அமானுஷ்ய அனுபவங்கள் - பாகம் - 2

தோழிகளே !!! அமானுஷ்ய அனுபவங்கள் இழைக்கு உங்களிடையே இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இதை வெற்றிகரமாக கொண்டு செல்லும் அறுசுவை தோழிகள் அனைவருக்கும், பச்சை கொடி காட்டி இந்த இழையை வேகமாக ஓட செய்த அட்மின் அண்ணா அவர்களுக்கும், இவற்றை படித்து உற்சாகமூட்டும் மற்ற தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!! தொடர்ந்து தொடர செய்யுங்கள் :)

அமானுஷ்ய அனுபவங்கள் - பாகம் 1
http://www.arusuvai.com/tamil/node/19611

சூப்பர் கல்ப்ஸ்...:) இப்ப தான் நினைத்தேனே

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

ஆஹா கல்ப்ஸ் அடுத்த இழை தொடங்கியாச்சா!!! நடக்கட்டும் நடக்கட்டும்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

விமலா,சுவா முதல் பதிவை போட்டு தொடங்கி வச்சிருக்கீங்க. இனி இந்த இழையும் சூப்பரா போகும் என்பதில் சந்தேகமில்லை. சீக்கிரம் போடுங்க உங்கள் பேலன்ஸ் அனுபவங்களை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜாலி ஜாலி பயப்படலாம்

இனிமே....தீபா,திவ்யா,ரேவதி நு பேய் களின் தோழிகளே!!!!

தைரியசாளிகளே!!! வாங்க வந்து தொடருங்க....அட்மின் அண்ணா போனதுலா

தான் (பயந்துடிங்களோ????) வரல இப்போ,, வாங்க :) எவ்வளவு தெரியசாளிங்க

பாருங்க :0 எல்லரு இன்னும் இன்னும் பயமுறுத்துங்க ....

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

இது என் அண்ணி சொன்னது ,,, எங்க வீட்டு எதிரே உள்ள வீட்டில் இருந்தவங்க

அவங்க கணவன்கூட சண்ட போட்டு தற்கொலை பண்ணிடாங்க...ஆனால் நாங்க

அதல பெரிச எடுத்துகல வீடும் மைலாபூர்ல வந்த்து டோ கொஞ்ச நாள் முன்னாடி

என் அண்ணி யா பார்க்க போனேன் அப்போதான் அண்ணி சொன்னங்க ஒரு

இறந்தவங்க பேரு வசந்தி... வசந்தி ரொம்ப தொல்லை பண்றாங்கனும்,, ஜன்னல்
வழியா கல் ல தூக்கி போட்றதாகவும்,,,, சத்தம் போட்றதாகவும் நான் நம்பல

(தைரியமான பொண்னுல நானு) அப்பறம் சொன்னது தான் பயமே ஒருநாள்

அண்ணி குழந்தையோட கட்டில் மேல படுத்து இருக்கங்க அப்போ அண்ணா முழிச்சி பாத்து இருக்கு மேல பாத்தா அண்ணி மட்டும இல்லையாம் பாப்பா

மட்டும் இருந்துஇருக்க ஆனால் உள்ள தாழ்பாள் போட்டு இருந்து இருக்கு

அண்ணா தூக்கதுல ஒன்னுமே புரியாம படுத்துட்டு இருக்கு,,,,,,அடுத்து

மறுநாள் சொல்லிருக்கங்க அண்ணிக்கு இதுல ல ரொம்ப நம்முவாங்க அப்புறம்

மறுநாள் தூங்க்கிட்டு இருக்கும் போது தீடீர்னு அண்ணா கத்தி இருக்காங்க அப்போ

அண்ணி முழிச்சா அண்ணா சரியா கதவுகிட்ட பயந்து படுத்து இருக்கங்க...

அண்ணி என்ன என்ன நு கேட்டதுக்கு ஒனுமே சொல்லம மறுபடியும் வந்து

படுத்துட்டங்களாம்,,, அண்ணிக்கு தான் ஒன்னுமே புரிலையாம் :( அப்புறம

காலைல கேட்டதான் சொல்லுறாங்கா அண்ணா நைட்டு படுத்து இருந்தேன் என்ன

யாரோ கால பிடிச்சி இழுத்தங்க நானும் கத்துறேன் உன்னை கூப்பிடேன் ஆனால்

உனக்கு தான் தெரியால நு சொல்லி இருக்காங்க அப்படியே இழுத்து என்

மேலையே அழுத்தினாங்க அதுக்கு அப்பரம் என்னல கத்தவே முடில நு சொல்லு

இருக்காங்க,,, அப்பரம் தான் என்ன ஆனதுனே தெரில நான் கத்தினது யெனக்கே

கேட்டது நீயும்முழிச்சனு அவ்வள தான் அனைல இருந்து பூஜை தான் இப்போ

எதும் பச்சனை இல்லைனு சொன்னங்க அண்ணி,,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

பச்ச புள்ள கல்பனா அவர்களுக்கு.... :)))
நீங்க ஆரம்பித்த இந்த இழை பாகம் - இரண்டு, மூன்று, நான்கு இப்படி போய்கொண்டே இருக்கணும்.... அதற்கான அட்வான்ஸ் வாழ்த்துக்கள் இப்பொழுதே.... :)

அப்படியே உங்க முகப்பில் "அமானுஷ்யம் பாகம் ஒன்னு" எந்த லிங்க்கில் இருக்கு என்பதை குறிப்பிடவும்..... புதிதாக வருபவருக்கு தொடர்ச்சியாக படிக்க அது உதவும்.... :)

இப்ப எனக்கு month எண்டு வேலை ஆரம்பம் ஆகிடுச்சு.... அதான் அடுத்த பதிவு போட முடியல...... :( (

நேரம் கிடைக்கும் போது, கண்டிப்பா உங்க எல்லோரையும் வந்து பயமுறுத்துவேன்..... :)

தொடர்ந்து கலக்குங்க கல்ப்ஸ்...... :-D

இன்னைக்கு மதியம்தான் டிஸ்கவரில பாத்தேன்/ நம்ம ஊரு தேவலைபோல் வெளி நாட்டில் வேற்று கிரகவாசிகளுடன்ஏலியன்களுடன் தொடர்பு கொண்டு கரு உருவாவதுபோல்/ எல்லம் அவர்களின்// மனம்பிரமை// கொண்டிருப்பதை கட்டினார்கள் ஒன்றல்ல இரண்டல்ல அங்கு அதிகம்பேர் ஒன்றுசொன்னார்போல் இதே//பிரமையினால்// அவதிக்குள்ளாகி மனோததுவ டாக்டெர் மற்றும் க் ஹிப்னாடிசம் டக்டரிடம்சென்று பார்ப்பதாக காட்டினார்கள் அந்த ஏலியன்களை அவர்கள் சொல்வதெல்லாம் அமானுஷ்ய சக்தி
அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகளும் பய உணர்ச்சிகளும் தெளிவில்லாத மன நிலையும் ஒருமனிதனை நம்பிக்கை இழக்கவைத்து மேற்படி நிலைகளுக்கு கொண்டுபொய் விட்டுவிடும்

நானும் ரொம்ப நாளைக்கு முன்னேயே டிவியில பார்த்தேன். டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி எல்லாத்துலேயும் காட்டினாங்க. மனுசங்க உருமாறி வந்தது, இனங்கள் அழிந்தது, உருவானது, அண்டைவெளி பற்றிய உண்மைகள் இதெல்லாம் நிறைய காட்டினாங்க. இதையெல்லாம் சரியா புரிஞ்சுக்காத சில கூட்டங்கள் இன்னமும் அவங்க சாமிதான் உலகத்தை உருவாக்குனுச்சுன்னு, ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மதத்து பேரைச் சொல்லிக்கிட்டு, கூட்டம் கூட்டமா கிளம்பி அடுத்தவனை கொன்னுக்கிட்டு இருக்காங்களாம். மனப்பேய் பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்கவனுக்குதான் பிரச்சனை. இந்த மாதிரி மதப்பேய் பிடிச்சவங்களால உலகத்துக்கே பிரச்சனை. டிவியில, நெட்டுல எல்லாம் என்ன காமிச்சு என்ன பிரயோஜனம்? ஜனங்க என்னைக்கு திருந்தப் போகுதோ..:-(

சொல்லப் போற அமானுஷ்ய அனுபவம் என்னுடைய நேரடி அனுபவம் கிடையாது. இது ஒரு உண்மை நிகழ்வு. என்னோட நண்பனுக்கு ஏற்பட்டது. இதில திகில் எல்லாம் இருக்காது. அதனால பெரிய எதிர்பார்ப்பு வேண்டாம். எனக்கு தெய்வ நம்பிக்கை, பேய்கள் நம்பிக்கை எல்லாம் கிடையாதுங்கிறது, பழைய அறுசுவை விவாத த்ரெட்களை படிச்சவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இந்த நம்பிக்கையின்மை ஒரே நாள்ல வந்த விசயம் இல்லை. கல்லூரி படிக்கிற வரைக்கும் நானும் ஒரு தீவிர ஆன்மீகவாதியாத்தான் இருந்தேன். அதன்பிறகுதான் அறிவியலை நிறைய படிக்கப் படிக்க, தெய்வ சக்தி மேலே இருந்த நம்பிக்கைகள் போய், ஒரு கட்டத்துல எல்லாமே பொய்யிங்கிற உண்மை உரைக்க ஆரம்பிச்சது :-) (இங்க சொன்னதை வச்சுக்கிட்டு யாரும் எங்கிட்டே விவாதத்துக்கு வர வேண்டாம். இந்த இண்ட்ரொடக்சன் நான் சொல்லப் போற சம்பவத்துக்கு தேவைங்கிறதால இதை சொல்றேன். :-))

தெய்வ நம்பிக்கை இருந்த காலத்துல பேய்கள் நம்பிக்கையும் ரொம்பவே இருந்துச்சு. பத்தாம் வகுப்பு படிக்கிறப்பவே விக்கிரவாண்டி ரவிச்சந்திரனோட அத்தனை புக்ஸ்ம் தேடிப் பிடிச்சு படிச்சிருக்கேன். அவரோட ஆவிகள் உலகம் ங்கிற ஒரு மேகஸினுக்கு கூட சப்ஸ்க்ரைப் பண்ணி இருந்ததா ஞாபகம் இருக்கு. லைப்ரரியில ஆவிகள் சம்பந்தமா கிடைக்கிற அத்தனை புக்ஸ்ம் படிப்பேன். அதில சொல்லி இருக்கிற ஓய்ஜா போர்டு முறையில ஆவிகளோட பேசறதுக்கு பலமுறை ட்ரை பண்ணி இருக்கேன். ஆனா, ஒரு முறைகூட ஆவிகள் என்கூட பேசினது இல்லை. :-( இன்னைக்கு எனக்கு இதில எல்லாம் துளிகூட நம்பிக்கை இல்லேன்னாலும், நான் சொல்லப் போற என் நண்பனோட கதை மட்டும் எனக்கு இன்னமும் ஒரு விடை தெரியாத புதிராத்தான் இருக்கு. முன்னுரை போதும், சீக்கிரம் சம்பவத்துக்கு வா ன்னு நீங்க சொல்றது கேட்குது. ஓக்கே, நடந்த கதைக்கு போகலாம்.

நான் பிறந்து 12 வயது வரைக்கும் வளர்ந்தது திருத்துறைப்பூண்டிங்கிற ஊர்ல. எட்டாம் வகுப்பு தொடக்கத்திலேதான் நாகப்பட்டினத்துக்கு, இப்ப இருக்கிற வீட்டுக்கு/தெருவுக்கு வந்தோம். இது அஹ்ரஹாரம். ஸ்கூலுக்கு போற ரெண்டாவது நாள் வீட்டு வாசலை விட்டு இறங்கிறப்ப, அதே தெருவில இருக்கிற ஒரு பிராமண பையன், நல்ல நிறம், பளிச்சுன்னு தெரிய மாதிரி சிவப்பு கலர்ல பெரிசா ஒற்றை நாமம் போட்ட முகம், சிரிச்சபடியே எங்கிட்டே வந்தான். "நீ எய்த் C செக்சன்ல புதுசா சேர்ந்திருக்கியா?" ன்னு கேட்டான். ஆமா, எப்படி தெரியும்னு கேட்டேன். நான் எய்த் B செக்சன், எங்க கிளாஸ் வழியாத்தான் நீயும் உங்கப்பாவும் நேத்து போனீங்க ன்னு சொன்னான். அதுதான் நாங்க பேசின முதல் பேச்சு. இன்னமும் என் மனசுல பசுமையா இருக்கு. அதுக்கப்புறம் நான் அவன் பேரைக் கேட்க, அவன் சொன்ன "சேஷாத்திரி" ங்கிற பேர் அப்பதான் நான் முதல் முதலா கேட்கிற பெயரா இருந்துச்சு. அந்த பேரை மனப்பாடம் பண்ணித்தான் நினைவு வச்சுக்கிட்டேன். ஆனா, அவனோட நட்பு அந்த அறிமுக உரையில இருந்தே பசுமையா வளர ஆரம்பிச்சது. எங்க வீட்டுல இருந்து அஞ்சு வீடு தள்ளித்தான் அவன் வீடு இருந்துச்சு. எங்க வீட்டு நம்பர் 7, அவன் வீடு 13. தினமும் ஸ்கூலுக்கு அவன் கூடத்தான் போயி திரும்பி வருவேன். அப்படியே அவன் மூலமா தெருவில இருக்கிற மத்த பசங்க எல்லாரும் எனக்கு ப்ரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. என் ஏஜ் க்ரூப்பில நிறைய பேர் இருந்தாங்க. சீக்கிரமே எல்லாரும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். (இப்பவும் அந்த நண்பர்கள் எல்லாரும், ஒவ்வொரு வருசமும் மாட்டுப்பொங்கல் அப்ப சென்னையில ஒரு கெட்டுகெதர் வச்சு சந்திச்சிக்கிறோம்.)

இந்த ஆரம்ப கட்டத்துல, ஒருநாள் நானும் சேஷாவும் உட்கார்ந்து படிக்கிறப்ப, அவன் அந்த வருசத்துக்கான அத்தனை திருக்குறளையும் மனப்பாடமா சொன்னான். எனக்கு ஆச்சரியம்னா ஆச்சரியம். எப்படிடா, ஸ்கூல் ஆரம்பிச்ச உடனே அத்தனை திருக்குறளையும் மனப்பாடம் பண்ணிட்டேன்னு கேட்டேன். அப்புறம்தான் அவன் விசயத்தை சொன்னான். போன வருசமும் நான் எட்டாவதுதான் படிச்சேன். எனக்கு கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கு. அதனால எக்ஸாம் எழுத முடியலை. அதான் இப்ப மறுபடியும் எட்டாவதே படிக்கிறேன். என்னப் பிரச்சனைன்னு கேட்டதுக்கு நான் அப்புறம் சொல்றேன். நீ பெருமாளை வேண்டிக்கோ.. எனக்கு இந்த வருசம் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு. நான் வற்புறுத்திக் கேட்டும் அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்டான்.

ரெண்டு மூணு நாளாச்சு. தினமும் ஸ்கூலுக்கு போறதுக்கு எங்க வீட்டுக்கு வந்த என்னைய கூட்டிட்டு போறவன், அன்னைக்கு வரவே இல்லை. நான் அந்த நேரத்துல அவங்க வீட்டுக்கு எல்லாம் போயி பழகலை. அதனால அவன் வர்றானான்னு வாசல்லயே நின்னு வெயிட் பண்ணி பார்த்தேன். ரொம்ப நேரமாயும் வராததால, நான் ஸ்கூலுக்கு போயிட்டேன். அவன் அன்னைக்கு முழுக்க ஸ்கூலுக்கும் வரலை. அடுத்த நாள் காலையில கால்ல ஒரு கட்டுப் போட்டுக்கிட்டு, நொண்டிக்கிட்டே வந்தான். கால்ல கல்லு விழுந்திடுச்சு. அதான் நேத்து வரலைன்னான். எப்படி விழுந்துச்சுன்னு நான் கேட்டதுக்கு அவன் சரியான காரணம் சொல்லலை. நான் அப்புறம் சொல்றேன்னு சொல்லி விட்டுட்டான். இவன் எதையோ மறைக்கிறான்னு தோணுனுச்சு. சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்ததும் எங்க வீட்டு கொல்லையில வச்சு அவங்கிட்டே என்ன விசயம், உனக்கு என்ன பிரச்சனைன்னு நான் வற்புறுத்தி கேட்டப்பிறகு, அவன் சொன்ன விசயங்கள் எனக்கு பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு.

எனக்கு யாரோ செய்வினை வச்சுட்டாங்க. வீட்டுக்கு போனா என் மேலே திடீர்னு கல்லு வந்து விழும். சாப்பாட்டுல மண்ணு, மலம் எல்லாம் வந்து விழும். ட்ரெஸ் எல்லாம் திடீர்னு தீப்பிடிச்சு எரிஞ்சுடும். புக்ஸ் எல்லாம் காணாம போயிடும்னு வரிசையா சொன்னான். இந்த பிரச்சனையாலத்தான் என்னால படிக்க முடியலை ன்னு அழுதுகிட்டே சொல்றான். எனக்கு பயங்கர அதிர்ச்சி. அது வரைக்கும் பயமில்லாம அவன்கூட பேசிக்கிட்டு இருந்த எனக்கு, அதுக்கப்புறம் பேசவே பயமா இருந்துச்சு. எவ்வளவு நாளா இது இருக்குன்னு கேட்டேன். ஆறாவது படிக்கிறப்பலேர்ந்தே இருக்குன்னான். என்னால நம்ப முடியலை. ஆனா அவனோட அடிப்பட்ட காலு, அவன் அழுகை இதையெல்லாம் பார்க்கிறப்ப நம்பாமலும் இருக்க முடியலை. அதைக் கேட்ட நிமிசத்திலேர்ந்து என்னோட மனநிலையே மாறிப் போச்சு. வீட்டுல சொன்னா, அம்மா அக்காவெல்லாம், டேய் நீ இனி அவன்கூட சேர்ந்து சுத்தாதே. அவன் வீட்டுப் பக்கம் எல்லாம் போகாதேன்னு என்னைய எச்சரிக்கை பண்ணினாங்க. பழகின கொஞ்ச நாள்லேயே அவன்கூட ரொம்ப நெருக்கமா பழகிட்டேன். இதுக்காக அவன் ப்ரெண்ட்ஷிப்பை விடுறதுக்கு எல்லாம் நான் தயாரா இல்லை.

அடுத்தடுத்த நாள் வழக்கம் போல ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக வந்தான். அவன்கூட போறப்பவும் வர்றப்பவும் இந்த அவனோட கதையை கொஞ்சம் கொஞ்சமா கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு சில நேரம் சொல்வான். சில நேரங்கள்ல அதை பத்தி பேசாதே. நானே அதை மறக்கணும்னு நினைக்கிறேன்ம்பான். எந்த பிரச்சனையும் இல்லாம ஒரு வாரம் போயிருக்கும். ஒருநாள் நைட்டு திடீர்னு புக்ஸ், நோட்டு எல்லாம் எடுத்துக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்தான். பாபு, என் புக்ஸ் நோட்டு எல்லாம் உங்க வீட்டுல வச்சுக்க, ப்ளீஸ் ன்னு அழுவுறான். என்னடா ஆச்சுன்னு கேட்டதுக்கு, புக்ஸ் நோட்டு எல்லாம் திடீர்னு எரிஞ்சு போயிடுச்சு, மீதி இருக்கிறதை எடுத்துக்கிட்டு வந்திருக்கேன். இதை மட்டும் உங்க வீட்டுல வச்சுக்கோ ன்னு கெஞ்சுறான். எனக்கோ எங்க வீட்டுல என்ன சொல்வாங்கன்னு ஒரே பயம். நைட்டு நேரத்துல அவன் வந்திருந்ததால, அப்பா வந்து என்ன விசயம்னு விசாரிச்சார். அப்பா கிட்டே நாங்க எல்லாம் பேசுறதுக்கு பயப்படுவோங்கிறதால, எந்த விசயமும் அவர் காதுக்கு போகாது. எதுவா இருந்தாலும் அம்மாகிட்டே சொல்லித்தான் சொல்வோம். சேஷா பத்தின விசயமும் அவருக்கு தெரியாது. இப்ப அவரே நேரடியா வந்து கேட்டதும், சேஷாவே எல்லா விபரத்தையும் சொல்லி அழ ஆரம்பிச்சிட்டான். எங்கப்பாவுக்கு சாமி, பேய் நம்பிக்கை எல்லாம் ரொம்ப குறைவு. அவன் அழறதைப் பார்த்து அவனுக்கு தைரியம் சொன்னார். நீ எதுக்கும் பயப்படாதே. என் வீட்டுலேயே நீ இரு. எந்த பேய் வருதுன்னு பார்ப்போம்னார். அதிலேர்ந்து அவன் எங்க வீட்டுலேயே புத்தகம் நோட்டு எல்லாம் வச்சுட்டு, பெரும்பாலும் இங்கேயே இருப்பான். ஆனா, அவன் வீட்டுக்குப் போற கொஞ்ச நேரத்துல எதாவது ஆயிடும். ஒருநாள் நைட் படுத்திருந்தப்ப, வீட்டுல இருந்த உரல் உருண்டு வந்து அவன் நெஞ்சில வேகமா மோதிடுச்சாம். வலியில துடிச்சிட்டான். அதை கேட்டதிலேர்ந்து எங்கப்பா அவனை நீ வீட்டுக்கே போகாதே, இங்கே எங்க வீட்டுலேயே இருன்னு சொல்லிட்டாரு.

அவன் ஆச்சாரமான ஐய்யங்கார் வீட்டுப்பிள்ளைங்கிறதால சாப்பாடு விசயத்துல எங்க வீட்டோட ஒத்துப் போக முடியலை. அதனால, குளிக்க, பூஜை பண்ண, சாப்பிட எல்லாம் வீட்டுக்குப் போயிட்டு, மத்த நேரங்கள்ல முழுக்க எங்க வீட்டுலேயே இருந்தான். நைட்டு இங்கேயே தூங்கினான். அவனுக்கு இங்க இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையுமே இல்லை. ஆனா, வீட்டுக்குப் போற கொஞ்ச நேரத்துல பிரச்சனைகள் தொடர்ந்துச்சு..

(மீதி அடுத்த பாகத்துல சொல்றேன். பதிவு ரொம்ப பெரிசா போகுது.)

கல்பனா நல்ல இன்ட்ரஸ்ட்டிங்கான இழைய ஆரம்பித்துவைத்துள்ளீர்கள்.
இன்றுதான் முதலாவது பாகம் படித்து முடித்தேன்.

எனக்கோ, என்குடும்பதில் உள்ளவர்களுக்கோ இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது.அப்படி ஒரு அனுபவம் இதுவரை வந்ததும் இல்லை. ஆனால் எல்லோர் அனுபவங்களையும் படிக்கும்போது நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

அறிவியல் வளர்ந்துவிட்டதால் மனிதனுக்கு மரணம் இல்லாமல் போய்விட்டதா என்ன?

மனிதனது மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது என்பதற்கு சரியான விடை அறிவியலால் கண்டுபிடிக்கப்படும் வரை ஆவிகளையும் பேய்களையும் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஆவிகளை பற்றிய அறிவியலின் முடிவு "இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்"
என்பதுதான். இந்த முடிவை அடிப்படையாக கொண்டு நாமும் ஒரு முடிவுக்கு வரமுடியாதே!

பாபுசார் நீங்களுமா?
மிகவும் வித்தியாசமான அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.. மேலும் தொடருங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்