பிரசவம் பற்றிய சந்தேகங்கள்

அன்பு தோழிகளே,
எனக்கு இப்பொழுது 9வது மாதம் தொடங்கியுள்ளது,நான் பஹ்ரைனில் உள்ளேன்,இங்கு தான் பிரசவம் பார்க்க உள்ளேன்,எனக்கு முதல் குழந்தை சிசேரியன்,இப்பொழுது 4 வருடங்களுக்கு பிறகு இது 2வது குழந்தை,ஸ்கேன் பண்ணி பார்த்ததில் பெண் குழந்தை என்று தெரிந்தது,எனக்கு முதல் குழந்தைக்கு வலி வருவதற்கு முன்பே சில பிரச்சனைகள் காரணமாக சிசேரியன் பண்ணிவிட்டார்கள்.
இந்த குழந்தைக்கு நார்மல் டெலிவரி விரும்புகிறேன்,நார்மல் வலி எப்படி ஏற்படும்,எந்த பகுதியில் முதலில் ஆரம்பிக்கும் என்று யாராவது கூற முடியுமா தோழிகளே?வலியை எப்படி கண்டுகொள்வது,
மேலும் பெண் குழந்தை என்றால் டாக்டர் சொன்ன நாள் தாண்டிதான் குழந்தை பிறக்குமா?இல்லை யாருக்காவது பெண்குழந்தைக்கு 9வது மாதத்திலேயே வலி வந்திருக்கிறதா?
விவரமாக கூறுங்கள் தோழிகளே பிளீஸ்

//முதல் குழந்தைக்கு வலி வருவதற்கு முன்பே சில பிரச்சனைகள் காரணமாக சிசேரியன் பண்ணிவிட்டார்கள்.// என்று சொல்கிறீர்கள். இம்முறையும் டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வதுதான் நல்லது. //நார்மல் டெலிவரி விரும்புகிறேன்,// என்கிறீர்கள், உங்களைப் பார்க்கும் டாக்டரிடம் இது பற்றிக் கலந்தாலோசியுங்கள். உங்கள் குழந்தை வளர்ச்சி, உங்கள் உடல்நிலை பற்றி அவருக்குத்தான் நன்கு நன்கு புரியும்.

டாக்டர் சம்மதித்தால் வலி வருவதற்குக் காத்திருங்கள். அவரிடம் எப்போ அட்மிட் ஆக வேண்டும் என்பதை விசாரியுங்கள். சிசேரியன் தான் நல்லது என்று அவர் அபிப்பிராயப்பட்டால் நார்மல் டெலிவரிக்குக் காத்திருக்க வேண்டாம். பெண்ணுக்குப் பிரசவம் மறுபிறப்பு மாதிரிங்க. ரிஸ்க் எடுக்க வேணாம்.

//பெண் குழந்தை என்றால் டாக்டர் சொன்ன நாள் தாண்டிதான் குழந்தை பிறக்குமா?இல்லை யாருக்காவது பெண்குழந்தைக்கு 9வது மாதத்திலேயே வலி வந்திருக்கிறதா?// பிரசவம் ஆண் குழந்தைக்கு வேறு மாதிரி பெண் குழந்தைக்கு வேறு மாதிரி என்று இருப்பதில்லை.

உங்களுக்கு நல்லபடி குழந்தை கிடைக்க என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

டியர் இமா உடனே வந்து பதிலளித்ததற்கு ரொம்ப நன்றி,சிசேரியன் தான் என்று டாக்டர் என்னிடம் சொல்லி இருந்தால் நான் இந்த கேள்வியை இங்கு வந்து கேட்டு இருக்க மாட்டேன்,நார்மல் டிரை பண்ணலாம்னு சொல்ல போயிதான் இந்த சந்தேகத்தை கேடேன்,உங்களுக்கு நார்மல் டெலிவரி ஆயிருக்கா இமா?கொஞம் பிரசவ வலி பத்தி தெளிவா சொல்ல முடியுமா இமா?

பழைய பதிவுகள்ல சிசேரியன் பற்றிதான் நிறைய பேர் சொல்லி இருக்காங்க பிரசவ அனுபவங்கள்ல,புதிய தோழிகள் யாருக்கும் நார்மல் டெலிவரி அனுபவங்கள் இல்லையா?

//நார்மல் டெலிவரி ஆயிருக்கா இமா?// ;) மாட்டிட்டேன் நல்லா. ;)) ஆமான்னு சொல்லவா இல்லைன்னு சொல்லவான்னு தெரியல. ;))

//கொஞம் பிரசவ வலி பத்தி தெளிவா சொல்ல முடியுமா இமா?// ;) வேற யாராச்சும் வந்து சொல்லுவாங்க, பொறுங்க.

//யாருக்கும் நார்மல் டெலிவரி அனுபவங்கள் இல்லையா?// நிச்சயம் நிறையப் பேருக்கு இருக்கும், வந்து சொல்லுவாங்க. ஆனா ஒண்ணு. ஒருத்தர் மாதிரி இன்னொருத்தருக்கு இருக்கணும் என்கிறது இல்ல. இங்க சகோதரிகள் சொல்றத ஒரு கைட் லைன் மாதிரி வேணுமானா நீங்க எடுத்துக்கலாம். அப்பிடியே உங்களுக்கும் ஆகும் என்று நினைக்காதீங்க. நார்மல் டெலிவரி என்று டாக்டர் சொல்லி இருக்காங்க இல்ல, பயப்பிடாம இருங்க. எல்லாம் நல்லபடி நடக்கும்.

‍- இமா க்றிஸ்

சகோதரிகளே... மஞ்சுவுக்கு உங்க அனுபவங்களைச் சொல்லி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன் ப்ளீஸ்.

‍- இமா க்றிஸ்

நார்மல் டெலிவலியானது நமக்கு மாதவிடாயின் போது வலிக்கும் வயிற்று வலி போல் தான் விட்டு விட்டு வலிக்கும் ஆரம்பத்தில் வலி மெதுவாக இருக்கும் போக போக வலி அதிகரிக்கும். ஆண் குழந்தைதான் சீக்கிரமே பிறக்கும் என்பார்கள் பெண் குழந்தை டாக்டர் சொன்ன தேதிகிட்டதான் பெரும்பாலும் பிறக்கும் உங்களது நார்மல் டெலிவரிகு எனது மனமார்ந்த பிராத்தனையும் வாழ்த்துக்கள்ம்.

எனக்கு இரண்டு பிள்ளைகளும் சுகப் பிரசவம்தான்(நார்மல் டெலிவரி).

எனது அனுபவத்தைப் பகிர்கிறேன். ஆனால் இமா சொன்னதுபோல் இது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

எனக்கு குழந்தைப் பேறு மருத்துவர் குறித்திருந்த நாள் டிசம்பர் 24 முதல் 27.

23ம் தேதி மருத்துவரிடம் எனது வழக்கமான செக்கப் இருந்தது.அதுவும் இரவு 9 மணிக்கு. மருத்துவர் அப்போது கூட கணிக்கவில்லை, சரியான நேரத்தை.

24ம் தேதி காலையில் சிறிது ரத்தப்போக்கு மிகவும் சிறிதாக இருந்தது. மருத்துவரை அழைத்து எனது அத்தை (அப்பாவின் தங்கை- இவர்தான் எனது பிரசவத்தின் போது கவனித்துக் கொண்டவர்) தெரிவித்தார். அவர் உடனே மருத்துமனை வர வேண்டாமெனவும், வலி மிகச் சிறிய இடைவெளியில் இருக்கும்போது வந்தால் போதும் என்று கூறிவிட்டார். அதுவரைக்கும் வழக்கம் போல் இருக்கச் சொல்லிவிட்டார். சும்மா உட்காராமல் நடந்து கொண்டே இருக்கச் சொன்னார். கால் வலிக்க வீட்டினுள் நடந்து கொண்டே இருந்தேன். முதலில் சாயங்காலம் 4 மணி அளவில் வலி தெரிய ஆரம்பித்தது. ஒரு மாதிரி சுருக்கென்று இருந்தது அந்த வலி. பின் அரை மணி நேரத்திற்கு பிறகு அந்த வலி இருந்தது. அன்று இரவு கிறிஸ்துமஸ் என்பதால் அத்தை முறுக்கு போட்டுக் கொண்டிருந்தார். வலி சிறிது அதிகமானது. அதாவது வலி இருக்கும் நேரம் அதிகமாகவும், வலி வரும் இடைவெளி குறையவும் ஆரம்பித்தது. அத்தை பிஸியாக இருந்ததால் அமைதியாக இருந்தேன். அத்தை வேலை முடித்து அடுப்பை அணைத்து ரிஃப்ரெஸ் பண்ணிய பிறகு மெதுவாகச் சொன்னேன். இரவு 8 மணியளவில் மருத்துவமனைப் போனோம். தாதி செக்கப் செய்து விட்டு இன்றைக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றுவிட அத்தையும் துணைக்கு அத்தை மகனும் மட்டும் இருக்க அனைவரும் வீட்டுக்கு சென்றனர். மருத்துவரும் அழைத்து விசாரிக்க தாதி அதையே தெரிவித்தார்.

ஆனால் வலி மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. இடைவெளி மிகவும் குறைந்தது.
பிளட் பிர்ஷர் செக் பண்ணிக் கொண்டேயிருந்தார்கள்.

இரவு 12.30 மணியளவில் பிரசவம் பார்க்கும் அறைக்குள் அழைத்துச் சென்றனர். 1.30 மணிக்கு என் செல்லக் கண்மணிப் பிறந்தாள்.

ரொம்பவே விளக்கமாகச் சொல்லிருக்கிறேன் என நினைக்கிறேன். என் இரண்டாவது டெலிவரியும் இதே போன்றுதான் இருந்தது. எனக்கு எனது அக்கா இப்படி இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் பிறரிடம் வேறு மாதிரி அனுபவங்களையும் கேள்விப்ப ட்டிருக்கிறேன். எதுவாயினும் தெய்வ நம்பிக்கை உள்ளவரென்றால் நன்கு பிராத்தனை செய்யவும்.

எனது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.

இமா உங்களால எனக்கு மிகப்பெரிய உதவி கிடைச்சிருக்கு,உங்க உதவிக்கு ரொம்ப நன்றி,உங்களுக்கு எத்தனை பசங்க இமா?நீங்க எங்க இருக்கீங்க?கீதா உங்களுக்கும் நார்மல் டெலிவரிதானா?எனக்கு பீரியட் நேரத்தில் வலி வராது அதனால பீரியட் வலி எப்படி இருக்கும்னு தெரியாது,உங்களுக்கு ரொம்ப நன்றி
தேன்மொழி,உங்க அனுபவத்தை வரிசையாக சொல்லி இருக்கீங்க எனக்கு ஓரளவுக்கு பிரசவத்தை பற்றிய பக்குவம் உங்களால கிடைச்சிருக்கு,ரொம்ப நன்றி தேன்மொழி,உங்களுக்கு முதல்ல பொண்ணு 2வது பைய்யனா?2பெருக்கும் என்ன வயசு ஆகுது உங்கள மாதிரி அரிதாக சில பேருக்கு தான் 2ம் நார்மல் ஆகுது,ரொம்ப சந்தோசம்.தேன் மொழி உங்களுக்கு குழந்தைகளை குளிப்பாட்ட முதன் முதலாக தெரிந்ததா?இங்க எனக்கு குளிப்பாட்ட உதவிக்கு யாரும் இல்லை,நானேதான் பாத்துக்கணும்.முதல் டெலிவரி இந்தியாவில் இருந்ததால் பிரச்சனை இல்லை,2வதுக்கு இனிமே தான் பழகணும்.

தோழிகள் தங்களோட பிரசவ கால கஷ்டங்களை எப்படி தனியா சமாளிச்சீங்கன்னு வந்து சொன்னீங்கன்னா உங்களை மாதிரியே நானும் என்னைப்போல் வெளிநாட்டில் தனியாக பிரசவத்திற்கு எதிர் நோக்கி இருக்கும் சகோதரிகளும்,மனதாலும் உடலாலும்
எங்களை தயார் செய்து கொள்ள உதவியாக இருக்கும்.எங்களை போன்றவர்களுக்கு,இந்த அறுசுவை குடும்ப சகோதரிகள் தான் துணை எல்லாவற்றுக்கும்.மேலும் தோழிகள் வந்து உதவுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்

--

Eat healthy

ஹாய் ரஷியா,
உங்க அனுபவம் எனக்கு அதிகமான நம்பிக்கையை குடுத்து இருக்கு,நீங்க எந்த நாட்டில் இருக்கீங்க ரஷியா?உங்களுக்கு வலி எதுவும் வராமலேயே இன்றைக்கு டெலிவரி ஆகிடும்னு எப்படி சொன்னங்க ரஷியா?இங்க டாக்டர் எனக்கு நார்மலுக்கு சான்ஸ் இருக்குன்னு சொல்லி இருக்கங்க,ஆனால் என் கணவர் தான் டாக்டர்கிட்ட சிசேரியன் பண்ண சொல்லி இருக்காரு,ஏன்னா அவருக்கு என்னால வலி தாங்க முடியாதுங்கற பயம்,ஆனால் எனக்கு நார்மலுக்கு தான் விருப்பம்.

நான் பஹ்ரைன் ல இருக்கேன் மஞ்சு . எனக்கு pcod problem இருக்கு . உங்க கேள்விக்கு என்னால பதில் போடா முடியாது . trying for baby
பஹ்ரைன் பாரத்துடனே பேச தோனுச்சு . எந்த hospital ல நீங்க பார்க்குறீங்க ... நான் KIMS ல ற்றேஅத்மேன்ட் எடுக்குறேன் .

மேலும் சில பதிவுகள்