முடிகொட்டாமல் இருக்க என்ன செய்யணும்?

தோழிகளே எனக்கு இன்னும் டெலிவரிக்கு 3 வாரங்களே உள்ளது,இப்பொழுது என்னுடைய எடையும் அதிகமாக உள்ளது,டெலிவரிக்கு பிறகு அதிகம் முடி கொட்டும்,எனக்கு ஏற்கனவே குறைவாகதான் முடி உள்ளது,பேரிச்சை,பால் போன்றவற்றை டெலிவரிக்கு பிறகு சாப்பிட்டால் முடி வளரும் என்கிறார்கள்,ஆனால் எடையும் அதிகமாகும்,எடை அதிகரிக்காமல் முடி கொட்டாமல் இருக்க என்ன என்ன உணவுகள் அல்லது கை வைத்தியம் இருந்தால் கூறுங்கள் தோழிகளே,மேலும்,பிரசவம் ஆனதும் நிறைய தண்ணீர் குடித்தால் தொப்பை குறையாது என்று சொல்கிறார்களே அது உண்மையா?பதில் கூறுங்கள் தோழிகளே

டெலிவரிக்குப் பிறகு முடி கொட்டினாலும் திரும்ப வளரும்.

பால் - தினமும் ஒரு நாளுக்கான அளவு சாப்பிடுவதில் உடம்பு வைக்காது. பேரீச்சம்பழம்.. ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ தானே சாப்பிடுவீங்க. ஒன்றும் ஆகாது. மற்றப்படி.. சம உணவாக.. ஆரோக்கியமான உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். உணவில் பச்சைக்கீரை வகை போதுமான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

//பிரசவம் ஆனதும் நிறைய தண்ணீர் குடித்தால் தொப்பை குறையாது என்று சொல்கிறார்களே அது உண்மையா?// தண்ணீர் எப்படி தொப்பையை வரவைக்கும்!! அளவுக்கு அதிகமாகக் குடித்தால் சிறுநீராக வெளியேறுமே தவிர இதனால் தொப்பை போடாது. தேவயில்லாமல் அதிகமாகக் குடிக்கவும் வேண்டாம்.

போதுமான அளவு நீர் அருந்தாவிட்டால், உடல் பிரசவத்தின் போது இழந்த நீரை ஈடு செய்ய முடியாது. நீர் அருந்துவதைக் குறைத்தால் பால் சுரப்பும் குறைவாக இருக்கும்.

யோசிக்காம இப்போ இருக்கிற மாதிரி சாதாரணமாக இருங்க. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா,
எப்படி இருக்கீங்க?எனக்கு எப்பவும் முதல் பதிவு போடறது நீங்கதான்,எனக்கு அதனாலயே உங்களை ரொம்ப பிடிக்கும்,தேங்க்ஸ் இமா,அறுசுவையில தான் 1 தோழி தண்ணீர் நிறைய குடிக்க கூடாதுன்னு சொல்லி இருந்தாங்க அதான் கேட்டேன்,நம்ம ஓர்ல டெலிவரி ஆனது கால்கள் 2ஐயும் சேர்த்து வச்சிக்கணும் அப்பதான் காத்து போகாமல் இருக்கும் இல்லைன்னா தொப்பை விழுந்துடும்னு சொல்லுறாங்க,அது எவ்வளவு உண்மைன்னு தெரியலை,தெரிஞ்சா பதில் சொல்லுங்க,

மேலும் சில பதிவுகள்