நாய்க்கு முடி ரொம்ப கொட்டுது

எங்க வீட்டு நாய்க்கு முடி ரொம்ப கொட்டுது அதற்கு ஏதாது தீர்வு சொல்லுங்க தோளிஸ். எங்க பார்த்தாலும் நாய் முடியா கிடக்கு எங்க நாய் வெளில இருக்காது எப்போ பார்த்தாலும் வீட்டு உள்ள தான் திரியும் ஏதாவது சரி செய்ய வழி இருந்த சொல்லுங்க plz
by Elaya.G

நாய் குட்டிகளுக்கு உப்பு போட்டு உணவு வைக்காதீங்க, அதனால் முடி கொட்டும் என்று சொவாங்க. நல்ல வெட்னரி க்லீனிக் போய் காட்டுங்க, உடனே தீர்வு கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க உடனடி பதிலுக்கு ரொம்ப நன்றி வனி அக்கா உப்பு போட்டு தான் சாப்பாடு வைப்போம் இனிமே போடவேண்டானு சொல்லிடுறேன் by Elaya.G

இளையா நாய் குட்டிக்கு உப்பு போட்ட சாப்பாடு வைக்ககூடாதுப்பா,அது இல்லாமல் 6 மாதத்துக்கு ஒரு முறை இப்படித்தான் முடி கொட்டும்.
நீங்க தினமும் காலையிலும்,இரவிலும் நாய்குட்டிக்கு முடிய நல்லா சீவி விடுங்க
VITABEST குடுங்க.(இது மீன் எண்ணெய் மருந்து) முடி கொட்டுவது குறையும்,நாங்க அதான் கொடுக்கிறோம்.
முடி நல்லா சைனிங்கா வளரும்.OSTOPET இதுவும் குடுங்க .
என்ன dog வச்சிருக்கீங்க??

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்க பதிலுக்கு மிக்க நன்றி நாட்டு நாய் தான், நல்ல கொலு கொழுன்னு இருக்கும் இந்த மருந்துலாம் எங்க கிடைக்கும் by Elaya.G

இளையா இந்த மருந்துலாம் மெடிக்கல் ஷாப்ல கிடைக்கும் பா vedக்குன்னு கேட்கனும். நாய்க்குன்னு சொல்லி கேளுங்க இளையா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்