முட்டி கறுப்பு மாற

என் குழந்தைகு 8 மாதம் ஆகிரது. என் குழந்தைக்கு முட்டி கறுப்பாக உள்ளது. என்ன செய்வது.

குழந்தை தவிழ்கிறார் இல்லையா..அதனால்தான் முட்டி கருமையா இருக்கும். எழுந்து நடக்க ஆரம்பித்ததும் கருமை மறைந்திடும்.

குழந்தைக்கு ஆயில் போட்டு மசாஜ் பண்ணி பிறகு கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு, பால்பவுடர் அல்லது பால் கலந்து குளிக்க வையுங்கள். குளித்ததும் மாய்ஸ்ட்ரைசர் போட்டு விடுங்கள்.

Don't Worry Be Happy.

மிகவும் நன்ட்றி ஜெய, என் குழந்தை பிறக்கும் போது மிகவும் கலர் ஆக இருந்தாள். ஆனால் இப்போது முகம் ம்ட்டும் கலர் ஆக உள்ளது. என் குழந்தை கலர் ஆக மாற என்ன செய்ய வேண்டும். என் குழந்தைக்கு வறண்ட சருமம் வேறு. என்ன செய்வது.

சீதா,

குழந்தைகள் தவழும் போது முட்டி கொஞ்சம் கறுத்து விடும் நாளடைவில் சரியாகும்..
பாப்பா தவழும் போது soft socks ..கொண்டு முட்டி வரை மாட்டி விடலாம்.முட்டி கருமை மாற பாலேடு,மஞ்சள் கலந்து பூசலாம்.சிரிப்பு போலே இருந்தால் துளசி,புதினா சாறு எடுத்து தடவலாம்..

குளிக்க வைக்கும் போது தேங்காய் எண்ணெய் அல்லது olive எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கலாம்.

என்றும் அன்புடன்,
கவிதா

தாங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி உமா. லேட் ஆக பதிவு போட்டதற்க்கு மன்னிக்கவும். நான் ஆகஸ்டுவில் ஊருக்கு செல்கின்றோம். என் கணவர் மிகவும் கலர் ஆக இருப்பார். நான் பொது நிறம். ஊரில் இருக்கும் போது அனைவரும் என் குழந்தையை கறுப்பு என்று கிண்டல் செய்தனர். நான் அவர்களை திட்டுவேன் . ஆனால் ஒரு தாயாய் நான் மிகவும் வருத்த பட்டேன். என் குழந்தை கலர் ஆக என்ன செய்ய வேண்டும்.

மேலும் சில பதிவுகள்