அமானுஷ்ய அனுபவங்கள்

தோழிகளே, தனி இழை தொடங்கி ரொம்ம்ம்ம்ப நாளாச்சு... அதை நினைச்சு மனசுக்கு ரொம்பவே வருத்தமா போச்சு... அந்த வருத்தம் போக்கவே இந்த இழை... எதுக்குன்னு கேக்கறீங்களா? நீங்க கேக்க மாட்டீங்க நானே சொல்றேன்... நாம் கடந்து வந்த வாழ்க்கையில் ஆங்காங்கே சில அமானுஷ்ய நிகழ்ச்சிகளை சந்தித்திருப்போம். அல்லது மற்றவர் அனுபவங்களை கேள்விபட்டிருப்போம். அது போன்று நீங்கள் சந்தித்த அனுபவங்கள் அல்லது கேட்டறிந்த நிகழ்ச்சிகள் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்களும் கொஞ்சம் நடுநடுங்கி போறோமே... என்ன தோழிகளே நான் சொல்றது? என்ன எல்லாரும் பயப்பட ரெடியா?

தோழிகளே, நம் தோழிகள் இந்த அளவில் ஊக்கத்தோடு பதிவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அறுசுவையில் சமீபகாலமாக கேட்ட கேள்வியையே கேட்டு இழை தொடங்கி கொண்டிருக்கிறார்கள். இதனால் அறுசுவைக்கு வழக்கமாக வரும் பழைய தோழிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பல தோழிகள் அறுசுவைக்கு வராததன் காரணமும் இதுவே. அதற்காக இந்த இழை ஒன்று தான் சரியான தீர்வு என்று நான் சொல்ல மாட்டேன். இது போல வித்தியாசமாக இழைகளை தொடங்கினால் பழைய மற்றும் புது தோழிகளின் ஆர்வமுடன் பார்வையிட்டு அடிக்கடி வருவார்கள் என்று நம்புகிறேன். அதன் அடிப்படையில் தான் இந்த இழை தொடங்க வேண்டியதாகி விட்டது. நீங்கள் மன்றத்தில் தேடிப்பார்த்தால் இதற்கு முன்பு இது போன்ற ஒரு இழை தொடங்கப்பட்டே இராது.

இதில் அனைவரும் கண்டிப்பாக பதிவிட்டே ஆக வேண்டும் என்றோ கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்றோ நான் யாரையும் வற்புறுத்தவில்லை. விருப்பம் உள்ளவர்களும், மனம் திடம் உள்ளவர்களும் வந்து படித்து அவர்களின் அனுபவங்களையும் தாராளமாக பதிவிட்டு போகலாம். நம் தோழிகள் சொல்வதை போல,அவரவர்க்கு வேண்டியதை அவரவர் எடுத்து போகட்டும் அதை விடுத்து, இது இங்கிருந்தால் அனைத்து பெண்களுக்கும், கர்ப்பிணி/மனதிடம் இல்லாதவர்கள் போன்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் எப்படி? அவ்வாறு நினைப்பவர்கள் படிக்காமல் தவிக்கலாமே. அறுசுவைக்கு வருபவர்கள் அத்துணை பேரும் பலவீன இதயம் கொண்டவர்கள் என்று நினைக்க முடியாது.

இந்த இழையை மேலும் தொடர உற்சாகமளித்த நம் அனைத்து அறுசுவை தோழிகளுக்கும், ஊக்கமளித்த அட்மின் அண்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :) பிறகென்ன வாங்க தோழிகளே எல்லாரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்குவோம் :))

கலாதேவி...
\\தீபா மூச்சடைக்கிறது நீங்க அனுபவித்ததை நினைத்தால்,நிஜமாகவே என்னால் டைப் பண்ணமுடியல, கை நடுங்குது கேட்ட எங்களுக்கே இப்படினா அனுபவித்த உங்களுக்கு ....\\
இதுக்கே மூச்சடைக்குதா....... அடுத்த எபிசொட் போட்டாச்சு பா..... தைரியமா படிங்க.....

ஸ்வர்ணா
\\இருந்தாலும் தகிரியம்தான் தான் உங்களுக்கு.... அப்புறம் என்ன நடந்துதுப்பா நீங்க அதுக்கப்புறமும் ஹாஸ்பிட்டலில் இருந்தீங்களா?//
ஸ்வர்ணா.... நாம ரெண்டு பெரும் பேசிகுற அதே டயலாக் தான் இப்பவும் சொல்றேன்... "நாங்கல்லாம் சுனாமிலேயே சும்மிங்க போடறவங்க" ...... ஹா ஹா ஹா.....
அதுக்கப்பறம் ரெண்டு நாள் அந்த மருத்துவமனையில் தான் பா.... இருந்தேன்...... நான் அதை எதிர்த்ததனால் என்னவோ எனக்கு தைரியம் வந்து விட்டது... அம்மாதான் அங்காங்கே வேப்பிலை விபூதி தூவி, சாமி படம் வைத்து அந்த இடத்தையே மாத்திடாங்க......

சசி
\\உங்க அனுபவம் என்னை உறையச் செய்துவிட்டது. நல்ல வேளை, குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது....\\

நானும் என் குழந்தையை நினைத்து தான்பா அதிகம் பயந்தேன்...... என் பாட்டி சொன்னாங்க, குழந்தையை எந்த தீய சக்தியும் தீண்டாதாம்.... ஏன்னா குழந்தை தெய்வத்துக்கு சமம்மாம்.......

பசரி...
//இறை நம்பிக்கையையும்
தன்னம்பிக்கையையும் தகர்க்ககூடியது//
சகோதரி என்ன இது...... இங்கு யாரும் சாத்தான் வாழ்க என்று சொல்ல வில்லையே...... அப்படி இருக்க இது எப்படி இறை நம்பிக்கையை தகர்க்கும்??...

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இது மாதிரியான அனுபவங்களை சந்திக்க நேரலாம்... அந்த சமயங்களில், மற்றவர் அனுபவத்தில் இருந்து இதை எவ்வாறு சமாளிக்கலாம் என்ற விடை கிடைக்கும்...... அதற்கு இந்த இழை மிகவும் உதவும்.....

கல்யாணத்துக்கு முன் நிச்சயதார்த்தம் செய்வார்கள் இல்லையா, அதுல இருந்து கல்யாணம் ஆகும் வரை கொஞ்சம் ஜாக்கரதையா இருக்கணும்னு சொல்வார்கள்.அப்படி இருக்கும் போது என்னுடைய ஊரில் நடந்த சம்பவம் ஆனால் அதுக்கு ஒன்னும் பயப்பட வேண்டாம்னு சொல்வாங்க..

எனது தெருவில் வசிக்கும் கணேசன் என்பவருக்கு நிச்சயம் ஆன புதிது அவர் எனது வீட்டின் பின் புறம் துணி எல்லாம் துவைத்து காயவைத்து விட்டு இரவு நேரம் ஆகி துணியை எடுக்க சென்றார்..துணியுடன் வந்தவர் பயந்து வீட்டுக்குள் வந்தார் எல்லோரும் என்ன ஆச்சு..என்று கேக்கவும்.துணிகளை எடுத்துட்டு நான் படி ஏறும் போது என்னை யாரோ தொட்டார்கள் அதனால் நான் யார் என்று திரும்பி பார்த்தேன், அங்கே கருப்பு உருவம் உடல் முழுதும் முடியுடன் என்னை தொட்டதை பார்த்தேன் எனக்கு பயம் வந்ததால் ஓடி வந்துவிட்டேன் என்று சொன்னார்.அபோ அங்கே இருந்த பெரியவர்கள் எல்லாம் ஆமாம்பா அது நம்ம சாமிதான் ஒன்னும் செய்யாது நீ நிச்சயம் ஆனவன் என்பதால் உன்னை தொட்டு இருக்குனு சொன்னார்கள்..இதுவரை அந்த இடத்தை பார்த்தாலே எனக்கு அந்த நியாபகம் தான் வரும்.

என் சித்திக்கும் இதே அனுபவம் இருக்கு.அவர்கள் தூக்கமாக இருக்குன்னு கொல்லைபுற வாசல் வெளியில் படுத்து தூங்கிடான்கலாம் அவங்களோட காலை யாரோ இழுத்தது போல அதே உருவத்தை பார்த்ததாக சொல்லி கேட்டு இருக்கேன்.ஒரு பாட்டியும் இந்த உருவத்தை பார்த்து இருக்காங்க..

இதெல்லாம் கேக்கும் போது இன்றும் எனக்கு அங்கே போனால் பயம் தான் வரும்..மனசு பட படன்னு அடித்துக்கொள்ளும்..ஒரு காலத்தில் என் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டு காரவங்கள் அவங்க வீட்டு சுவற்றில் இந்த சாமியை வைத்து கும்பிட்டார்களாம்..அதனால் அது அங்கே இருந்ததாக
சொன்னார்கள்.அந்த சாமி கஷ்டபடுததாதாம்,குழந்தைகளைதான் பயமுருத்துமாம்...(ஆனால் இப்போ கணேசன் உயிருடன் இல்லை உடல் நிலை சரி இல்லாமல் இறந்துட்டார் .அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.)

______________________________________________________________________________

ஸ்வர்ணா தீபா கல்பனா எல்லோரும் ஒரு விதத்தில் பயத்தை உணர்ந்து இருக்கோம் .அது மற்றவர்கள் சொல்லும் போது நமக்கு ஆமாம் என்றுதான் தொன்று ,அனுபவிச்சாதான் அதன் பயம் வெளிப்படும்..

என் பாட்டி வீட்டில் நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது தங்கி படித்தேன் ...அன்றில் இருந்து இன்று வரை
என் பாட்டி.வீட்டில் கொலுசு சத்தம் கேட்க்கும்.அதும் எனக்கு மட்டும்..நான் என் பாட்டியும் ஒரு நாள் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போ யாரோ கேட் திறக்கும் சத்தம் கேட்டது கொலுசு சத்தமும் கேட்டது யாரோ வராங்கனு என் பாட்டிகிட்ட சொல்லி எட்டி பார்த்தேன் யாரும் அங்கே இல்லை தாளிட்ட கேட் திறக்கவும் இல்ல. இன்னைக்கு கூட என் பாட்டி என்கிட்ட சொல்வாங்க என்னவோ அவளுக்கு மட்டும் சத்தம் கேக்குதேன்னு..இதெல்லாம் இப்போதான் ஒன்னொன்னா நினைவுக்கு வருது..சில சமயம் தனியே நான் இருக்கும் போது கூட யாரோ நடக்குற மாதிரி எல்லாம் உணர்ந்து இருக்கேன் நானே சமாதான படுத்திப்பேன்...என்னை யாரோ தாண்டி போகிறது போலவும்,நிழல் போலலாம் தெரியும் ..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இந்த இழையை தொடர்வது குறித்து தயக்கம் எதுவும் வேண்டாம். ஆன்மீகம் மாதிரியான அநாவசியங்களுக்குதான் இங்கே இடம் இல்லை. ஆவி, பேய்கள் மாதிரியான சுவாரசியங்களுக்கு இங்கே இடம் உண்டு. :-) இதை நீங்கள் தொடரலாம். நம்ம கைவசமும் நிறைய சுவாரசியம் இருக்கு. கொஞ்சம் வேலையை முடிச்சிட்டு வந்து ஒவ்வொண்ணா எடுத்து விடுறேன். (இதுக்கு இருக்கிற வரவேற்பை பார்த்தா, ஆவிகளுக்குன்னு ஒரு தனி செக்சனே அறுசுவையில கொண்டு வரலாம் போல இருக்கே.. அதைப் பத்தியும் யோசிக்கிறேன். :-))

புகை உடலுக்கு பகைன்னு சிகரெட் பெட்டி மேலே போடுற மாதிரி, இங்கேயும் கர்பிணிகள், மனம் பலஹீனமானவர்கள் வரவேண்டாம்னு ஒரு எச்சரிக்கையை வேற மேலே கொடுத்துட்டீங்க.. (அப்பத்தான் கண்டிப்பா வருவாங்க..:-)) அப்புறம் இதுக்கு மேலே என்ன வேணும்.

கடைசியா ஒரு விசயம். இந்த மாதிரி விசயங்கள் எழுதறப்ப கொஞ்சம் ஸ்பெல்லிங் எல்லாம் சரி பார்த்து பதிவு போடுங்க. உதாரணமா, மேலே உள்ள பதிவுல "பாட்டி" எல்லா இடத்துலயும் பாட்டியா இல்ல.. அது வேற பயமுறுத்துது.. ;-)

;)) 'அது' வந்து இருக்கோன்னு நினைச்சுட்டு வந்தேன். ம்.. ;)

ஷுஷ்!! குழப்பாதீங்க அட்மின். ;) யாரும் ஸ்பெல்லிங் பாக்காதீங்க. அப்பதான் நான் ஜாலியா சிரிச்சுட்டு இருக்க வசதியா இருக்கும். ;))

‍- இமா க்றிஸ்

அட்மின் அண்ணா, நீங்க இங்கே வந்து இந்த இழை தொடர பெர்மிஷன் தந்தது, சாமியே வந்து வரன் தந்தது மாதிரி இருக்குங்கண்ணா... சந்தோஷம்...

ஆனாலும் உங்க அனத்தலுக்கு அளவே இல்லை போங்க... எங்க அண்ணி எப்படி தான் உங்க கிட்ட சமாளிக்கறாங்களோ ;)))) மேலே ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிச்சீங்க பாருங்க..//பாட்டி// உண்மையாவே சிரிப்பு தான் வருதுங்கண்ணா... திரில்லிங் கதைகள்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கண்டுக்கப்படாது.

நீங்களும் சீக்கிரமா வந்து உங்க கதைகளை எடுத்து விடுங்க.. ஆவலோட இருக்கோம்.. ஆ’ன்னு வாயை பிளந்து கதையை கேக்க :-D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அட்மின் அண்ணா.... உங்க தெளிவான கிரீன் சிக்னலுக்கு ரொம்ப நன்றி...... இனிமேல் நாங்க டபுள் சந்தோஷமா இந்த இழையை தொடர்வோம்....... உங்க சுவாரசியமான அனுபவங்கள் பத்தி சொல்றேன்னு சொல்லி இருக்கீங்க.... சீகரம் வேலையை முடிச்சுட்டு வந்து உங்க பதிவை போடுங்க..... படிக்க நாங்க ஆவலா இருக்கோம்...... :)

இமாம்மா, உங்களையே இந்த இழை இங்கே இழுத்துட்டு வந்துக்குன்னா பார்த்துக்கோங்க.. இது எவ்வளவு பவர்ஃபுல் இழைன்னு.

//;)) 'அது' வந்து இருக்கோன்னு நினைச்சுட்டு வந்தேன். ம்.. ;)//

ஆனாலும் நீங்க அட்மின் அண்ணாவ ‘அது’ன்னு சொல்லி பயம் வேற கிளப்பி விட்டுட்டீங்க.. எனக்கே பயம்மா தான் இருக்கு.. ;)) (ஆஹா... எப்படியோ இன்னைக்கு நம்மாளான ஒரு சின்ன உதவி பண்ணிட்டோம்)

இமாம்மா, நீங்களும் உங்க அனுபவத்தை இங்கே கண்டிப்பா தரனும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

முதல் பதிவுல முதல் 2 வரிய நேத்து நைட் படிச்சதுக்கே எனக்கு நைட்ல ஒரே பயங்கர கனவு.

இன்னைக்கு நைட்டாவது எனக்கு நானே சவால் விட்டு படிக்க முடியுதான்னு பாக்குறேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆம்சு, என் பேரை ஜெபம் மாதிரி சொல்லிட்டே முழு கதைகளையும் படிங்க... பயம் போயே போச்ச்ச்ச் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நேற்றிரவே 11 மணிக்கு எழுத நினைத்தேன்.அப்போது 2 பதிவுகள் மட்டுமே. இன்று பார்த்தால் ஐய்யோ ஐய்ய்ய்ய்யொ. எல்லார்க்கும் பிடிச்சிருக்குபோல எனக்கும்தான்.
2010-ல் எனது மகள் 3 மாத குழந்தையாக தொட்டிலில் தூங்கும்போது அவளது புதிய துண்டு தரையில் கிடந்தது.தொட்டிலின் இருபுறமும் கொசுவலை மூடீருக்கும்போது பாப்பாவின் மேல் போர்த்திய துண்டு தரையில் கிடக்க வாய்ப்பு இல்லை. அம்மா,நான் மட்டுமே அறையில் உறங்கியது.அம்மாவிடம் கேட்டால் அம்மா அவ்வாறு செய்யவில்லை என்றார். மறுநாள் பகலில் நான் பார்க்கும்போதே பாப்பா கையை உதறி துண்டு அவள் முகத்தை மூடியது.நான் ஓடி சென்று அதை எடுத்து விட்டேன்.அன்று இரவு கனவில் என் இறந்து போன மாமியார் தான் எடுத்து போட்டதாகவும்,அந்த முறையில் பாப்பாவை போர்த்த வேணாம் என்றும் சொன்னார்.அம்மாவிடம் நான் இதை சொன்னால் தனக்கும் அதே கனவு வந்தது என்றார். இதை நம்ப அறிவு 100% மறுக்கிறது. அனுபவ உண்மை சுடுகிறது.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்