என் சமையல் அறையில் - கதீஜா (ஜப்பான்)

கதீஜாவின் சமையலறை


என்னுடைய இந்த சமையல் அறை, எனது வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம். அறை சிறியது தான். ஆனால் நிறைய கேபினெட் இருப்பதால் மிகவும் வசதியாக இருக்கிறது. கேபினெட் கதவுகள் எல்லாம் லைட் கலரில் இருப்பதால் அழுக்கானால் உடனே தெரிந்து விடும். அதனால் சுத்தம் செய்வதற்கு சுலபமாக இருக்கிறது. இந்த ஜன்னல் வழியாக வெளிச்சம் வரும். சம்மர் சமயத்தில் மட்டுமே காற்றுக்காக திறந்து வைத்து இருப்பேன். புறாக்கள் வெளியில் நின்று கொண்டிருக்கும். அதனால் நெட் போட்டே வைத்து இருப்பேன். சமையல் வேலை முடிந்ததும் ஜன்னலை மூடி விடுவேன். ஜன்னல் அருகில் ரைஸ் குக்கர் வைத்து இருக்கின்றேன். அதற்கு இடது பக்கத்தில் மைக்ரோவேவ் வைத்துள்ளேன். சுவருக்கும் டைல்ஸ் போடப்பட்டு இருக்கின்றது. கிச்சன் மேடை முழுவதும் சில்வரிலேயே இருப்பதால் துடைத்து சுத்தம் செய்ய வசதியாக இருக்கிறது.

my kitchen
 

கீழே உள்ள கப்போர்டில் வலது பக்கம் வெங்காயம் மற்றும் புதிதாக வந்திருக்கும் மசாலா பாக்கெட் வகைகளை வைத்து இருக்கிறேன். தேதி பார்த்து எடுக்க வசதியாக இருப்பதால். வலது பக்கம் நூடுல்ஸ், ஐஸ்க்ரீம் மற்றும் கஸ்டர்ட் வகை சாமான்களை வைத்து இருக்கிறேன். ரோல் செய்து, பார்த்து எடுக்க வசதியாக இருக்கிறது. கீழே நான்கு ட்ராயர்கள் இருக்கின்றன. அதில் மேலே உள்ளதில் கரண்டி, ஸ்பூன் வகைகளை பெரிது, சிறிது என்று தனித் தனியாக வைத்து இருக்கின்றேன். கத்தி, மற்றும் கத்தரிகோல்களையும் தனித் தனியாக வைத்து இருக்கின்றேன். மற்ற ட்ராயர்களில் உபயோகப்படுத்தாத கரண்டிகள், லஞ்ச் பாக்ஸ், புதிய டப்பாக்கள் என்று வரிசையாக வைத்து இருக்கின்றேன். மேலே உள்ளதில் தினமும் சமையலுக்கு தேவையான மசாலா வகைகளை சிறிய டப்பாக்களில் போட்டு வைத்து இருக்கின்றேன்.

my kitchen
 

கிச்சன் சிங்க்கில் பாத்திரம் கழுவி முடித்த பின்பு, உடனே குப்பைகளை எடுத்துவிட்டு புது கவர் மாற்றி வைத்து விடுவேன். சிங்க்கையும் உடனுக்குடன் கழுவி விடுவதால் அழுக்கு படியாமல் இருக்கும். இதன் அருகிலேயே பாத்திரம் கழுவி வைப்பதற்காக இந்த ப்ளாஸ்டிக் கூடை வைத்து இருக்கிறேன். பாத்திரம் கழுவி தண்ணீர் நீங்கிய பின்பு, அதனை அதன் இடத்தில் வைத்து விடுவதால் இந்த இடம் நீட்டாக இருக்கிறது.

my kitchen
 

மேலே உள்ள கேபினெட்டில் ஒரு பக்கம் கண்ணாடி தட்டுகள், ப்ளாஸ்டிக் சாமான்கள், கப் வகைகளை தனித் தனியாக வைத்து இருப்பதால் தேவைக்கு எடுக்க சுலபமாக இருக்கிறது. வலது பக்கம் தெரிவதில், நான்ஸ்டிக் பேன் வகைகளை தினமும் யூஸ் செய்வது, புதியது என்று தனித் தனியாக வைத்து இருக்கின்றேன். மற்ற கேபினெட்களில் பருப்பு, மாவு, மற்றும் சமையலுக்குத் தேவையான அனைத்து மசாலா வகைகளையும் தனித் தனியாக பெரிய container ல் போட்டு வைத்து இருப்பேன்.

my kitchen
 

இது தனியாக வாங்கியது. இதில் மிக்ஸி, சாண்ட்விச் மேக்கர், டோஸ்டர் எல்லாம் வைத்து இருக்கிறேன். இதன் அருகில் ப்ரிஜ் இருக்கிறது.

my kitchen
 

இந்த கிச்சனில் ஒரு சிறிய இடம் கூட வேஸ்ட் செய்யாமல் அழகாக வடிவமைத்து இருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

my kitchen
 

Comments

கதீஜா,
உங்க கிச்சன் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.நல்லா ப்ளான் பண்ணி பொருட்களை வச்சு இருக்கீங்க.அதுவும் வெங்காயம் எல்லாம் வைத்திருக்கும் கப்போர்ட் எனக்கு பிடிச்சு இருக்கு.கிச்சனை பார்க்கவே,சமைக்க ஆசையா இருக்கு.வாழ்த்துக்கள்.

கதீஜா மேடம்,

உங்களது சமையலறை நேர்த்தி+அழகு..
இடத்தை வீணாக்காமல் அடுக்கி வைத்து இருப்பது மேலும் அழகு..

என்றும் அன்புடன்,
கவிதா

சம அழகான பளிச் கிச்சன். சின்னதா அதே சமயம் தேவையான வசதிகளோடு ரொம்ப அழகா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமையலறை பார்க்க அழகா இருக்கு நல்ல வசதியாவும் இருக்கு சூப்ப்ர்ர்ர்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்புள்ள கதீஜா, உங்க கிச்சன் மிகவும் சூப்பர். நேர்த்தியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

என்னுடைய சமயல் அறை படங்களை வெளியிட்ட அட்மினுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன் கதீஜா.

உங்களுடைய கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

அன்புடன் கதீஜா.

பேசி நாளாகுது. நலமா பொண்ணு நலமா. உங்க கருத்துக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க பசங்க நலமா. ஆமா சின்னதாக இருந்தாலும் தேவையான வசதிகள் இருப்பதால் எதுவும் தெரியவில்லை. உங்க கருத்துக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

உங்க கருத்துக்கு நன்றி.

அன்புடன் கதீஜா

உங்க கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

அன்புடன் கதீஜா.

நேர்த்தியாக வைத்து இருக்கிறீர்கள் கதீஜா. எனக்கும் அந்த வெங்காய கப்போர்ட் பிடித்து இருக்கிறது. வழமையாக இப்படியான கப்போர்ட்களில் மூலையில் பொருட்களை வைத்து எடுப்பது சிரமமாக இருக்கும். சில வீடுகளில் 'கலப்சிபிள் டோர்' வைப்பார்கள். அது விரைவில் ஸ்க்ரூ கழன்று போய்விடும். உங்கள் இழுவை ராக்கை நல்ல யோசனை.

‍- இமா க்றிஸ்

அழகா இருக்கு உங்க வீட்டு கிச்சன்!!!

பராமரிப்புக்கு முறையும் அருமை!!1

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாவ் கதீ ரொம்ப அழகா இருக்கு...நான் மட்டும் விதி விளக்கா குறிப்ப்பாக அந்த வெங்காயம் வைத்திருக்கும் இடம் ரொம்ப அழகுதான் அப்படியே இருந்ததா அல்லது காக்காவின் ஐடியாவா அல்லது உன்னோடதான் செட்டிங்ஸ்லாம்...நீ இவ்லோ நாள் என்னை ஜப்பான் வான்னு கூப்பிட்டும் எனக்கு வர தோனல இப்ப இந்த கிச்சனில் இருந்து சமைத்து நாம இருவரும் அரட்டை அடிக்க ஆசை வருது :D (அந்தநாள் நியாபகம்)மாஷாஅல்லாஹ் ஆல் வேஸ் நைஸ்

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்க கருத்துக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

உங்க கருத்துக்கு நன்றி. உங்க கிச்சனையும் படம் எடுத்து போடுங்க நாங்களும் பார்த்து ரசிக்கிறோம்.

அன்புடன் கதீஜா.

உன்னுடைய கருத்துக்கு நன்றி. நான் கூப்பிட்டு நீ வரலை இப்ப என் கிச்சன் உன்னை கூப்பிடுதா இது ரெம்ப நல்லா இருக்குமா. சரி சரி எப்படியோ வா நம்ம அரட்டை உன் ஆசைப்படி கிச்சனிலும் தொடரலாம்.

அன்புடன் கதீஜா.

ரொம்ப அழகா கிச்சனை பளிச்சினு வெச்சு இருக்கிங்க ;)
க்ளீன் பண்ணிட்டே இருக்கனும் இல்லையா?
வெரி நைஸ் :)

வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்களது சமையலறை அழகு.

கதீஜா நானும் அறுசுவை ஓபன் பண்ணும் போதெல்லாம் உங்க கிச்சன் விசிட் அடிக்கனும்னு நினைப்பேன், முடியாமலே போய் விட்டது.

மிக அழகாயிருக்கு, நேர்த்தியா க்ளினா இருக்கு.

சிஸ்டமேடிக்கா ப்ளான் பண்ணிருக்கீங்க. கதீஜா கிச்சன் - அழகு.

அன்புடன்
பவித்ரா

கதீஜா உங்கள் கிச்சன் அழகா வெச்சி இருக்கீங்க, நானும் உங்களை போலவே லைட் கலர்தான் போட்டு இருக்கேன் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கதீ யாகூ ல மெஸ்ஸேஜ் போட்டு இருக்கேன் பாரு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஜப்பான் கிச்சன் ரொம்ப அருமையாக இருக்கு. அந்த காய்கறி வைக்கும் ரோல் ட்ரே எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு கதீஜா.

பிள்ளைகள் எல்லாம் நலமா கதீஜா.

Jaleelakamal

உங்க கருத்துக்கு நன்றி. ஆமா ரம்யா க்ளீன் பண்ணிக்கிட்டு இருக்கனும். அப்ப தான் எப்பவும் பளிச்சின்னு இருக்கும்.

அன்புடன் கதீஜா

நலமா? பேசி நாளாச்சு. வெங்காய கப்போர்ட் உங்க எல்லருக்கும் பிடித்து இருப்பது சந்தோஷம் உங்க கருத்துக்கு நன்றி.

அன்புடன் கதீஜா

உங்க கருத்துக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

உங்க கருத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன் கதீஜா

நலமா? வீட்டில் அனைவரும் நலமா? இங்கு நாங்கள் அனைவரும் நலம். உங்க கருத்துக்கு நன்றி. உங்க கிச்சைனையும் பார்க்க ஆசை ஜலீ அக்கா சமயலை தான் சாப்பிட அருகில் இல்லை. உங்க கிச்சனையாவது பார்க்கிறோமே போட்டோ போடுங்க அக்கா.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா, எப்படி இருக்கிங்க? ஜப்பான் எப்படி இருக்கு? உங்க சமையல் அறை ரொம்ப அழகாஇருக்கு;)

உன்னை போல பிறரையும் நேசி.

Katheeja unga kitchen nalla iruku. Nalla maintain panringa. Very nice