கர்ப்ப சந்தேகங்கள்- 36வது வாரம் அவசரமாக உதவவும்

ஹாய் தோழிகளே,
எனக்குசில சந்தேகங்கள் இருக்கிறது,

எனக்கு இப்பொழுது 36வது வாரம் இன்று காலையில் இருந்து அடிவயிற்று பகுதியில் சுருக் சுருக் என்று குத்திக்கொண்டே உள்ளது,அதாவது சூடு பிடித்தால் எப்படி வலிக்குமோ அப்படி வலி இருக்கிறது,யூரின் போகவேண்டும் போலவே உள்ளது,தாங்க கூடிய அளவுதான் என்றாலும் பயமாக உள்ளது,இது எதனால்?தொப்புளிலும் எப்பொழுதாவது லேசான வலி உள்ளது.இதற்கு என்ன காரணம்,பிளீஸ் தோழிகளே சீக்கிரமாக சொல்லுங்கள்
சில நேரங்களில் அடிவயிற்றை குழந்தை இழுத்து பிடித்தால் எப்படி இருக்குமோ அது போன்ற உணர்வு இருக்கிறது

எனக்கு 9வது மாதம் தொடங்கி 1 வாரம் முடிந்துவிட்டது
1.குழந்தை வயிற்றில் நகரும் போது வலி ஏற்படுமா?எனக்கு சில நேரங்களில் குழந்தை நகரும் போது வலி ஏற்படுகிறது.மேலும் பிரசவ வலி வரும் போது குழந்தை நகர்வது நமக்கு தெரியுமா?

2. 9வது மாதத்தில் வயிறு கீழிறங்கும் என்று கூறி இருக்குறார்கள்,வயிறு இறங்குவதை எப்படி அடையாளம் காண்பது?

3.சிசேரியன் செய்தால் எத்தனை நாட்கள் கழித்து பெல்ட் போடலாம்?

4.சில பேர் பிரசவம் ஆனதும் நிறைய தண்ணீர் அருந்தக்கூடாது,அப்பொழுதுதான் தொப்பை விழுகாமல் இருக்கும் என்கிறார்கள்.இது உண்மையா?அப்படி நீர் அருந்தாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படாதா?
யாராவது விளக்கமாக கூறுங்கள் தோழிகளே

fine manju...neega nalla water kudiga...nalla walking ponga..contious a pain iruntha doctor ta ponga..ok va..all the best manju...take care...

Hope is necessary in every condition:)

டியர் ரேகா,
உடனே பதில் தந்தமைக்கு ரொம்ப நன்றி,நான் நிறைய தண்ணீர் குடிக்கிறேன்,1 வேளை டெலிவரி பெயினாக இருந்தால்,நான் மதிய உணவு சாப்பிடலாமா?இந்த வலிக்கு என்ன காரணம்,வேறு தோழிகளும் வந்து பதில் கூறுங்கள் பிளீஸ்

தோழிகளே தயவு செய்து பதில் கூறுங்கள்.எல்லாரும் எங்க இருக்கீங்க?

neega epovum pola sapidalam manju...intha pain preg a irukarapo varathu tha..so dont get fear....free a iruga...

Hope is necessary in every condition:)

மேலும் சில பதிவுகள்