அமானுஷ்ய அனுபவங்கள்

தோழிகளே, தனி இழை தொடங்கி ரொம்ம்ம்ம்ப நாளாச்சு... அதை நினைச்சு மனசுக்கு ரொம்பவே வருத்தமா போச்சு... அந்த வருத்தம் போக்கவே இந்த இழை... எதுக்குன்னு கேக்கறீங்களா? நீங்க கேக்க மாட்டீங்க நானே சொல்றேன்... நாம் கடந்து வந்த வாழ்க்கையில் ஆங்காங்கே சில அமானுஷ்ய நிகழ்ச்சிகளை சந்தித்திருப்போம். அல்லது மற்றவர் அனுபவங்களை கேள்விபட்டிருப்போம். அது போன்று நீங்கள் சந்தித்த அனுபவங்கள் அல்லது கேட்டறிந்த நிகழ்ச்சிகள் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்களும் கொஞ்சம் நடுநடுங்கி போறோமே... என்ன தோழிகளே நான் சொல்றது? என்ன எல்லாரும் பயப்பட ரெடியா?

தோழிகளே, நம் தோழிகள் இந்த அளவில் ஊக்கத்தோடு பதிவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அறுசுவையில் சமீபகாலமாக கேட்ட கேள்வியையே கேட்டு இழை தொடங்கி கொண்டிருக்கிறார்கள். இதனால் அறுசுவைக்கு வழக்கமாக வரும் பழைய தோழிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பல தோழிகள் அறுசுவைக்கு வராததன் காரணமும் இதுவே. அதற்காக இந்த இழை ஒன்று தான் சரியான தீர்வு என்று நான் சொல்ல மாட்டேன். இது போல வித்தியாசமாக இழைகளை தொடங்கினால் பழைய மற்றும் புது தோழிகளின் ஆர்வமுடன் பார்வையிட்டு அடிக்கடி வருவார்கள் என்று நம்புகிறேன். அதன் அடிப்படையில் தான் இந்த இழை தொடங்க வேண்டியதாகி விட்டது. நீங்கள் மன்றத்தில் தேடிப்பார்த்தால் இதற்கு முன்பு இது போன்ற ஒரு இழை தொடங்கப்பட்டே இராது.

இதில் அனைவரும் கண்டிப்பாக பதிவிட்டே ஆக வேண்டும் என்றோ கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்றோ நான் யாரையும் வற்புறுத்தவில்லை. விருப்பம் உள்ளவர்களும், மனம் திடம் உள்ளவர்களும் வந்து படித்து அவர்களின் அனுபவங்களையும் தாராளமாக பதிவிட்டு போகலாம். நம் தோழிகள் சொல்வதை போல,அவரவர்க்கு வேண்டியதை அவரவர் எடுத்து போகட்டும் அதை விடுத்து, இது இங்கிருந்தால் அனைத்து பெண்களுக்கும், கர்ப்பிணி/மனதிடம் இல்லாதவர்கள் போன்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் எப்படி? அவ்வாறு நினைப்பவர்கள் படிக்காமல் தவிக்கலாமே. அறுசுவைக்கு வருபவர்கள் அத்துணை பேரும் பலவீன இதயம் கொண்டவர்கள் என்று நினைக்க முடியாது.

இந்த இழையை மேலும் தொடர உற்சாகமளித்த நம் அனைத்து அறுசுவை தோழிகளுக்கும், ஊக்கமளித்த அட்மின் அண்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :) பிறகென்ன வாங்க தோழிகளே எல்லாரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்குவோம் :))

ஹாய் தோழீஸ் ,எனக்கு பேய் என்றாலே பயம் இருந்தாலும் இந்த இழையை முழுதும் படித்தேன் ,படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருந்தது இரவு தூக்கம் தான் வரவில்லை,படித்த நமக்கே இப்படி இருந்தால் அனுபவித்தவர்கள் ஐயோ நினைக்கவே முடியல

மேலும் சில பதிவுகள்