ரவா லட்டு

தேதி: August 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (19 votes)

 

ரவை - ஒரு கப் (150 கி)
சர்க்கரை - அரை கப் (75 கி)
துருவிய தேங்காய் - அரை கப்
முந்திரி - 7 அல்லது 8
உலர்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் - 1 அல்லது 2
நெய் - தேவைக்கு ஏற்ப
பால் - தேவைக்கு ஏற்ப


 

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் ரவையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர், அதே கடாயில் துருவிய தேங்காயை ஈரம் இல்லாமல் வறுத்துக் கொள்ளவும்.
பிறகு துருவிய தேங்காயுடன், வறுத்து வைத்துள்ள ரவை, முந்திரி, திராட்சை மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரையுடன் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். (இங்கு, நான் ஏலக்காயை தட்டி, உள்ளே உள்ள விதைகளை மட்டும் சேர்த்து இருக்கிறேன்.) இவற்றை இளம் சூட்டில் ஒன்றாக கலக்கவும்.
பிறகு அந்த கலவையில் சிறிதளவு பால் சேர்த்து கொள்ளவும்.
பிறகு கலவையை வேறொரு தட்டுக்கு மாற்றி இளஞ்சூட்டிலேயே சிறு, சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
சுவையான ரவா லட்டு தயார். ஆறியதும் சிறிது கெட்டியாகும்.

இந்த ரவா லட்டு விரைவிலேயே, எளிதாக செய்து விடலாம். இங்கு குறிப்பிட்டுள்ள அளவு எடுத்தால் 10 - 12 லட்டுகள் வரும். பால் சேர்த்து செய்திருப்பதால் ஒன்றிரண்டு நாட்களில் சாப்பிட்டால் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹர்ஷா ரவா லட்டு சூப்பரா இருக்கே. சீனி சேர்த்து இளஞ்சூட்டுல இருக்கறதுனால சர்க்கரை கரைந்துடுமா. ஒரு முறை இதுமாதிரி செய்து பார்த்து இருக்கேன் சரியா வரல அதான் ஒரு டவுட்.

நான் இரண்டு நாள் முன்னாடி தான் ரவாலட்டு செய்தேன். :) ஒரே வித்தியாசம்... நான் ரவையையும் சர்க்கரையையும் மிக்ஸியில் போட்டு பொடிச்சுடுவேன், நீங்க அப்படியே செய்திருக்கீங்க... அவ்வளவு தான். நல்ல குறிப்பு. சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹர்ஷா..

என்னவருக்கு விருப்பமான ஸ்வீட் இது.. நானும் இப்படித்தான் செய்வேன் ஆனால் தேங்காய் சேர்த்தது இல்லை... தேங்காய் சேர்த்து செய்து பார்க்கிறேன்.. குறிப்புக்கு நன்றி.. :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

வினோ,
முதலாவதாக வந்து பதிவு போட்டதற்கு நன்றி.ஆமாம்,இளம்சூட்டில் சர்க்கரை கரைந்துவிடும்.ட்ரை பண்ணி பாருங்க.

வனிதா,
நீங்களும் ரவா லட்டு செய்தீங்களா?சூப்பர்.நான் ரவை,சர்க்கரையை பொடித்து செய்ததில்லை.உங்க சமையல்னா கண்டிப்பா சுவையா தான் இருக்கும்.உங்க முறையில் கண்டிப்பா ட்ரை பண்றேன்.உங்க பதிவுக்கு நன்றி.

சாந்தினி,
எப்படி இருக்கீங்க?என் அண்ணனுக்கும் ரவா லட்டுனா ரொம்ப பிடிக்கும்.தேங்காய் சுவை பிடிக்கும்னா தேங்காய் சேர்த்து செய்து பாருங்க.நல்லா இருக்கும்.உங்க பதிவுக்கு நன்றி.

அன்பரசி,

வனிதா மேடம் போலே பொடித்து தான் நானும் செய்வேன்..

வாழ்த்துக்கள் :-))

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
//வனிதா மேடம் போலே பொடித்து தான் நானும் செய்வேன்..//
ஓ! அப்படியா?
உங்க வாழ்த்துக்கு நன்றி.

ரவா லட்டு சூப்பரா ஈசியா இருக்கு நான் இதுவரை லட்டு செய்தது இல்லை உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன் அன்பரசி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சேம் ச்வீட்.. எங்க வீட்டிலேயும் இதே ப்ளேட் இருக்கே.. நீங்க, இல்லைனா லாவியா இருக்கும்னு நினைத்தேன்.. கவிதான் வித்தியாசமா வைத்து இருப்பாங்களே. ;) செமையான குறிப்பு.. ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குமாரி,
ரவா லட்டு செய்முறை ரொம்ப ஈசிதான்.கண்டிப்பா செய்து பாருங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி,குமாரி.

ரம்ஸ்,
நீங்களும் இதே டின்னர் செட்தான் வச்சிருக்கீங்களா?சேம் பின்ச். ;-) வீடு மாத்தினதால எல்லாம் புதுசு வாங்கிட்டோம்,அதான். :-)
உங்க பதிவுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி,ரம்ஸ்.

செய்து சாப்பிட்டாச்சு ஹர்ஷா. ;) சூப்பர். நீங்க சொன்ன மாதிரியே செய்முறை ரொம்ப ஈசியா இருந்தது. படம் அனுப்பி இருக்கிறேன், பாருங்க.

‍- இமா க்றிஸ்

இமா,
அதுக்குள்ள செய்துட்டீங்களா?பிடிச்சிருந்ததா?ஃபோட்டோ பார்த்தேன்.நான் செய்ததை விட ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க.ப்ரசண்ட் செய்திருப்பதும் அழகா இருக்கு.ஃபோட்டோவுடன் உங்க பின்னூட்டம் கண்டு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.தேங்க்ஸ் இமா.

அன்பு, ரவை’னா எனக்கு பிடிக்கும் உங்களுக்கு தெரியும் தானே, ஒரு பார்சல் பண்ணிருக்கலாம் தானே, ஒரு முறை இதை தேடி அறுசுவையை ஒரு ரவுண்டே வந்தேன், கிடைக்கலை. கண்டிப்பா ட்ரை பண்றேன். ஸ்பெசிமென் தான் தேடனும். :)

அன்புடன்
பவித்ரா

நல்ல குறிப்பு அன்பரசி

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பவி,

//அன்பு, ரவை’னா எனக்கு பிடிக்கும் உங்களுக்கு தெரியும் தானே, ஒரு பார்சல் பண்ணிருக்கலாம் தானே,//

உங்களுக்கு ரவை பிடிக்குமா?சரி,அடுத்தமுறை ரவை வாங்கும் போது உங்களுக்கும் சேர்த்து 1 கேஜி வாங்கி அனுப்புறேன்.ஓகேவா?

//ஒரு முறை இதை தேடி அறுசுவையை ஒரு ரவுண்டே வந்தேன், கிடைக்கலை.//

அப்படியா?தெரிந்திருந்தால் இந்த குறிப்பை முன்பே அனுப்பியிருந்திருப்பேனே,பவி.

//ஸ்பெசிமென் தான் தேடனும். :)//

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க.ஸ்பெசிமென் தேடி அலைய வேண்டியிருக்காது. ;-)

பதிவுக்கு நன்றி.கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க.சரியா?

ஆமி,
தூங்கலையா?நோன்பு எப்படி போகுது?பதிவுக்கு நன்றி.

ரவா லட்டு முந்திரி மற்றும் திராட்சை கண்ணுடன் முழுச்சி முழுச்சி பார்க்குது......

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சூப்பர் ரவா லட்டு தேங்காய் சேர்த்து வித்தியாசமா செய்து இருக்கீங்க இந்தமுறையில் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

அன்பு ரவா லட்டு சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்,நானும் ரவையையும்,சீனியும் பொடித்து நெய் சேர்த்து பிடிப்பேன்,நீங்க பால்,தேங்காய் சேர்த்து செய்திருக்கீங்க இதையும் ட்ரை பன்னி பார்க்கிறேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவண்யா,
உங்க வாழ்த்துக்கு நன்றி.

ஃபாத்திமா அம்மா,
கண்டிப்பா இந்த முறையிலும் செய்து பாருங்க.உங்க பதிவுக்கு நன்றி.

ஸ்வர்ணா,
நான் யூஸ் பண்ண ரவை மிகவும் சன்னமா இருக்கும்.அதனால் அப்படியே சேர்த்து உருண்டை பிடிச்சேன்.பால்,தேங்காய் சேர்த்து செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.

அழகா பண்ணி காட்டி இருக்கீங்க, பாக்கவே நல்லா இருக்கு. இது சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது, சீக்கரம் பண்ணிடறேன் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் அன்பு,எப்படி இருக்கீங்க?குட்டீஸ் எப்படி இருக்காங்க?

ரவா லட்டு சூப்பராயிருக்கு அன்பு.நான்தான் பர்ஸ்ட் வோட் பண்ணினேன்டா.பதிவு

போடதான் லேட்டாயிடுச்சு.போட்டோஸ் ரொம்ப அழகாயிருக்கு அன்பு,சுவையும்

அசத்தல்.நாங்க தேங்காய் சேர்க்காம செய்வோம்டா.இனிமேல் தேங்காய் சேர்த்து

செஞ்சு பார்க்கிறேன்டா.பார்த்தாலே சாப்பிடனும் போல ஆசையாயிருக்கு

அன்பு,ரொம்ப அழகா செஞ்சு காட்டியிருக்கீங்க.பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் அன்பு.

அன்புடன்
நித்திலா

ஹர்ஷா, சூப்பராக இருக்கு நீங்க செய்த ரவா லட்டு, எனக்கொரு தட்டு ப்ளிஸ்.

சுகி,
ரவா லட்டு சீக்கிரமா செய்து சாப்பிடுங்க.சரியா?கிடைத்த கொஞ்ச நேரத்திலும் வந்து பதிவு போட்டு இருக்கீங்களே.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

நித்து,
நீங்க எப்படி இருக்கீங்க?நானும் குட்டீஸும் நலம்.முதல் ஓட்டு உங்களுடையதுனு எனக்கு நல்லா தெரியும்.நன்றி.முதல் 5ஸ்டார் இருந்த போது நீங்க வேறு இழையில் பதிவு போட்டுட்டு இருந்தீங்க.அதனால் நீங்க தான்னு கெஸ் பண்ணிட்டேன்.கண்டிப்பா ரவா லட்டு செய்து சாப்பிட்டு எப்படி இருந்ததுனு வந்து சொல்லுங்க.உங்க அன்புக்கும்,பதிவுக்கும் மிக்க நன்றி.

ஜீவிஷ்,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.லட்டு வேணுமா?இல்ல,தட்டு வேணுமா?

i have also tried it b4...
i think it was an easy procedure

அன்பு, ரவா லட்டு செய்து சாப்ட்டாச்சு பா :) அம்மாவோட செய்முறை.இருந்தாலும் ஒருநாளும் பக்கத்தில் இருந்து பார்த்ததில்லை. உங்களோட ஸ்டெப் பை ஸ்டெப் செய்முறையை பார்த்து முதல் முறை ட்ரை பண்ணேன். உருண்டை மட்டும் பால் கொஞ்சம் அதிகமானதால இளகின மாதிரி இருந்தது. இப்ப சரி ஆய்ருச்சி. பொண்ணுக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு பா. சிம்பிள் & சூப்பர் டேஸ்ட் ரெசிப்பிக்கு நன்றிகள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.