ரவை பணியாரம்

தேதி: July 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

ரவை - கால் கிலோ
வாழைப்பழம் - ஒன்று
முட்டை - 2
சீனி
சுடுத்தண்ணீர்
ஏலக்காய்
சுக்கு
எண்ணெய்


 

முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் ரவையோடு சுடுத்தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து வாழைப்பழம், சுக்கு, ஏலக்காயை தட்டி போட்டு, முட்டையை உடைத்து ஊற்றி, சீனியையும் சேர்த்து நன்கு பிசைந்து ஊற வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து அதில் மாவினை ஊற்றவும் (விரும்பிய வடிவில் )
பணியாரம் வெந்து சிவந்த நிறம் வந்ததும் எடுத்து விடவும்.
சுவையான ரவை பணியாரம் தயார். தேவையானால் சிறிது சோடா உப்பு சேர்த்து கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இளையா அடுத்த குறிப்பா கலக்குங்க. ரவை பணியாரம் செய்து சாப்பிட்டு இருக்கேன் முட்டை சேர்க்காமல். சோடா உப்பு சேர்க்காமலே நல்ல உப்பி வந்து இருக்கு. உங்க முறைப்படியும் ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. by Elaya.G

முதல் ஆளா வந்து பின்னூட்டம் தந்து இருக்கீங்க நன்றி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க by Elaya.G

வாழைப்பழம் டேஸ்ட் எனக்கு பிடிக்கும்,இதே முறையில் மைதாவில் வாழைப்பழம் சேர்த்து செய்வேன்.பணியாரம் நல்லா இருக்கு,உங்க முறைப்படி செய்து பார்க்கிறேன்!வாழ்த்துக்கள் இளையா!

Eat healthy

இளையா நல்லதான் இருக்கும் ஆனா முட்டை போட்டுருக்கீங்க எனக்கு பிடிக்காதே வினோஜா முட்டை போடாமல் செய்ரது எப்படின்னு சொல்லுங்கப்பா

எளிமையான குறிப்பு வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இடைவெளி விட்டு ஒரு குட்டீஸ் குறிப்போடு மீண்டும் வந்திருக்கீக்க... வாழ்த்துக்கள். நல்லா இருக்கு, நானும் செய்து பார்த்துட்டு வரேன் மீண்டும் பின்னூட்டம் தர :) உங்க வெங்காய குறிப்பு இப்பவும் எங்க வீட்டில் அடிக்கடி செய்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளையா,
ரவை பணியாரம் பார்க்கவே மொறுமொறுனு அசத்தலா இருக்கு.வாழ்த்துக்கள்.

இளையா,

குழந்தைகளுக்கு பிடிக்கிறார்போலே செய்து இருக்கீங்க..

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அக்கா தங்கள் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி

வனி அக்கா

இந்த குறிப்பு எங்கம்மா செஞ்சது ந எண்ணைல போட்டு எடுத்தேன் அக்கா எனக்கு ரொம்ப பிடிச்ச பலகாரம் இது நீங்களும் செய்து பாருங்க சிம்புலான டேஸ்டி பணியாரம் இது.ஐ அப்படியா வெங்காயம் நானே செஞ்சது தான் ரொம்ப நன்றி அக்கா .

ஹர்ஷா, கவிதா அக்கா

ரொம்ப நன்றி.செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க
by Elaya.G

Nice recipe elaya.. மாவு சேர்க்காமல் ரவை மட்டும் சேர்த்தா spread ஆகாதா? r u frm karaikudi thiruppathur?

KEEP SMILING ALWAYS :-)

மாவதான் சுடுநீர் ல கரைக்குரோம்ல ,பழம் முட்டை லாம் சேர்குறதால அப்படி ஆகாது செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க ஆமா அந்த திருப்பத்தூர் தான் by Elaya.G

i'm apsa student

KEEP SMILING ALWAYS :-)

how can i send my recipes?

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் இளையா, நல்ல எளிமையான குறிப்பு வாழ்த்துக்கள்;)

உன்னை போல பிறரையும் நேசி.

அப்படியா நன்று .உங்க குறிப்புகளை இந்த லிங்கிற்கு அனுப்பவும் arusuvaiadmin@gmail.com

தேவி அக்கா மிக்க நன்றி by Elaya.G

இளையா சூப்பர் பா. கண்டிப்பாக இந்த வார விடுமுறையில் இது தான் மாலை சிற்றுண்டி.

வித்தியாசமான சூப்பர் குறிப்பு.
கண்டிப்பா செய்து பார்த்து சொல்றேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

THX ELAYA

KEEP SMILING ALWAYS :-)

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் தரவும் by Elaya.G

இளையா வித்தியாசமான சூப்பர் குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளையா உங்க ரவைபணியாரம் பாக்கயிலயே செய்துடனும்ன்டு முடிவு செய்துட்டேன் அதுனாலதான் செய்துட்டு பதிவு போடலாம் என்று இருந்தேன்

இன்று காலை பசியார எதுவும் செய்யல பார்த்தேன் இருக்கவே இருக்கே இளயாவுடய ரவை பனியாரம் செய்துட்டேன் நால்லா இருந்த்தது பக்கத்து வீடு ஹரிசன் வீடு அங்கேயும் குடுத்து விட்டேன் நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் நண்ரீ

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஸ்வர் அக்கா வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி
பல்கிஸ் ரொம்ப நன்றிங்க செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு by Elaya.G

tew VTNIOu

tew VTNIOu