கொடம்புளி

கொடம்புளி போட்டு குழம்புவைத்தால்சாதாரண புளீபோலைர்க்குமா அல்லது ருசியில் வேறுபடுமா எவை எவைக்குச் சேர்க்கலாம் உடம்பு இளைக்குமாமே

சுவையில் சிறிய அளவில் மாற்றம் தெரியும். கொலஸ்ட்ராலைக் குறைக்கும். கேரளாவில் பிரசித்தம்.

குழம்புகளில் சேர்க்கலாம். புளி கரைப்பது போலல்லாமல் அப்படியே போட்டு விட வேண்டும்.

கேரளாவில் மீன் குழம்பில் சேர்த்து சாப்பிட்டுருக்கிறேன். நல்ல சுவையாக இருந்தது.

பதில் குறிப்புக்கு மிகவும் நன்றி தெரெசா தேன்மொழி

கொறுக்கா / கொறுக்காப்புளி என்று தான் எங்கள் பகுதியில் சொல்வோம்.

தேன் சொன்னதுபோல்... முழுவதாகக் கழுவி விட்டு மீன் குழம்பில் சேர்ப்போம். கறி சமைத்தானதும், குழம்பில் போதுமான அளவு புளி ஊறியதும் இவற்றை எடுத்து விட வேண்டும். அப்படியே விட்டு வைத்தால் புளிச்சுவை அதிகரித்துவிடும்.

'வாதம்' இருப்பவர்கள் சமையலில் பழப்புளியைத் தவிர்த்து அதற்குப் பதிலாக கொறுக்கா சேர்க்கலாம் என்பார்கள்.

‍- இமா க்றிஸ்

நல்லது இமா ஓ அப்படியா ரொம்ப நன்றி இமா நீங்க இதுதான் டெய்லி யூஸ் பண்ணுவீங்களோ ந்யூஸிலாந்தில கிடைக்குமா

டெய்லின்னு இல்லைங்க. எப்போ மீன் குழம்பானாலும் இதுதான் சேர்க்கிறது. இங்க இலங்கை இந்தியக் கடைகளில் கிடைக்குது. இப்போ 'பல்ப்' பாட்டில்ல கூட கிடைக்குது. ஆனா நான் வாங்கினது இல்லை.
(உங்க பேரை சரியாத் தட்டுறேனான்னு தெரியல. தப்பானா சொல்லிருங்க, திருத்திக்கறேன்.) ;)

‍- இமா க்றிஸ்

நன்றி.

இதன் தாவரவியல் பெயர் கார்சீனியா கம்போஜியா.

இமா சொன்னதுபோல் கொறுக்காய்ப்புளி என்பதுதான் தமிழில். கொடம்புளி மலையாளம்.

வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்து.

அண்ணன் ரிசர்ச் பண்ணினார். கொலஸ்ட்ரால் குறைக்க உதவும் என்று சொன்னார்.

நன்றிப்பா உங்களுடய குறிப்புகளுக்கு

இதனை மீன் குழம்புக்கு மட்டும் தான் பயன்படுத்துவோம்...குறிப்பாக குட்டி மீன் வகைகளுக்கு வாளம்புளியும்(நம்ப புளி) பெரிய மீன் வகைகளுக்கு கொடம்புளியும் பொருத்தமாக இருக்கும்..இது கேரள முறையிலான குழம்பில் பயன்படுதினால் சுவையாக இருக்கும்.என்னுடைய குறிப்பில் தந்துள்ள மீன் குழம்பில் கூட சாதா புளியை தந்திருந்தாலும் அதற்கு பதில் இரண்டு மூன்று கொடம்புளி தான் சேர்ப்பேன்

Hai everybody how are you? pls give the information.
ஹை, என் பெயர் விஜி. நான் சிங்கப்புர்-ல இருக்கிரன். இங்க எங்க கொடம்புலி கிடைக்கும் சொல்ல முடியும தயிவுசெய்து தெர்விக்கவும். i waiting for your.s reple. Thankyou.

இமாம்மா,தேன்,தளிகா, கொடம்புளியை இப்படிதான் பயன்படுத்தனுமா? இது தெரியாம நான் லூஸ்தனமா எப்பவும் ஊறவைக்கிற நம்ம புளியை மாதிரி நினைச்சுட்டு ஊறவச்சேன். திக்னெஸ் வரவே இல்ல.. பேப்பர் சக்கை மாதிரி இருந்தது. இருந்தாலும் அந்த புளிதண்ணியையும் எடுத்து ஊத்திட்டோம்ல ;) கணவரின் மலையாள நண்பர் ஒருவர் கேரளா போய் வந்தபோது வாங்கி வந்தார். அதை பயன்படுத்த தெரியாமல் அன்றோடு மடித்து வைத்துவிட்டேன். இன்று உங்களின் பதிலை பார்த்து தெரிந்து கொண்டேன். அடுத்து எங்க வீட்டு மீன்குழம்பில்,மீனோடு கொடம்புளியும் நிச்சயம் மிதக்கும் ;)) விளக்கமளித்த உங்களுக்கு நன்றி.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்