ஐலெட் தையல்

தேதி: July 8, 2011

4
Average: 3.4 (7 votes)

 

விரும்பியநிற எம்பிராய்டரி நூல்
ஊசி
ப்ரேம்

 

ப்ரேமில் துணியை பொருத்தி படத்திலுள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
விரும்பியநிற நூலை ஊசியில் கோர்த்து முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். வரைந்த டிசைனில் அடிவழியாக ஊசியை விட்டு மேல் நோக்கி இழுக்கவும். வரைந்த கோட்டின் மேலே ஊசியால் மிகச்சிறிதளவு துணியில் குத்தி பின்பக்கமாக இழுக்கவும்.
அடுத்த தையலை போடும்போது பின்பக்கமாகவே நுழைத்து தையல் போட்டுக் கொண்டு வரவும். இதனை பேக் ஸ்டிட்ச் என்று அழைப்பர்.
ஆரம்பித்த முதல் வரி முழுவதும் போட்டு முடித்து நடுவில் ஊசியால் ஓரளவு சிறிய துளையாக இட்டுக் கொள்ளவும்.(ஓரங்களில் சுற்றி தைக்கும்போது பெரிய துளையாக வந்துவிடும்)
மேல்பக்கம் உள்ள ஊசியை அந்த துளையின் வழியாகவிட்டு, அடிவழியாக கொண்டு வரும்போது முதலில் போட்ட பேக் ஸ்டிட்ச்சையும் சேர்த்து நடுவில் உள்ள துளையில் விடவும். இதுப்போல் சிறிய துளையில் விட்டு விட்டு அந்த வட்டத்தை சுற்றி தையல் போட்டுக் கொள்ளவும்.
தையல் போட்டு முடித்ததும் பின்பக்கம் திருப்பி தையல் முடிந்த இடத்தில் ஊசியை நுழைத்து ஊசியில் நூலை இரண்டு முறை சுற்றி முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
மீதமுள்ள பூக்களை மேற்சொன்ன முறைப்படி தையல் போட்டு முடிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகா இருக்கு. இப்ப எனக்கு இந்த மாதிரி வேலைக்கெல்லாம் பொறுமை இருக்கிற மாதிரி தெரியல டீம். ஆனாலும் நீங்க பண்ணிக் காட்டி இருக்கிறதால லீவுல கட்டாயம் ஒரு துணியிலாவது போட்டுப் பார்க்கிறேன். (போட்டு முடிஞ்சதும் எப்படியாவது உங்கள் பார்வைக்கு வரும்.) ;)

‍- இமா க்றிஸ்

சம கலர் வழக்கம் போல அசத்தல் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு அறுசுவை டீம்,

இந்த டிசைன் இருக்கும் ப்ளவுஸ் துணி, மற்றும் சுடிதார்கள் விரும்பி வாங்குவேன். ஆனா, எப்படி செய்யணும்னு யோசிச்சதில்லை. அழகாக செய்து காண்பித்திருக்கீங்க. பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

ஒரு தடவை படிச்சதுமே நல்லா புரியுது.... மிக்க நன்றி அருசுவை டீம்.

Don't Worry Be Happy.

அறுசுவை டீம்,
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க
வாழ்த்துக்கள்!!!!

என்றும் அன்புடன்,
கவிதா

மிக அழகா எல்லாருக்கும் செய்து பார்க்க கூடியது போல் ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர்.

பள்ளியில் படிக்கும் போது எம்ப்ராயிடரி போட்டது....இதை பார்த்ததும் செய்து பார்க்க ஆசை வந்து விட்டது. விளக்கமும் படங்களும் தெளிவாக இருக்கு. வாழ்த்துக்கள். தொடர்ந்து மற்ற தையல்களையும் சொல்லி கொடுக்கவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிகவும் தெளிவாக இருக்கு. சுடிதார் தைக்க தெரிந்தால் சொல்லிக்குடுங்களேன்.

shagila