நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

நட்சத்திரக் கூட்டம் இல்லாமல்
நிலா வருமா?
நண்பர் கூட்டம் இல்லாமல் ஒரு
சுப தினமா?

நண்பர்கள் இமை!
விலகுவது மீண்டும் சேரத்தான்..

நண்பர்கள் சூரியன்!
கண்ணுக்குத் தெரியாமல்போவது
மீண்டும் உதயமாகத்தான்..

நட்பு ஓர் மேகம்!
காற்றினால் காயம்பட்டால்கூட மழைபோல் அழத்தான்

நட்பு ஓர் இரைப்பை!
அருகிலிருந்தாலும் இருதயத்தை இரையாக்காமலிருக்கத்தான்

நட்பு ஒரு காகம்!(அறுசுவை)
எல்லாம் பகிர்ந்து கொள்ளத்தான்!

நட்பு ஓர் உளி!
செதுக்குவது காயபடுத்த அல்லாமல் அழகாக்கத்தான்...

நண்பர்களும் ஓர் விசயத்தில் மனைவி!
சண்டைகள் போடுவது
சமாதனமாகத்தான்

நட்பு கைவிரல்கள்!
கண் கலங்கினால் துடைக்கத்தான்.

நட்பு ஓர் இருதயம்!
யார் வாழவோ தான் துடிக்கத்தான்.

நட்புன்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு?ஷேக்குன்னா யாருன்னு தெரியுமா உங்களுக்கு?(தளபதி பட வசனம்போல் படிக்கவும்)..

(நண்பேன்டா.....!!!!)

அறுசுவை ஆலமரத்தின் அட்மின் அண்ணாவிற்கும்,
அறுசுவையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!...

காலை வணக்கங்கள்..
முதலில் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..மற்றும் என் அறுசுவை தோழிகள் ,தோழர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..
இன்று போல் என்றும் அனைவரும் இனிதே பழகிட வேண்டுகிறேன்..
அழகான கவிதை..எப்படின்னா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது..போங்க கலக்கிட்டீங்க..நான் ஆகஸ்ட் 1ந் தேதின்ன உடனே நினைச்சேன் இப்படி ஒரு இழை ஆரம்பிக்கனும் வெள்ளி,சனியிலன்னு நீங்க ஆரம்பிச்சுட்டீங்க..பரவாயில்லை..
அண்ணிக்கும் என் வாழ்த்துக்களை தெரியப்படுத்தவும்.இப்படி ஒரு இழை ஆரம்பித்ததற்கு நன்றி கலந்த வணக்கங்கள்.

இதுவும் கடந்துப் போகும்.

கவிதை அருமை ஷேக்...
உங்களுக்கும், அறுசுவை தோழிகளுக்கும், அட்மின் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..!!!!

கவிதாசிவகுமார்.

anbe sivam

எப்படி இருக்கீங்க?

உங்களுக்கும், அறுசுவை தோழிகளுக்கும், அட்மின் மற்றும் குழுவினருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்......

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ஹாய் ஷேக் அண்ணா, கவிதை சூப்பர் ;)

அறுசுவையின் தோழி தோழர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ;))

உன்னை போல பிறரையும் நேசி.

நண்பா,
அரிச்சுவடி படிக்க ஆரம்ப பாட சாலை,
ஆரம்பத்தில் நீ யாரென தெரியவில்லை,
இன்று நீ இல்லாமல் எதுவும் தெரியவில்லை,
ஈன்ற தாயின் அன்பை, அன்பு நண்பா,
உன்னாலும் தர முடியுமென காட்டி,
ஊட்டி விடுவாயே உன் வீட்டு சாதத்தை,
எத்தனையோ வசவுகள் அடிகள் வாத்தியிடம்,
ஏங்கி நிற்பவனை தடவி ஆறுதல் சொல்வாயே,
ஒருநாள் என்னிடம் சொல்லிதானே சென்றாய்,
ஓடிவிட்டாயே எனைவிட்டு ஏன் சென்றாய் எமனிடம்
ஔடதமாய் மனதிற்க்கு மருந்திட்டவனே
ஆயுதமாய் பேரன்பாய் இருந்தவனே...
நீ எனை விட்டு சென்றாலும் நான் என்றும் உன் நினைவில்...

அன்புடன்
THAVAM

அறுசுவையின் தோழர் தோழியர் அனைவருக்கும், அறுசுவையை சுவைபட நடத்தி வரும் அட்மின் குழுவினருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

Wish you all the very happy friendship day to all my arusuvai friends and admin groups.

FRIENDSHIP is like a tree… It is not MEASURED on how TALL it could be, but is on how DEEP the ROOTS HAVE GROWN…
HAPPY FRIENDSHIP DAY

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அறுசுவையை சேர்ந்தா அனைத்து தோழிகளே!!:) தோழர்களே!!:) அனைவருக்கும் நண்பர்கள் தினவாழ்த்துக்கள்:)))))))))) இன்று போல் என்றும் என் வாழ்நாள் உங்களின் நட்பு இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்,,,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

அறுசுவையின் அனைத்து தோழர், தோழிகளுக்கு நண்பர்கள் தினநல்வாழ்த்துகள்

மேலும் சில பதிவுகள்