படி இருக்கான்......நீ சொன்ன 3 விஷயங்களில் 2 நான் பண்ணியிருக்கேன்,பண்ணிடுவேன்..இந்த மூன்றாவது குளியல் இருக்கே அதைப்பற்றி கேள்விபட்டுள்ளேன்.ஆனால் செய்ததில்லை.எப்படின்னு கொஞ்சம் விரிவா சொல்மா......
ஓஹோ என்னை இவ்வளவு கிண்டல் பண்ரியா.......அங்க ஒன்னுமில்லை.இங்க ஊட்டி வந்துதான்......:)
நான் அடுத்த முறை டாக்டரைப் பார்க்கும்போதுதான் உடற்பயிற்சிகள் பற்றி கேட்கவேண்டும்ப்பா.......

ஹாய். நாந்தான் பா ராதா. கொஞ்ச நாளா சைலண்ட் ரீடரா இருந்துட்டு போனேன். அப்புறம் இப்போ நான் 4 மாதம் கர்ப்பமாக உள்ளேன். ஆனால் ஹீமோகுளோபின் 8.6 தான் உள்ளது. என்ன செய்வது. எனக்கு முதலில் இருந்து வாமிட் இல்லை. ஆனால் இப்போது ஒரு வாரமாக வாமிட் வருகிறது. கால்கள் இரவில் இழுக்கிறது. என்ன செய்வது? ராதா சுவாமினாதன்

ராதா சுவாமினாதன்
உங்கள் ஹீமோகுளோபின் லெவலை அதிகரிக்க இரும்புசத்து உள்ளவற்றை சாப்பிடவேண்டும்.
தினமும் பேரிச்சம்பழம் 10 சாப்பிடுங்கள்,
வாழைப்பழம் சாப்பிடலாம்,
மாதுளை சாப்பிடலாம்,
முருங்கைக்கீரை சாப்பிடலாம்,
முருங்கை சூப் பருகலாம்.
இவை உங்கள் HP லெவலை அதிகரிக்கும்..

முருங்கைக் கீரை சூப் :
***********************************
முருங்கைக்கீரையை உருவியபிறகு அதன் குச்சிகளை சிறு துண்டுகளாக நறுக்கி,அதனுடன் 4டம்ளர் தண்ணீரும்,மிளகு கொஞ்சம்,மஞ்சள்,சீரகம்,கொத்தமல்லி இழை,பூண்டு 2, சின்ன வெங்காயம் 2 (தட்டிப்போடவும்),உப்பு,இவற்றை கலந்து கொதிக்கவைத்து 1அல்லது ஒன்னரை டம்ளராக சுண்டவிட்டால் முருங்கை சூப் ரெடி....
இதை இளம் சூட்டில் குடித்தால் கசப்பு இருக்காது.........
இதை தினமுமோ,ஒருநாள் விட்டு ஒருநாளோ குடித்துவந்தால்
அடுத்த கன்சல்ட்டிற்கு டாக்டரிடம் போகும்போது அவரே ஆச்சரியப்படுவார்......
கண்டிப்பாக HP லெவல் உயரும்.....இது என் அனுபவம்......
.பீட்ரூட் காரட் ஜூஸ்,மாதுளை ஜூஸை குடிக்கலாம்.....
வாழ்த்துக்கள்ப்பா குட்டிப்பாப்பாவிற்கு....

முதலில் தேங்க் யூ. அப்புறம் எனக்கு முதல் பாப்பா வயிற்றில் இருக்கும் போது HP லெவல் 11 - ஆக இருந்தது. இப்போது அப்படி இல்லை. நீங்க சொன்ன மெத்தட் எல்லாம் இனி டிரை பண்றேன். மறுபடியும் தேங்க் யூ. ராதா சுவாமினாதன்

மேலும் சில பதிவுகள்