இருமல் .பதில் சீக்கிரம் சொல்லுங்கள் .உதவியாக இருக்கும்.

எனக்கு 8 மாத குழந்தை இருகின்றாள்.அவளுக்கு இருமல் 2 நாளாக உள்ளது.என்ன செய்வது தோழீஸ்.

சுமதி

பால் மிளகுமஞ்சள்தூள் பனங்கல்கண்டு போட்டு இளம் சூடாக குடுக்கவும்

http://www.google.co.in/#hl=ta&q=%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D&oq=%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0
இந்த லின்க் பார்க்கவும்

குழந்தையின் சுவாச குழாயில் எதாவது இன்பெக்ஷன் இருந்தால் தான் இருமல் வரும். அதனால் அவர்களுக்கு வறண்டு போகாமலும் டிஹைட்ரெட் ஆகாமலும் இருக்க நிறைய ப்ளுயிட்ஸ் (ஜூஸ், தண்ணீர், சூப்) கொடுக்கவும். குழந்தையை படுக்க வைக்கும் போது சிறிய தலையணை போட்டு படுக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சூடு நீர் வைத்து அதில் இரண்டு சொட்டு விக்ஸ் போட்டு குழைந்தையின் அறையில் வைக்கவும். (பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் )

குழந்தைக்கு ஏற்க்கனவே சளி இருந்ததா? அவங்களுக்கு சிறிதளவு தேன் கொடுக்கவும். குடிக்க வெது வெதுப்பான தண்ணீர் கொடுக்கவும். (உங்களின் மருத்துவர் குழந்தைக்கு தேன் எதுவும் தர வேண்டாம் என்று ஏதாவது கூறியிருந்தால் தராதீர்கள்)

பசரியா ......பரவாயில்லை இப்பொழுதெல்லாம் நீங்கள் தான் கூப்பிட்ட குரலுக்கு முதல் ஆளாய் ஓடி வரீங்க.....சபாஷ்..கீப் அப் தி குட் வேர்க்...நீங்க கொடுத்த லின்க்கை சரி பார்க்கவும்......திறந்தால் டப்பா டப்பாவாக வருது......அதுவும் இல்லாமல் உங்களால் முடிந்தால் என்ன குறிப்பு என்பதை உங்களின் சொந்த கருத்துக்களால் சொன்னால் நன்றாக இருக்கும். அப்பொழுது தான் அது சேர வேண்டியவர்களுக்கு உரிய நேரத்தில் போய் சேரும்.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி ரபி, லாவண்யா .

@ லாவண்யா : இப்போது தான் சளி பிடித்து உள்ளது.தேன் தினமும் கொடுகீரேன் .ஆப்பிள் வேக வைத்து கொடுதேன்.வெதர் டல்லா இருக்கு.சளி பிடித்து விட்டது.நீங்கள் சொன்னதை செய்து உள்ளேன்.தன் நன்பிக்கை வந்து உள்ளது.நன்றி.

இப்பொழுது தான் குழந்தைக்கு சளி பிடித்துள்ளதா.....அப்படீனா கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சளி மூக்கிலிருந்து வடியும் வரையில் நமக்கு கஷ்டம் இல்லை.....மார்பு சளி கட்டிக் கொண்டால் தான் பிரச்சனை. ஒரு அங்குல துண்டு இஞ்சி எடுத்து கழுவி தோல் சீவி தட்டி அரை க்ளாஸ் தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்கவிடவும். பாதியாக சுண்டியவுடன் ஆறவைத்து மிதமான சூட்டில் தேன் கலந்து குழந்தைக்கு தரவும். இது சளியை முறிக்கும். மார்பில் சளி கட்டிக் கொண்டால் ஒரு ஸ்பூனில் தேங்காய் எண்ணெய் எடுத்து ஒரு துளி கற்பூரம் சேர்த்து சூடு செய்து மிதமான சூட்டில் குழந்தையின் மார்பில் முதுகில் கழுத்தில் மூக்கின் மேல் தடவும். அது சளியை கரைக்கும். துளசி மற்றும் கற்பூரவள்ளி இலை கிடைத்தால் சாறு பிழிந்து ஒரு பத்து சொட்டு கூட கொடுக்கலாம். சுடு நீரில் விக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் தெரியும். அடிக்கடியும் தேன் கொடுக்காதீங்க. சூடு தான். குழந்தை இரும்பினால் மட்டும் அரை ஸ்பூன் கொடுக்கவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தப்பாக நினைக்காதிங்க... ஒரு வயதுக்கு முன் குழந்தைக்கு தேன் தருவது நல்லதல்ல.......இங்கு U.S -ல் தேன் வாங்கும் போது பாட்டிலிலேயே ஒரு வயதுக்கு முன் தர வேண்டாம்(Don't feed honey to children under one year of age) என போட்டு இருப்பதை பார்த்துள்ளேன். மேலும் என்னுடைய டாக்டரும் எனக்கு சொல்லிய அட்வைஸ் இது.....ஏன் தரக்கூடாது என்பதை கீழ்க்கண்ட லிங்க்ஸ் பார்த்து தெரிந்து கொள்ளுங்க..........

http://kidshealth.org/parent/question/infants/honey_botulism.html

http://www.squidoo.com/honeydanger

உள்ளங்காலுக்கு விக்ஸ் தடவி சாக்ஸ் போட்டு விடுங்க....லாவண்யா சொன்னது போல நிறைய Liquids குடுங்க........... சீக்கிரம் குணமடைவாள்...... பயப்படாதீங்க..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

இங்கே அமெரிக்காவில் எல்லாமே வேற தான் :( நாம் இங்கு குழந்தைகளுக்கு தேன், பால், நட்ஸ் என்று பலவற்றை கொடுப்பதில்லை. இது என்னங்க பபுள் பாத் அடிக்கடி உஸ் பண்ணினாலும் அபாயம் என்று தான் இவர்கள் சொல்லுவார்கள். அங்கே சளி இருந்தால் வாழைபழம் அல்லது திராட்சை தர மாட்டோம் இங்கே அதற்க்கெல்லாம் இடம் உண்டு.

ஆனாலும் இந்தியாவில் இதற்க்கெல்லாம் தடை இல்லை....அதுவும் இல்லாமல் இந்தியாவில் குழந்தைக்கு கஷாயம் கொடுத்த பின்னர் நாவில் தேன் தடவி விடுவர். அதனால் தான் நான் அவர்களுக்கு உங்களின் மருத்துவர் அந்த மாதிரி தேன் எதுவும் தர வேண்டாம் என்று கூறியிருந்தார் என்றால் தராதீர்கள் என்று சொல்லியிருந்தேன். அதவும் இல்லாமல் குழந்தைக்கு ஒத்துக் கொண்டால் ஒன்னும் பிரச்சனையே இல்லை. சுமதி அவர்கள் குழந்தைக்கு இதற்க்கு முன்னருமே தேன் தந்திருப்பதால் ஒன்னும் பயம் இல்லை தான் என்று நான் நினைக்கிறேன்.

சுமதி ஒன்றும் குழப்பிக் கொள்ளாதீர்கள். தேன் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருப்பின் உங்களின் மருத்துவரிடம் ஒரு முறை கேட்டுக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அனைவருக்கும் நன்றி.இப்போது இருமல் குறைந்து விட்டது.

மேலும் சில பதிவுகள்