நான் கர்ப்பமா?

எனக்கு போன மாதம் 3 ஆம் தேதி periods ஆனது. 25 நாட்கக்கு ஒரு முறை ரெகுலர் periods (நான் கர்பமாக முயற்சி செய்து கொடு இருப்பதால் periods ஆனதிலிருந்து 9 to 15 நாட்கள் உறவு கொண்டோம்). இன்று வரை 7 நாட்கள் தல்லி போய் உள்ளது. இன்று Home Pregnancy Test செய்தேன். ஆனால் ரிசல்ட் Negative. நான் போலிக் அசிட் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். எனக்கு வாந்தி, மயக்கம் எதுவும் இல்லை. முதுகு மற்றும் தொப்பில் வலி மட்டும் உள்ளது.

நான் கர்ப்பமா? தயவு செய்து உதவவும்.

தோழி,
இன்னும் 5நாட்கள் கழித்தும் பீரியட்ஸ் வரலைன்னா திரும்ப டெஸ்ட் எடுத்துப்பாருங்கள்....போலிக் ஆசிட் டேப்லட்டை தொடர்ந்து சாப்பிடுங்கள்...அதிக வேலைப்பளுவோ,கனமான பொருட்களைத் தூக்குவதோ வேண்டாம்.குளிர்ச்சியானவற்றை சாப்பிடுங்கள்.....
கரு ரொம்ப ஏர்லியரா இருந்தால் டெஸ்ட்டில் தெரியாதாம்.சோ இன்னும் 5நாள் வெயிட் பண்ணுங்க......அதுவரை,பீரியட்ஸ் ஆகாமல் இருந்து தெஸ்ட் நெகட்டிவ்னா தாமதிக்கமல் டாக்டைப் பாருங்கள்........கரு இருந்தால் அதை அவர்கள் வேறு டெஸ்ட்ஸ் மூலம் கன்பாம் செய்வார்கள்.........
மனதை அமைதியாக வைத்திருங்கள்.கணவருடனான தொடர்பு இந்த சமையத்தில் வேண்டாம்....
வாழ்த்துக்கள்...........

மிகவும் நன்றி தோழி ரேணுகா. உங்கள் பதில் மிகவும் ஆறுதலாக உள்ளது.

நாங்கள் ஒரு வருடமாக குழந்தைக்கு முயற்சி செய்து வருகிறோம். மேலும் அவர் வீட்டுல இருந்து Pressure வேற.

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்