கர்ப்பிணி பெண்களுக்கு உடற்பயிற்சி

கர்ப்பிணி பெண்களுக்கு உடற்பயிற்சி தேவையா? எப்படி பட்ட உடற்பயிற்சிகள் செய்யலாம். எனக்கு ஆறாவது மாதம்,,,, தோழிகள் பதில் கூறுங்கள்,,

ஆமாம் நல்லா வாக்கிங் போங்க. வீடை ஒரு முறையோ இரு முறையோ பெருக்குங்கள் அது நல்ல எக்சர்சைஸ்.

கெளரி, ஒரு சில பெண்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே மற்றவர்களை வேலை செய்ய ஏவிக் கொண்டு இருப்பார்கள். அதுவும் இந்த சமயத்தில் நல்லது கிடையாது. இந்த சமயத்தில் உடற்பயிற்சியை பற்றி நீங்கள் கேட்டிருப்பதால், நன்கு வேலை செய்பவர் என்றே நினைக்கத் தோன்றுகிறது. வீட்டு வேலைகளையே சிரமம் குறைவாக இருப்பதாக பார்த்து எடுத்து செய்தால் போதும். உடல் களைக்கும் அளவிற்கு வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. உடல் சோர்ந்து போகாத அளவிற்கு சிறு சிறு இடைவெளிகளில் செய்தாலே போதும். இடை இடையே பழரசம் போன்ற பானங்களை பருகிக் கொண்டோ, பழங்களை உண்டுக் கொண்டே இருங்கள். மூன்று வேளை உணவிற்கு பிறகும் உடனே படுக்கைக்கு செல்லாமல் 10 நிமிடம் அல்லது 5 நிமிட நடைபயிற்சியை செய்யுங்கள். சுகப்பிரசவாக வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி தோழி, இவை தவிர யோகாசனங்கள் ஏதும் செய்யலாமா?

நன்றி தோழி, கல்பனா. இவற்றை பின்பற்றுகிறேன்

அன்புள்ள கெளரி, வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் மருத்துவரை கன்ஸல்ட் செய்து தாராளமாக யோகா செய்யலாம். எனக்கு 2 குழந்தைகள். இரண்டுமே நார்மல் டெலிவெரி. நான் சென்ற மருத்துவமனையில் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடிய யோகாசனங்கள் (antenatal yoga) சொல்லிக் கொடுத்தார்கள். அதை நான் ரெகுலராக செய்தேன். அதனால் நார்மல் ஆகியிருக்கலாம் என்பது என் கருத்து. ஆனால் முறையான ஆசிரியரின் துணையோடுதான் செய்ய வேண்டும். கண்டிப்பாக யோகா உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் உதவும். நார்மல் டெலிவரியாக வாழ்த்துக்கள்.

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

Hello Arthy thanks for ur suggestion.

மேலும் சில பதிவுகள்