தேச பக்தி பாடல் போட்டி helpme

ஹாய் தோழிகளே எல்லாரும் நலமா என் குழந்தை முதலாம் வகுப்பு படிக்கிறால் அவளுக்கு 10 தேதி தேச பக்தி பாடல் போட்டி வருகிறது பாடல்கள் எந்த வெப்சைட்டில் எடுப்ப்து உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் 12 தேதி fancy dress competition வருகிறது எனக்கு ஐடியா தாருங்கள் தோழிகளே

கூகுளில் போய் தேடினால் கிடைக்குமே .முயற்ச்சித்து பாருங்களேன்.

என்னிடம் பாரதியார் பாரதிதாசன் கவிதைகள் இருக்கு. அதுல ஏதாவது கவிதை தேவைபட்டா சொல்லுங்க தரேன்.

KEEP SMILING ALWAYS :-)

ஃபர்வின்
கூகுளில் தேசபக்திபாடல்கள் என தேடிப்பாருங்கள் கிடைக்கும்.
என் விருப்பம்,பாரதியின் பாடல்கள் அதிகம் தேசப்பற்றை சார்ந்ததே.....ஒன்றாம் வகுப்பு எனும்போது 2பேரா எடுத்து கொடுத்தால் மனதில் நிருத்தி பாட வசதியாக இருக்கும்.
புதிது என்றால் ஏ.ஆர் ரஹ்மானின் வந்தே மாதரம்"இங்குமங்கும் பறவைபோல் சுற்றிசுற்றித்திரிந்தேன்..."இது மிக நன்றாக இருக்கும்..
பாரதின்னா"வெள்ளிப்பனி மலை மீதுலாவுவோம் அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்..."இது நன்றாக இருக்கும்.
பாரதி மற்றும் ரோஜா படத்தில் வரும் தேச பற்று பாட்டையும் எடுத்துக்கலாம்.........
பேன்ஸி டிரஸ்னா,,,உலகு வெப்பமயமாதலை பிரதிபலிக்குமாறு செய்யலாம்.இன்னும் ஐடியா வந்தா சொல்கிறேன்ப்பா.........
உங்களுக்கு இவை பிடித்துள்ளதான்னு முதலில் தெரியனும்........:-))

ரொப்ம்ப நன்றி அஷ்வதா நாகராம் ரேனுகா உடனே வந்து பதில் கொடுத்ததுக்கு உங்க்ளிடம் உள்ள க்விதைகளை என்க்கு அனுப்புங்கபா உங்களுக்கு தெரிந்த ஐடியாவை எனக்கு சொல்லுங்கள் ப்ளீஸ் குறைவான் நாட்களே உள்ளன உங்களுக்கு தெரிந்த வெப்சைட்டும் சொல்லுங்கள்

பாரத நாடு
***************
ராகம்-ஹிந்துஸ்தானி தோடி

பல்லவி -

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு

சரணங்கள்-

1.
ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

2.
தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)

3.
நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

4.
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)

5.
வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

6.
யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

7.
ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

8.
தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

ஃபர்வின் இது பாரதியின் கவிதை நடையிலான தேசபக்திப்பாடல் இதை ராகத்தோடும் பாடலாம்......இல்லை,நான்கு பாரா செலக்ட் பண்ணி பாரதி வேடத்துடன் உணர்ச்சியுடன் பேசலாம்.......
இன்னும் கொடுக்கிறேன்......

பாரத தேசம்
******************
ராகம் - புன்னாகவராளி

பல்லவி -

பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்

சரணங்கள் -

1.
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)

2.
சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்;
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத)

3.
வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். (பாரத)

4.
முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே (பாரத)

5.
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் (பாரத)

6.
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் (பாரத)

7.
காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர்தமக் கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் (பாரத)

8.
பட்டினில்ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீ திகுவிப்போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்
காசினி வணிகருக்கு அவைகொடுப்போம். (பாரத)

9.
ஆயுதம் செய்வோம்நல்ல காகிதம்சேய்வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய்யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

10.
குடைகள் செய் வோம்உழு படைகள்செய்வோம்,
கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய்வோம். (பாரத)

11.
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற்போம்;
வானையளப் போம் கடல் மீனையளப்போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற்போம். (பாரத)

12.
காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்;
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப்போம்;
ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். (பாரத)

13.
சாதி இரண்டொழிய வேறில்லை'யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்;
நீதிநெறி யினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர்மற்றோர். (பாரத)

ஃபர்வின் இதுவும் பாரதியின் பாடல்தான் இதில் முதல் ஆறு பாகங்களை ராகத்துடன் பாடினால் மிகமிக அருமையாகவும் இனிமையாகவும் இருக்கும்.........ராகத்துடன் கூகுளில் தேடுப்பாருங்கள்.......(ஆடியோவுடன்,வீடியோவாக)

ரேனுகா ரொம்ப நன்றி ரொம்ப அழகா தந்திட்டீங்க நீங்க கேட்டவுடனே கொடுத்திட்டீங்களே இது இரண்டில் ஒரு பாட்டில் 3 பாரா சொல்லிகொடுத்தால் போதும்தானே வேற கைவசம் இருந்தல் சொல்லுங்கள் நான் வெள்ளி பனிமலையின் பாடல் 3 பாரா சொல்லி கொடுக்க்லம் இருக்கேன் என் குழந்தை பரிசு வாங்கனும் இந்த பாட்டை பாடி god will help

என் குழ்ந்தையின் fancy dress competition famous players தலைப்பு கொடுத்து இருக்கிறார்கள் எப்ப்டி செய்வது என்று ஐடியா கொடுங்கள் என்ன் speech சொல்வது உதவி பண்ணுங்கமா

ஃபர்வின்
வெள்ளிப்பனி மலை பாடலில் முதல் இரண்டு மற்றும் 5,6 பாராக்கள் சொல்லிக்கொடுங்கள்........நன்றாக இருக்கும்.
பழைய சிவாஜி படத்தில் இந்தப்பாடல் வரும்.வீட்டில் தெரிந்திருந்தால் பாடலை ராகத்துடன் சொல்லிக் கொடுங்கள்......பரிசு நிச்சயம்..நீங்கள் துபாயில் இருக்கிரீர்களா?பெண் எம்க்கே படிக்கிறார்? அங்கு தமிழ் பாடல்கள் பாடலாமா? சொல்லிக் கொடுங்க கலக்குவா....:-))

பேன்ஸி டிரஸ், விளையாட்டில் பாப்புலரா இருக்கவங்களா?

ச்ரி ரேனுகா நான் இப்ப இந்தியா வந்துட்டேன் ஜீலைதான் வந்தேன் இங்க ஸ்கூலில் போட்டுட்டேன் நான் song சொல்லி கொடுக்கிறேன் நான் வீடியோ பார்த்தேன் விளையாட்டு சம்மந்த்மாக்தான் famous players ஏதாவ்தி ஐடியா இருக்கா என் கண்வர் சானியா மிர்சா மாதிர்போட்டு விடு சொன்னார் any idea tell me

மேலும் சில பதிவுகள்