WOULD U PLEASE HELP ME?

AKSHOPTFBR 8 ரூபாய்க்கும், CROMPTON 181 ரூபாய்க்கும், NAGARFERT 33 ரூபாய்க்கும் வாங்கினேன். HOLD பண்ணவா கொடுக்கவா? 1LAKH invest panninen 30000than irukku. help me please.

எனக்கும் ஷேர் மார்கட்டுக்கும் ரொம்பதூரம் எனக்கு என்னன்னு தெரியாது இருங்க நம் தோழர் தோழியர் வந்து சொல்வார்கள்

வணக்கம்..
உங்கள் கேள்வியை அழகாக தமிழில் கீழே உள்ள எழுத்துதவியை பயன்படுத்தி தமிழில் கேட்டால் எல்லா தோழியரும் வந்து உங்களுக்கு உதவுவார்கள்.இரண்டாவது,நீங்கள் தொடங்கியுள்ள இரு இழையும் ஷேர் மார்க்கெட் சம்மந்தப்பட்ட இழை என்பதால் ஒன்றாக தொடங்கி இருக்கலாம்,எல்லோரும் அதைப்பற்றி தெரிந்துக்கொள்ளவும்,கொஞ்ச நாட்கள் கழித்து புதிதாக வருபவர்கள் தெளிவாவதற்கும் உதவியாக இருக்கும்.
உங்களுக்கு தெரிந்ததையும் எங்களுடன் பகிர்ந்துக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.நான் கூறியது ஏதேனும் தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

இதுவும் கடந்துப் போகும்.

உங்களுக்கு தெரியாத பகுதிய விட்டுட்டு தெறிஞ்சதுக்கு மட்டும் பதில் சொன்னா நல்லா இருக்கும். எனக்கு தெரியல புரியலனு சொல்ல ஒரு feedback தேவையே இல்ல. if i hurt u forgive me. :(

KEEP SMILING ALWAYS :-)

இரண்டு இழைகளும் வேறு வேறு நேரத்தில் அனுப்பபட்டது. உங்கள் கருத்துக்கு நன்றி.

KEEP SMILING ALWAYS :-)

எங்களுக்கு தெரியல புரியலன்னு அனுப்ப காரணம் ..... சும்மா கருத்து தெரிவிச்சு இடத்த நிரப்பனும் என்றது இல்ல ... நாங்களும் இந்த அறுசுவை ல இருக்கிற எல்லா நண்பர்கள் மேலும் அவங்க கேள்விகள் பிரச்சனைகள் மேலும் அக்கறையா இருக்கிறம் என்றதுதான் ...அத்தோட நீங்க கேட்கிற கேள்விகளில இருந்து நாங்களும் எதாவது தெரிஞ்சுக்கலாமா என்றதும்தான் ,,,, அதுதான் இந்த அறுசுவை ....எல்லோரும் நண்பர்களா பேசி பழகுறாங்க ...பழக விரும்பிறாங்க.. உங்க கேள்விகளுக்கு விடை கிடைச்சுதா எண்டு அக்கறையா இருக்கிறாங்க ...அப்ப்பிடீன்னு நான் நினைக்கிறன்....நீங்க போட்ட comment அவங்கள hurt பண்ணுமோ இல்லையோ புதிய விசயங்களை இந்த அறுசுவையில தேடி படிக்கிற எங்களை போன்றவர்களை hurt பண்ணும் ......
Forgive me if i hurt u .....:(

உங்கள் கருத்துக்கு நன்றி ஜனனி. நான் எதிர்பார்ப்பது பதில் மட்டும்தான். அட்வைஸ் இல்ல. நான் என்னோட அவசர தேவைக்காக கேள்வி கேட்கும்போது பதில் இல்லாமல் இப்படி வேறு ஏதேதோ இருக்கறத பாத்தா எரிச்சல்தா வருது. நீங்க இப்படி reply பண்ணின நேரத்துல என்னுடைய கேள்விக்கு பதில் தேடியிருக்கலாம். இல்லனா உங்களுக்கு தேவையானவற்றை தேடி இருக்கலாம். தல வலியும் காச்சலும் தனக்கு வந்தாதா தெரியும்னு சொல்ற மாதிரி என்னோட ப்ராப்லம் எனக்குதா தெரியும். anyway so nice of u. thk u.

KEEP SMILING ALWAYS :-)

அன்பான வேண்டுகோள்.

இங்கே இரண்டு தரப்பினருக்கு வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

ஒன்று கேள்வி கேட்பவர்களுக்கு..

தயவுசெய்து உங்களது கேள்விகளை மற்றவர்களுக்கு புரியும்படி, கூடுமானவரையில் தமிழில் கேட்கவும். அப்போதுதான் தெரிந்தவர்கள் உதவ முன்வருவார்கள்.

மன்றத்தில் கேள்வி கேட்பவர்கள், மற்றவர்களுடைய உதவியை கேட்கின்றார்கள் என்றுதான் அர்த்தம். உதவி கேட்கும்போது சற்று பணிவு, பொறுமை வேண்டும். இங்கே உதவ முன்வருகின்றவர்கள் எல்லாம் ஊதியம் பெற்றுக் கொண்டு உதவுகின்றவர்கள் அல்ல. மற்றவர்களுக்கு பயனாக இருக்கட்டுமே என்று தன்னார்வத்தில் உதவ வருகின்றார்கள். எனவே கேள்விகள் அதிகாரத்தோரணையில் இல்லாமல், சற்று பணிவாகக் கேட்கப்படும்போது நல்ல பதில் கிடைக்கும்.

அதேபோல், கேள்விக்கு உடனே பதில் கிடைக்கும் என்பதற்கு இங்கே எந்த உத்திரவாதமும் இல்லை. சில பதிவுகளில் சிலர் "என்னுடைய கேள்விக்கு பதில் சொல்ல மாட்டீர்களா, அரட்டை மட்டும்தான் அடிப்பீர்களா?" என்றெல்லாம் அங்கலாய்த்து இருப்பார்கள். பதில் தெரிந்திருந்தால்தானே பதில் கொடுப்பார்கள் என்பதை யோசிப்பதில்லை. எல்லோரும் எல்லா நேரங்களிலும் ஆன்லைனில் இருப்பதில்லை. சில நேரங்களில் பதில் தெரிந்தவர்கள் அந்த பதிவை பார்ப்பதற்கு காலம் எடுக்கலாம். அதுபோன்ற நேரங்களில் பதில் கிடைக்க தாமதம் ஆகும். எனவே, கேள்வி கேட்பவர்கள் இதனை மனதில் கொண்டு கேள்வி கேட்கவும்.

இரண்டாவது வேண்டுகோள் பதில் கொடுப்பவர்களுக்கு.

தயவுசெய்து உங்களுக்கு பதில் தெரியாத கேள்விகளுக்கு எந்த பதிலுமே கொடுக்க வேண்டாம். "எனக்கு பதில் தெரியாது. வேறு யாராவது தெரிந்தவர்கள் வந்து சொல்வார்கள்" என்று வரும் பதில்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது கேள்வி கேட்டவரை மட்டுமன்றி, படிப்பவரையும் எரிச்சல் அடையச் செய்யும். தனது கேள்விக்கு ஏதோ பதில் வந்துள்ளதே என்று ஒருவர் ஆர்வமுடன் வந்து பார்க்கும்போது, வேறு யாராவது வந்து சொல்வார்கள் என்று இருப்பதை படித்தால் ஒருவர் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பதில் தெரிந்தவர் வந்து சொல்வார் என்பது எல்லோருக்குமே தெரியும். அதை சொல்வதற்கு ஒரு பதிவை வீணடிக்க வேண்டாம்.

கேள்வி புரியவில்லை. புரியும்படி கேளுங்கள் என்று கேட்பது தவறான விசயமில்லை. அது உதவும் நோக்கத்துடன் கேட்கப்படுகின்றது. கேள்வி கேட்டவர் சரியான பதில் கொடுக்காமல், 'புரியவில்லை என்றால் பேசாமல் செல்லுங்கள்' என்ற வகையில் பதில் கொடுப்பது அநாகரிகமான செயல். அதனை இங்கே அனுமதிக்க முடியாது.

விரைவில் அறுசுவை தளம் சில மாறுதல்களுடன் வெளிவர இருக்கின்றது. அப்போது இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு ஏதுவாக, மன்றத்தில் moderation வசதி கொண்டு வரப்படும். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற வரைமுறை இல்லாத பிரச்சனைக்கு அது தீர்வாக இருக்கும் என்று நம்புகின்றோம். ஒவ்வொரு பதிவும் மாடரேட் செய்யப்பட்ட பின்பே வெளியாகும். அதுவரை பிரச்சனைகள் இல்லாது, சுமூகமாக இந்த மன்றத்தினை எடுத்துச் செல்லுமாறு அனைவரையும் பணிவுடன் வேண்டுகின்றேன்.

அன்னிய செலவாணி முதலீடு லாபம் பெறாலம் மதம் முதலீடு 8% லாபம் 24 மதம் பெறாலம் 25 மதம் முதலீடு திரும்ப பெறாலம் நன் முதலீடு செய்து இருக்கோம் மேலும் தொடர்புக்கு என்யை தொடர்பு கொள்ளலாம் என்னக்கு 1 வருடமாக சரிய பணம் வருகிறது MY NO :8220994100 கம்பெனி உள்ள இடம் சென்னை AND தஞ்சாவூர் எதில் கமிஷன் உண்டு 2 % 24 மதம் பெறாலம்

மேலும் சில பதிவுகள்