கலாட்டா கிச்சன் சீசன் 2 உள்ளே வந்து பாருங்களேன்

இது கிச்சன் கலாட்டா சீசன் 2 - பகுதி 2

ஹாய் அறுசுவை தோழிகளே சூப்பரா ஒரு புதுபொலிவோடு போன வாரம் தேவி கலாட்டா கிச்சன் சீசன் 2 ஆரம்பிச்சு பிள்ளையார்சுழி போட்டு வச்சுட்டாங்க அதை அப்படியே நாம தொடர்ந்து நடத்திடுவோமா? உங்கள் எல்லோருடைய ஆதரவையும் எதிர்பார்த்து தான் ஆரம்பம் செய்கிறோம் நிச்சயம் வந்து கலந்துக் கொள்வீர்கள் தானே.
இந்த வாரம் நாம் சமைக்க போகும் குறிப்புகள்
சுகந்தி(26) மற்றும் ருக்சானா(48) அவர்களின்
குறிப்புகள் தான்.
முடிந்தால் நீங்கள் செய்யும் குறிப்புகளை ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்து அறுசுவைஅட்மின் @ ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தங்கள் குறிப்பு விளக்கப்படங்களுடன் வரும் நம்ம அறுசுவையில்.
நீங்கள் எல்லோரும் இந்த வாரம் என்னென்ன செய்யலாம் என்று முன்கூட்டியே யோசித்து கொள்ள ஏதுவாக இருக்குமே என்று ஞாயிற்றுகிழமையே ஆரம்பித்து விட்டோம். எல்லோரும் இங்கு வந்து பார்த்து அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்துக் கொண்டு இந்த வார கலாட்டா கிச்சன் சீசன் 2 பகுதி இரண்டை சிறப்பாக நடத்தி தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வாங்க வாங்க எல்லாரும் சேர்ந்து சமைத்து அசத்தலாம், புது புது குறிப்புகள் கற்றுக் கொண்ட மாதிரியும் இருக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போ பார்த்தாலும் ஒரே போல சமைத்து அழுத்து போகாமல் புதுமையான வித்தியாசமான குறிப்புகளை செய்து கொடுத்து பாராட்டுக்களை தட்டி செல்லுங்க.

துவங்கியாச்சா!!! கலக்குங்க... நாளை முதல் நானும் வந்துவிடுகிறேன். ருக்சனா ஆளை காணோம்... வந்துட்டா சமைக்க கொஞ்சம் நல்லா இருக்கும். பார்ப்போம். நம்ம சுகி சமையல் வழக்கம் போல அசத்தும்... சமைத்து அசத்திடலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாழினி...
எனக்கு திங்கள் இரவாகிறது. கணக்குக் கொடுக்க வந்திருக்கேன். ;)
மதியம் சுகியோட பாலக்ரைஸ் சாப்பிட்டேன். டீக்கு ருக்சானாவோட முட்டை பஃப்ஸ். ரெண்டுமே நல்லாருந்துது.

‍- இமா க்றிஸ்

யாழி துவங்கியாச்சா நான் இன்று இரவு சமைக்க ஆரம்பித்துவிடுகிறேன். சமைத்துவிட்டு வந்து என் கணக்கை சொல்கிறேன். இந்த சீசன் வெற்றி கரமாக அமைய என் வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் யாழினி நீங்களே ஆரம்பிச்சுட்டீங்களா. எங்க போனாங்க புதுகணக்குப்பிள்ளை. இமாம்மா புதுசா கலந்து இருக்காங்களே. வெரிகுட் இரண்டு ரெசிப்பி செய்து பார்த்து குறிப்பின் கீழும் கருத்து தெரிவிச்சுட்டாங்க. யாழி ஈவினிங்தான் செய்ய ஆரம்பிக்கனும். செய்தப்பார்த்தப்பின் வந்து சொல்கிறேன். எங்கே மற்ற தோழிகள் எல்லாம் அரட்டையோடு இல்லாமல் கிச்சன் கலாட்டாவிலும் கலந்து கொள்ள வாருங்கள்.

ஹாய் யாழி, கலாட்டா கிச்சன் ஆரம்பிச்சா? வாழ்த்துக்கள் நல்ல பன்னுமா தோழிஸ் எல்லோரும் கலந்துகோங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள்;)

உன்னை போல பிறரையும் நேசி.

கோச்சுக்காதீங்கப்பா. எங்க வீடில சமைக்க ரொம்ப வேலையில்ல்ப்பா. பையனுக்கும் ஸ்கூலிலே சாப்பாடு என்னத்தை பன்ணுனாலும் நாந்தான் சாப்புடனும். .சும்மாவேஎப்படி எடையக்குறைக்கிறதுன்னு தெரியல கலந்துகொள்ள ஆசையாத்தான் இருக்கு. பிறகு கலந்துக்கறேன்

ஹாய் வனிக்கா வந்துட்டீங்களா ம் செய்ய ஆரம்பிச்சுடுங்க, கணக்கு சொல்லுங்க நான் குறிச்சுக்குறேன். ருக்சானா எங்க போனாங்கனு தான் தெரியல வந்துட்டா ரொம்ப நல்லா இருக்கும்.

இமாம்மா ஆஹா ரொம்ப சந்தோஷம் வராதவங்க வந்திருக்கீங்க, ஓகே ஓகே கணக்கு குறித்துக் கொண்டேன் டெய்லி வாங்க எதிர்பார்க்கிறேன்.

ஹாய் ரே வந்துட்டியா? வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிமா. செய்துட்டு வந்து சொல்லு ரே கணக்கு எழுதிடுறேன்

ஹாய் வினோ சீக்கிரம் செய்துட்டு வந்து சொல்லுங்க. தொடர்ந்து கலந்துக்கோங்க

தேவி ஆமாம் ஆரம்பித்துவிட்டேன் நீயும் முடிந்தால் கல்ந்துக்கோமா. எதிர்பார்க்கிறேன்.

பசரியா அப்படியா சரி பரவாயில்லை. சில குறிப்புகள் எல்லாம் ரொம்ப சிம்பிளா இருக்கும் ருக்ஸ், சுகன் ரெண்டு பேருமே அதுபோல குறிப்புகள் கொடுத்து இருக்காங்களே முடிந்தால் செய்து பாருங்க.

ஹாய் யாழ்... போன தடவ மிஸ் பண்ணிட்டேன்... இந்த தடவ வந்து கலந்துக்க போறேன்... நாளைக்கு கணக்கு காட்டறேன்... :)

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

என்னோட கணக்க ஆரம்பிசுக்குங்க... ஓட்ஸ் ஊத்தப்பம் - இன்னிக்கு காலைல... (இன்னிக்கு மட்டும் இல்ல பா.. டெய்லி காலைல ஓட்ஸ் ஊத்தப்பம் தான் என் பிரேக்பாஸ்ட்... இன்னும் எல்லா காயும் போட்டு பண்ணுவேன். இது சுகியோட ரெசிபி நு பத ஒடனே பதிவு போடறேன்.. :-) )
இதை கணக்கு வெச்சுப்பீங்க தான...???

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

எழுதிக்கோங்க யாழி (ஏதோ நான்தான் வின் பண்ணப் போற மாதிரி சொல்றேன்.) ;))
சுகியோட ஸ்டஃப்ட் இட்லி. இது காலைல பண்ணினது. இரவைக்கு ஏதாச்சும் பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்