பைனாப்பிள் பாஸந்தி

தேதி: June 11, 2006

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 2.5 கப்
துருவிய பைனாப்பிள் - 3/4 கப்
சர்க்கரை - 5 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
அலங்கரிக்க 1/4 கப் பைனாப்பிள் (சிறு துண்டுகளாக)


 

குங்குமப்பூவை 3 டீஸ்பூன் பாலில்(மிதமான சூடு) ஊற வைக்கவும்.
மீதம் உள்ள பாலை வாயகண்ட பாத்திரத்தில் காய்ச்சவும்.
பாலை கிளறிக்கொண்டேஇருக்கவும், பால் பாதியாகும் வரை கிளறவும்.
குங்குமப்பூவையும் ஏலக்காயயையும் பாலில் சேர்த்து, நன்றாக கிளறி ஆறவைத்து பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
துருவிய பைனாப்பிளுடன் சர்க்கரை சேர்த்து 5 - 6 நிமிடம் கொதிக்க விடவும்.
சர்க்கரை நன்றாக கரையும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
நன்றாக ஆற வைக்கவும். ஆறியபிறகு இந்த கலவையை பாலுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
நன்றாக ஆறவைத்து, பைனாப்பிள் துண்டங்களை இந்த கலவையில் மேல் அலங்கரித்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்