காலிப்ளவர் கிரேவி

தேதி: July 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (7 votes)

 

காலிப்ளவர் - சிறியது
பட்டாணி - ஒரு கப்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள்
தயிர் - ஒரு கப்
அரைக்க:
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 6
சீரகம் - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
பட்டை - 1
கிராம்பு - 3
இஞ்சி - சிறுத் துண்டு
பூண்டு - 5


 

அரைக்க தந்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் பொடி வகைகள் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
அதனுள் காலிப்ளவர், பட்டாணி சேர்க்கவும். பத்து நிமிடம் கழித்து தயிர் சேர்த்து இறக்கவும். தயிர் புளிப்பு சுவைக்கு தகுந்த மாதிரி சேர்க்கலாம். தயிருக்கு பதிலாக எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.
காலிப்ளவர் வெந்தபின், இறக்கி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் சுகந்தி எனக்கு கடைசி போட்டோ தான் ரொம்ப ரொம்ப பிடிச்சியிருக்கு நல்லா கலர்புல்லா பண்ணியிருக்கிங்க வாழ்த்துக்கள்

கடைசி போட்டோ... அப்படியே ரெஸ்டாரண்ட்ல கொடுப்பது போல இருக்கு!!! சூப்பர்!!! செய்துட்டு வரேன்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலர்ஃபுல்லா சூப்பரா இருக்கு. தயிர் எல்லாம் போட்டு வித்தியாசமா செய்து இருக்கிங்க. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு சுகந்தி

சூப்பராக இருக்கு. காலிஃப்ளவர், பட்டாணி எல்லாம் ரெடியாக இருக்கு. இன்னிக்கே செய்துடறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

காளிஃப்ளவர் கிரேவிய காமிச்சு வீட்டுக்கு வாங்க வாங்கன்னு கூப்பிடற மாதிரியே இருக்கு;)
நானும் இதேமாதிரிதான் தேங்காய் சேர்க்கிறதுக்கு பதிலா தயிர் சேர்ப்பேன் நல்லா இருக்கும். நாளைக்கே உங்க முறையில செய்துடறேன் ;-)

Don't Worry Be Happy.

சுகந்தி,
காலிஃபிளவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.சுவையான குறிப்பு.வாழ்த்துக்கள்.

சுகந்தி

காலிப்ளவர் என்னுடைய ஃபவரைட். நிரைய பொருட்கள் சேர்த்து வித்தியாசமா செய்திருக்கீங்க...வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுகி நல்ல குறிப்பு ஈசியா இருக்கு செய்துபார்க்கிறேன் வாழ்த்துக்கள்டா

சுகந்தி,

சுவையான குறிப்பு

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி !!!!

அனுஷாராஜ்குமார் - முதல்ல வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி :-)

வனி - கண்டிப்பா பண்ணி பாருங்க, எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க

ரம்யா - தயிர் சேர்த்து இருப்பதால் கொஞ்சம் புளிப்பு கலந்த சுவை, நல்லா இருக்கும். வாழ்த்துக்கு நன்றி

சீதாம்மா - பண்ணி பாத்தீங்களா? எப்படி இருந்துச்சு ன்னு சொல்லுங்க, வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மா

ஜெய் - நீங்க கோயம்புத்தூர் வரும் போது கண்டிப்பா வீட்டுக்கு வாங்க, எல்லாமே பண்ணி தந்துடறேன்

ஹர்ஷா - உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி

லாவண்யா - எனக்கும் காளிப்ளவர் ரொம்ப பிடிக்கும், சீக்கரம் பண்ணிட்டு சொல்லுங்க.

பாத்திமா - ரொம்ப நன்றி மா,

கவிதா - உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இன்று உங்க காளி ஃப்ளவர் க்ரேவி தான் சப்பாத்திக்கு .நன்றாக இருந்தது.நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

2 நாள் முன்னாடி இந்த க்ரேவி செய்தோம் இரவு சப்பாத்திக்கு. எல்லாருக்குமே பிடிச்சிருந்தது. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகி நேற்று இரவு சப்பாத்திக்கு இந்த கிரேவி தான் செய்தேன். நன்றாக இருந்தது.

அன்புடன்
மகேஸ்வரி

super and easy recipe. surely i will try today. thank you very much

all is well