குதி கால் வலி

மூன்று மாதங்களாக குதிகால் வலி பாடாய் படுத்துகிறது ,
யாரேனும் வலி சரியாக வீட்டு வைத்தியம் சொல்லுங்களேன் ப்ளீஸ்

பாரதி, குதிகால் வலித்தால் சில சமயம் உடலின் எடை தான் காரணமாக இருக்கும். நமது உடலில் அந்த சின்ன பாதம் தான் முழு எடையையும் தாங்குது அதனால எடை கூடினால் கண்டிப்பாக வலிக்கும். நமது வயதுக்கும், உயரத்துக்கும் ஏற்ற எடை இருந்தால் நல்லது. அதனால் எடை குறைக்க முயற்சி செய்யுங்க, அப்புறம் ரொம்ப நிற்கிறமாதி வேலைகளோ, நிற்கவோ செய்யாதீங்க.
கண்டிப்பாக டாக்டரை பாருங்க வேற ஏதாவது பிரச்சனை என்றால்...

பாரதி..
கண்டிப்பாக உடல் எடை தான் காரணம். குறைக்க முயற்சி செய்ங்க. செருப்பு கடைகளில் MCR செருப்பு கிடைக்கும். வாங்கி வீட்டிற்குள்ளும், வெளியிலும் பயன்படுத்துங்க.ரொம்ப வலித்தால் வெந்நீரில் சிறிது நேரம் கால்களை முக்கி வையுங்க.
எனக்கும் முன்னாடி குதிகால் வலி இருந்தது.

கவிதாசிவகுமார்.

anbe sivam

மேலும் சில பதிவுகள்