மயோனைஸ் மற்றும் அன்னாசிப்பூ குறித்து

மயோனைஸ் எந்த பிரிவில் கிடைக்கும்பிரெட்டுடன் சாப்பிடும் ஹமூஸ் மற்றும் கார்லிக் பேஸ்ட் தயாரிப்பது எப்படி ?அவற்றிக்கான பொருள்கள் எந்த பிரிவில் கிடைக்கும்

நூறு கிராம் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் கழுவி ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்து விட்டு அதனுடன் அரை டம்ளர் கடலை வேக வைத்த நீர், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, ஒரு பெரிய எலுமிச்சையின் சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளை எள்ளு விழுது, மூன்று பூண்டு பல் எல்லாம் சேர்த்து நைஸான விழுதாக அரைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து வைப்பதுதான் HUMMOUS.
பூண்டு பேஸ்டுக்கான ரெசிபி கேட்டு சொல்கிறேன்.

Vazhga Tamil!!!

இங்கு குவைத்தில் முன்று பெரிய பூண்டு பல்லை அரைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் மயோனைஸ், ஒரு ஸ்பூன் புளித்த தயிர் இரண்டுடனும் கலந்து செய்கிரார்களாம்.

Vazhga Tamil!!!

I used to go through all your recipes. Congrats. i just want to know which spice is called "Annacippu"

I'll take a snap of annsipu and publish here for your reference shortly....

Vazhga Tamil!!!

மன்றங்களில் படங்களை இணைக்கும் உரிமை, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு தற்போது admin ற்கு மட்டுமே இருக்கின்ற காரணத்தால், திருமதி. சித்ரா துரை அவர்கள், தாங்கள் கேட்டு இருந்த அன்னாசிப்பூ படத்தை எனக்கு அனுப்பியுள்ளார்கள். அந்தப் படத்தை கீழே இணைத்துள்ளேன். இதனை அன்னாசிப்பூ அல்லது அன்னாசி மொக்கு என்று அழைப்பார்கள். வாசனைக்காக பிரியாணி, குருமா போன்றவற்றில் சேர்ப்பார்கள்.

<img src="files/pictures/annasi_mokku.jpg" alt="annasi mokku" />

மேலும் சில பதிவுகள்