கர்ப்பவாய்(cervix) திறப்பு பற்றி சொல்லுங்கள் தோழிகளே

ஹாய் தோழிகளே
எனக்கு கர்ப்பவாய் திறப்பு பற்றி கூறுங்களேன், எனக்கு இது 37 வது வாரம்,எனக்கு சில நேரம் அடிவயிறு ரொம்ப கடினமாகவும்,அதேசமயம் குழந்தை வயிற்றை இழுத்து பிடிப்பது(contraction)போலவும் உள்ளது ஆனால் வலி இல்லை,சில பேர் சொல்லுகிறார்கள்,சிலபேருக்கு கர்ப்பவாய் 8 cm திறக்கும் வரை கூட வலி தெரியாது என்கிறார்கள்,37வது வாரத்திலேயே கர்ப்பவாய் திறக்குமா கூறுங்களேன்?

எனக்கும் 38வது வாரம் வலி இருந்தது, ஆனா அது ஃபால்ஸ் பெயின் கொஞ்ச நேரத்தில் பெயின் இல்லாம போச்சு. ஆனா செக் பண்ணிட்டு காண்ட்ராக்‌ஷன் இருந்துட்டே இருக்குறதா டாக்டர்ஸ் சொன்னாங்க... எனக்கு ஆனா வலி இல்லை. அட்மிட் பண்ணி செக் பண்ணிட்டே இருந்தாங்க டெலிவெரி பெயின் வந்துடும்னு... மணிக்கணக்கா காண்ட்ராக்‌ஷன் இருந்தது, வலி மட்டும் வரவே இல்ல. இது போல் நிலை இருக்கலாம்... அதனால் டாக்டரை உடனே பாருங்க. ஏன்னா பெயின் இல்லாம காண்ட்ராக்‌ஷன் இருந்தா பெயின் எடுத்து டெலிவெரி ஆக ஊசி போடுவாங்கன்னு கேட்டிருக்கேன். கர்ப்ப வாய் சிலருக்கு 5, 6 மாசத்தில் கூட திறக்கும். அதனால் குறை பிரசவம் ஆவதும் உண்டு. அதை கணக்கில் எடுக்க வேண்டாம். இப்போ 37 வாரம் பூர்த்தி ஆகிட்டதால் எப்ப வேண்டுமானாலும் வலி வரலாம்... தப்பில்லை. டாக்டரை உடனே பாருங்க, காண்ட்ராக்‌ஷன் தான் இருக்கு, பெயின் இல்லன்னு சாதாரணமா இருக்க வேண்டாம் மஞ்சு. பயப்படாதீங்க... டாக்டரை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டியர் வனிதா,
எனக்கு முதல் ஆளா வந்து பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி வனிதா,நான் டாக்டர் கிட்ட கேட்கிறேன்,எனக்கு 1 வாரமாக மாலை நேரத்தில் மார்பகதுக்கு கீழே கேஸ் பிராப்ளம் போல வலி இருக்கிறது,1 மணி நேரத்தில் சரி ஆகிவிடுகிறது,அதனால் 2 நாடகளாக பசிக்கவிடாமல் மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிட்டு கொண்டே இருந்தேன்,அப்படி இருந்தும் அந்த வலி வருகிறது,இது கேஸ் பிராப்ளம் தானா?எனக்கு செர்விக்ஸ் ஓப்பன் அதுவாகவே ஆகி,வலி வராமல் குழந்தை அதுவாகவே வெளி வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது,2 நாட்கள் கழித்துதான், டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் குடுத்து இருக்கிறார்கள்,இங்கு ஆலோசனை சொல்ல பெரியவர்கள் யாரும் இல்லை,என்னுடைய கணவர் வேறு வேலை பளு காரணமாக இரவு 7.30க்கு மேலே தான் வருவார்,முதல் பைய்யன் வேறு இருக்கிறான்,

எனக்கு இப்பொழுது எல்லாம் குழந்தை அசைவு மிகவும் கீழே அதாவது தொடை ஆரம்பிக்கும் பகுதியில் தெரிகிறது,எனக்கு வேஜினா வேறு சற்று பெரிதாக இருப்பதுபோல் தோன்றுகிறது,ஆலோசனை கூறுங்கள் தோழிகளே

ஹாய் மஞ்சு
எனக்கு 37ஆவது வாரத்தில் 3cm ஓபன் ஆகி இருப்பதாக சொன்னார்கள் அவ்வப்போது அடி வயிறு லேசாக வலி இருந்தது அடுத்த நாளே அட்மிட் ஆக சொன்னார்கள் வலிக்கு மாத்திரை கொடுத்தார்கள் கடவுள் அருளால் அழகான பெண் குழந்தை பிறந்தது எனக்கு குழந்தை பிறந்து 9 நாட்கள் ஆகின்றது 37 ஆவது வாரத்தில் ஓபன் ஆவதற்க்கு அதிக வாய்ப்புகள் உள்ளது ஒன்றும் பயப்பட வேண்டாம் கடவுள் அருளால் நிச்சயம் நார்மல் டெலிவரி ஆகும்

டியர் நஃபி,
உங்களுக்கு பெண்குழந்தையா?எனக்கு பெண்குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும்,உங்க பொண்ணுக்கு என்ன பெயர் வச்சி இருக்கீங்க?எவ்வளவு எடை இருந்தாள்?எத்தனை மணிநேரம் நீங்க நார்மல் டெலிவரிக்காக போராடுனீங்க?ரொம்ப கேள்வி கேட்டுட்டேன்னு நினைக்கிறேன்,குழந்தையை நல்ல படியா பார்த்துக்கோங்க நஃபி.

//நஃபி 1 முக்கியமான சந்தேகம் ,இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்//

எனக்கு சில நேரங்களில் தான் குறிப்பாக மாலை நேரங்களில் அல்லது காலை எழுந்தவுடன் தான் அடிவயிறு வலிக்கிறது அதுவும் நின்று கொண்டு இருந்தால் தான் வலிக்கிறது,மற்ற நேரங்களில் அடிவயிறு வலிப்பதில்லை,உங்களுக்கும் அப்படி தான் இருந்ததா?

மஞ்சு பயபடாமல் தைரியமாக இருங்கள். உங்களுக்கு ப்ளீடிங் இருந்தாலோ, தண்ணீர் குடம் உடைந்தாலோ உடனே டாக்டரை பாருங்கள். எனக்கு வலியே வரவில்லை, வலி வருவதற்கு tablet குடுத்து, gel வைத்து, ட்ரிப்ஸ் ஏத்தி அப்புறம் தான் severe labour pain வந்து குழந்தை பிறந்தான் . புதன் கிழமை அட்மிட் ஆனேன், வெள்ளிகிழமை evening தான் தருண் பிறந்தான். முதல் குழந்தை அதனால கொஞ்சம் கஷ்டமா இருந்தது, உங்களுக்கு இரண்டாவது குழந்தை தானே அதனால அவ்ளோ கஷ்டம் இருக்காது, குழந்தை பிறக்க வேண்டிய நேரத்தில ஈசிய பிறந்திடும், கவலைபடாதிங்க

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

இந்த நேரத்தில அடிவயிறு வலிக்க தான் செய்யும், பயபடதிங்க. குழந்தை தலை திரும்பி வர்றதால இருக்கலாம். ரொம்ப pain எ இருந்த டாக்டர் பாருங்க,.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

கார்த்திகா,நானும் பஹ்ரைன்ல தான் இருக்கேன்,தருணுக்கு இப்ப எத்தனை வயசு ஆகுது,தருண் இங்க பிறந்தானா இல்லை இந்தியாவிலா?
நான் ரிப்பால இருக்கேன் கார்த்திகா,நீங்க?நான் டாக்டர் சந்துகிட்ட காட்டிட்டு இருக்கேன்,2 நாளா பிரசவவலி அனுபவிச்சீங்களா கார்த்திகா?ரொம்ப கஸ்டம்தான்,எனக்கு முதல் பிரசவம் சிசேரியன் தான்,BP அதிகமாகி 35வது வாரத்தில கர்பப்பை அதுவாகவே 4cm ஓப்பன் ஆகி,நார்மல் பண்னினா குழந்தைக்கு வீசிங்க் வந்துடும்னு சிசேரியன் பண்ணினாங்க,ஆனால் 4cm ஓப்பன் ஆகியும் எனக்கு வலி வரலை,அதுதான் இந்ததடவையும் வலி வராதோனு எனக்கு சந்தேகம்.

உங்கலுக்கு வலி இல்லாதபோது நீங்க எப்படி ஹாஸ்பிட்டல் போயி டெலிவரி ஆகப்போகுதுன்னு கண்டுபிடிச்சீங்க?உங்களுக்கு பிளீடிங் ஏதாவது இருந்ததா?

நாங்க இங்க Alshifa hospital பின்னாடி இருக்கோம். தருண் பிறந்தது மதுரை ல தான். எனக்கு duedate நவம்பர் 14 . ஆனால் வலியே வரலை, adequate water level , blood pressure , heartbeat எல்லாம் சரியா இருந்ததால இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணலாம்னு சொன்னங்க. அதனால நவம்பர் 18 அட்மிட் ஆனேன். அட்மிடானப்புரம் தான் செர்விக்ஸ் ஓபன் ஆச்சு. நவம்பர் 20 evening தான் தருண் பிறந்தான். இப்போ அவனுக்கு 20 months ஆகுது. என்னோட friend Dr சந்து கிட்ட தான் treatment எடுத்தாங்க, ஆனா இப்போ அவங்க பஹ்ரைன் ல இல்ல. உங்களுக்கு இன்னும் 2 நாளில் appointment இருக்குள்ள, அப்போ dr கிட்ட கேளுங்க. அவங்க கரெக்ட் a சொல்லுவாங்க. குழந்தை பிறந்த உடனே தெரியபடுத்துங்க . என்ன குழந்தைன்னு சொன்னங்களா? hospital கொண்டு போறதுக்கு தேவையான திங்க்ஸ் ரெடி பண்ணி வச்சிக்குங்க. தைரியமா இருங்க, பிரசவ வலிய நினைச்சு பயபடாதிங்க, எல்லாம் கொஞ்சம் நேரம் தான்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

நாங்க இங்க Alshifa hospital பின்னாடி இருக்கோம். தருண் பிறந்தது மதுரை ல தான். எனக்கு duedate நவம்பர் 14 . ஆனால் வலியே வரலை, adequate water level , blood pressure , heartbeat எல்லாம் சரியா இருந்ததால இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணலாம்னு சொன்னங்க. அதனால நவம்பர் 18 அட்மிட் ஆனேன். அட்மிடானப்புரம் தான் செர்விக்ஸ் ஓபன் ஆச்சு. நவம்பர் 20 evening தான் தருண் பிறந்தான். இப்போ அவனுக்கு 20 months ஆகுது. என்னோட friend Dr சந்து கிட்ட தான் treatment எடுத்தாங்க, ஆனா இப்போ அவங்க பஹ்ரைன் ல இல்ல. உங்களுக்கு இன்னும் 2 நாளில் appointment இருக்குள்ள, அப்போ dr கிட்ட கேளுங்க. அவங்க கரெக்ட் a சொல்லுவாங்க. குழந்தை பிறந்த உடனே தெரியபடுத்துங்க . என்ன குழந்தைன்னு சொன்னங்களா? hospital கொண்டு போறதுக்கு தேவையான திங்க்ஸ் ரெடி பண்ணி வச்சிக்குங்க. தைரியமா இருங்க, பிரசவ வலிய நினைச்சு பயபடாதிங்க, எல்லாம் கொஞ்சம் நேரம் தான்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

டியர் கார்த்தி எப்படி இருக்கீங்க?நான் 1 தடவை AlShifa Hospital வந்து இருக்கேன்,குழந்தை பிறந்ததும் கண்டிப்பா உங்களுக்கு சொல்லுறேன்,எங்க அம்மா டெலிவரிக்கு வர்றதா இருக்காங்க,ஆனால் அவங்களுக்கு இன்னும் விசா கிடைக்கலை,இப்ப விசா குடுக்குறதுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் போட்டு இருக்காங்க,

கார்த்திகா எனக்கு 1 சின்ன சந்தேகம்,இங்க ஹாஸ்பிட்டல்லயே குழந்தைக்கு தேவையான எல்லா பொருட்களும் குடுப்பாங்க,எனக்கு சாப்பாடு கூட ஹாஸ்பிட்டல்ல தான் குடுப்பாங்கன்னு சொன்னங்க,நான் Flask கொண்டுபோகணுமா?அதுதான் எனக்கு சந்தேகம்,Flask எதுக்கு பொதுவாக நம்ம ஊர்ல டெலிவரி ஆனவங்களுக்கு உபயோகிப்பாங்க

மேலும் சில பதிவுகள்