குலாப் ஜாமூன்

தேதி: July 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

மைதா- 1 கப்
கோயா- 1/4 கப்
கார்ன்ப்ளார்- 2 ஸ்பூன்
முட்டை- பாதி
உப்பு-தேவைக்கு
சீனி- 1கப்
பால்- 100 மில்லி
ஏலக்காய்- 4
நெய் அல்லது எண்ணெய்- பொரிக்க தகுந்த அளவு


 

ஒரு பாத்திரத்தில் மைதா, கான்ப்ளார்,உப்பு,முட்டை சேர்த்து கலக்கவும்.

பின் கோயா சேர்த்து பிசறவும்.

தேவைக்கு தகுந்தபடி பால் சேர்த்து (கண்டிப்பாக தண்ணீர் சேர்க்க கூடாது) பூரிமாவு பதத்திற்கு பினையவும்

சிறுசிறு உருண்டைகளாக எடுத்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

சீனியில் நீர் சேர்த்து சூடாக்கவும்

அத்துடன் ஏலக்காய் உடைத்து போட்டு அரைகம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.

பொரித்த உருண்டைகளை சீனி பாகில் ஊற வைத்து பின் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்