8 மாத குழந்தைக்கு ஜலதோஷம் அவசரம் ப்ளிஸ்

வணக்கம் தோழிகளே, என் குழந்தைக்கு 8 மாதம் ஆகின்றது. இன்று காலையில் இருந்து என் மகள் முக்கில் இருந்து நீர் கொட்டுகின்றது. தும்மல் வேறு இருக்கின்றது. மிகவும் கஷ்டபடுகின்றாள். வீட்டு வைத்தியம் கூறவும்.

கொழுந்து வெற்றிலை,துளசி,கற்பூரவள்ளி, மிளகு (2) சீரகம் மிகவும் சிறிய அளவு, உப்பு. இதில் வெற்றிலை,துளசி,கற்பூரவள்ளியை விளக்கின் தணலில் வாட்டி எடுத்து அதிலிருந்து சில சொட்டு சாறு எடுத்து கொண்டு, மிளகு, சீரகம்,உப்பு (1கல்)மிகவும் சிறிய அளவு சுக்கு இவற்றை வறுத்து, பிழிந்து வைத்த சாற்றுடன் அரைத்து அதை சுத்தமான காட்டன் துணியில் வடிகட்டி கால் சங்கு புகட்டுங்கள். நல்ல குணம் தெரியும். இரவில், விக்ஸ் தைலம் சிறிது எடுத்து லேசாக சூடாக்கி குழந்தையின் மார்பிலும் முதுகிலும் மென்மையாக தடவி விடுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி கல்பனா அவர்களே, நான் சிங்கபூரில் இருப்பதால் நீங்கள் கூறிய பொருள்கள் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. வேறு இருந்தால் கூறவும்.உடனடியாக பதில் கொடுத்தற்க்கு நன்றி.

கவலைப் படாதீர்கள். எல்லா குழந்தைகளுக்கும் வரும் தொந்தரவுதான் இது.
வீட்டில் படுக்கை அறையில் Humidifier வாங்கி உபயோகிங்கள். குழந்தை இருக்கும் வீடுகளில் இது இருப்பது அநேக நேரங்களில் உதவும்.

அன்புடன்,
இஷானி

கல்பனா சொன்ன பொருட்கள் சிங்கப்பூரில் தேக்காவில் கிடைக்கும் என நினைக்கிறேன். ஆனால் விளக்கில் வாட்டுவதுதான் குழப்பம். கல்பனா விளக்கில்தான் வாட்ட வேண்டுமா?

நீங்களும் ஒரு பிரச்னையுடன் இருந்தீர்களே சரியாயிற்றா?

illiadin(Merck) ட்ராப்ஸ் guardian மற்றும் பாலிக்ளினிக்கில் கிடைக்கும் வாங்கி அதில் குறிப்பிட்ட மாதிரி உபயோகியுங்கள். ஃபார்மசிஸ்டிடம் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். வீட்டு வைத்தியம் தெரியவில்லை.

ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கொஞ்சம் சுட வைத்து அடுப்பை ஆப் செய்து விட்டு அதில் இரண்டு பீஸ் கற்பூரம் (அம்பிகா கற்பூரம் சைஸ்)போட்டுக் கரைக்கவும்,கை பொறுக்கும் சூட்டில் ஒரு விரலில் எடுத்து குழந்தையிம் நெஞ்சு,முதுகு,உள்ளங்கால்,உள்ளங்கை.நெற்றி,தொண்டை,லேசா மூக்கில் தடவவும்...இதில் நல்ல குணம் தெரியும்.ஈஸியான வழி.
ஓம வள்ளி இலை கண்டிப்பா மார்க்கெட்டில் கிடைக்கும் தேடிப் பார்க்கவும்,அதையும்,துளசியும் அரைத்து வடிகட்டு,தாய்பாலோடு காலை,மதியம் புகட்டினாலும் நல்ல எஃபக்ட் தெரியும்.

இதுவும் கடந்துப் போகும்.

சீதாலெஷ்மி, கல்பனா சொன்னப் பொள்கள் தேக்காவில், ஜோதிஸ்டோர் புஷ்பக்கடையில் கிடைக்கும் என்று நினைக்கிறேன், கேட்டுப்பாருங்கள்.

அன்புடன்,
குரு

//கல்பனா விளக்கில்தான் வாட்ட வேண்டுமா?//

தேன்மொழி, என் குட்டிங்களுக்கு சளி பிடித்த போது என் அம்மா இப்படி விளக்கில் வாட்டி தான் சாறு எடுத்து தந்தார். இலைகளை நெருப்பில் வாட்டுவதால் சாறு எளிதில் பிழிந்தெடுக்கலாம். அதனால் நெருப்பில் வாட்ட சொல்கிறார்கள். தவிர, கைக்குழந்தைக்கு தரும் எந்த பொருளையும் நேரடியாக அப்படியே தருவதில்லை. ஏதோ ஒரு விதத்தில் சூடு பண்ணி தான் தருவோம். அந்த நோக்கில் அப்படி சொன்னார்களோ

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சீதா லஷ்மி கற்பூர வள்ளி இலை, துளசி இலை, இதெல்லாம் மிகவும் கார தன்மை வாய்ந்தது. 8 மாதத்தில் எல்லாம் மிள்கு 2 எல்லாம் சேர்க்ககூடாது.குழந்தைகள் திண்ரும். வெற்றிலையில் விக்ஸ் தடவி அதனை விளக்கில் காட்டி சிறிது திரவமாக வரும் போது கை பொருக்கும் சூட்டில் குழந்தையின் இரு பக்க வாட்டிலும், நெஞ்சிலும் தடவி விடவும். என் குழந்தைக்கு 5 மாதத்தில் இருந்தே இதை தான் என் அம்மா செய்வார்கள். சூடு செய்வதால் வீக்ஸ் ஒன்றும் ஆகாது. பயப்பட வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்