நெய் சாதம்

தேதி: July 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (10 votes)

 

பாசுமதி அரிசி - நான்கு கப்
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று (சிறியது)
தயிர் - கால் கப்
பச்சை பட்டாணி - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி
மல்லி, புதினா - சிறிதளவு
பச்சைமிளகாய் - ஒன்று
பட்டை, கிராம்பு - தலா ஒன்று
ஏலக்காய் - மூன்று
உப்பு, நெய் - தேவையான அளவு


 

நெய் சாதம் செய்ய தேவையானவற்றை எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து வெங்காயம், மல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வதங்கியதும் தயிர் சேர்த்து கிளறி உப்பு சிறிது போடவும்.
தயிர் சேர்த்து கிளறிய பின்னர் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் வீதம் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொதித்ததும் ஊறிய அரிசியை நீரை வடித்து இதில் சேர்க்கவும். தீயை மிதமாக வைக்கவும்.
அரிசி பாதி வெந்து மேல் உள்ள தண்ணீர் வற்றி வரும் போது தீயை குறைத்து சிம்மில் வைத்து பேப்பரைக் கொண்டு மூடி 15 நிமிடம் தம்மில் விடவும்.
பதினைந்து நிமிடம் கழித்து சாதத்தை திறந்து கிளறி விடவும். சுடச்சுட நெய் சாதம் தயார். கோழிக் குருமா, மட்டன் குழம்பு, மீன் குழம்பு ஆகியவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமை பார்க்கவே சாப்பிடனும் போல தோணுது விரைவில் செய்துவிட்டு வரேன் வாழ்த்துக்கள் ருக்சனா அக்கா

சிம்ப்ளா அதே சமயம் சூப்பரா இருக்குங்க ....கண்டிப்பா செய்திட்து சொல்றேன்.....

நல்ல குறிப்பு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நெய் சாதம் பாக்கவே நல்லாஇருக்கு எங்கவீட்டிள் எல்லாருக்குமே நெய் சாதம் ரெம்ப புடிக்கும் ஆனா நான் செய்தா வெல்லையா வராது
உங்களோடய சாதத்தை பார்த்தா மல்லீகப்பு கலரிள் இருக்கு இப்படித்தான் எனக்கு வேனும்

பாஸ்மதி அரிசி என்ன பெயர் நல்லா சோரு நீட்டமா இருக்கே சொல்லமுடியுமா

விருப்பபட்டியலிலும் சேர்த்துவிட்டேன்
நன்றி மீண்டும் வருவேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நாளையிலிருந்து நோன்பு ஆரம்பமாவதால் தற்போதைக்கு நெய்சோறு செய்ய முடியாது,இன்ஷா அல்லாஹ் நோன்பு முடிந்தப்பின் செய்து பார்க்கிறேன்!குறிப்புக்கு வாழ்த்துக்கள்!

Eat healthy