கொடி சுற்றக் காரணங்கள் ?

கர்ப்பிணி பெண்களுக்கு கொடி சுற்றக் காரணங்கள் என்ன? அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.

கொடி சுற்ற முதல் காரணம் கர்பினிப் பெண்கள் தூங்கும் போது எழுந்து உக்கார்ந்து திரும்பி படுக்கனும்,அப்படியே திரும்பி படுத்தால் கொடி சுற்றிக்கொள்ளும்.இரண்டாவது சில குழந்தைகள் உள்ளே பல்டியே அடிப்பாங்க,அப்போ தானாவே கொடி சுத்திக்கும்.இதுக்கு நாம் ஒன்னும் செய்ய முடியாது.அது தானே அன்விராப் பண்ணிக்கும்.மாசா மாசம் ஸ்கேன் எடுத்தா தெரிஞ்சுடும்,சில பேர் 2 அல்லது 3 மாசத்துக்கு ஒரு தடவை எடுப்பாங்க.

இதுவும் கடந்துப் போகும்.

கோடி சுத்துவதற்கு தனியே காரணமெல்லாம் கிடையாது. அது தாங்க நடக்கும் ஒரு நிகழ்வு. அதை பற்றி நீங்கள் அதிகம் கவலை பட தேவையில்லை. உங்களுக்கு அப்படி எதாவது சந்தேகம் இருப்பின் உங்களின் மருத்துவரிடம் அதை பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மகப்பேறு மருத்துவரிடம் போகும் போது என்ன என்ன கேட்க்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டு எடுத்து செல்லுங்கள். அவர்கள் பொறுமையாக உங்களுக்கு பதில் சொல்லியே ஆகா வேண்டும். உங்களுக்கும் உங்களின் மகப்பேறு மருத்துவருக்கு ஒரு நல்ல உடன்பாடு இருக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் கர்பிணிகளுக்கென்று வகுப்புகள் இருக்கிறது. அங்கு சென்று கூட உங்களின் அனைத்து சந்தேகத்தையும் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.

கர்பமாக இருக்கும் போது மல்லாக் படுக்க அசௌகரியமாக இருக்கும் அதுவும் இல்லமால் அதிக எடையை முதுகெலும்பு அதிக நேரம் தாங்க முடியாது அதனால் தான் பக்கவாட்டில் படுக்க சொல்கிறார்கள். அதுவும் சிலர் இடது பக்கமாக படுக்க சொல்வதன் காரணம், வலது பக்கத்தில் லிவர் இருக்கிறது...அந்த பக்கம் படுத்தால் அழுந்தப்படும் என்பதால் மட்டும் தான். தூங்கும் போது திரும்பி எழுந்து தான் அவிசியமாக படுக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. இது எனக்கு என் மருத்துவர் சொன்னது. அதனால் இப்பொழுது நிம்மதியாக தூங்குங்க. கொஞ்சம் நாள் சென்ற பிறகு வயிறு பெருசாகும் தூக்கம் போகும்.....அப்பறோம் குழந்தை பறந்த பிறகு இருக்கும் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போகும்....அது ஒரு சுகமான சுமை.....:)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்