அலிஸ் பாண்ட்ஸ்/ஹெட் பாண்ட்ஸ்

தேதி: August 5, 2011

5
Average: 4.3 (12 votes)

 

ப்ளெயின் அலிஸ் பாண்ட்ஸ்(Alice Bands)
டிசைனர் பட்டன்கள்
கலர் கற்கள் (குந்தன்)
ரிப்பன் பூக்கள்
ப்ளாஸ்டிக் பூக்கள்
இலைகள்
ஹாட் க்ளூ /சுப்பர் க்ளூ, குரடு

 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
டிசைனர் பட்டன்களின் அடியிலுள்ள லூப்பை குரட்டால் வெட்டவும்.
பின்னர் அலிஸ் பாண்டின் ஒரு பக்கத்தில் ஹாட் க்ளூவை புள்ளியாக வைக்கவும்.
பட்டன்கள், மற்றும் இலைகளை படத்தில் உள்ளது போல ஒட்டவும். இது தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வரும்.
அல்லது பட்டன்களை அலிஸ் பாண்ட் முழுவதிலும் சுற்றி இடைவெளி விட்டு ஒட்டவும். இது தலையில் crown வைத்தது போல இருக்கும்.
பழைய ப்ரோச் அல்லது மெட்டலிக் பட்டன் மற்றும் இலைகளை கொண்டு ஒட்டவும்.
ப்ளாஸ்டிக் பூக்களின் இலை, காம்பு மற்றும் அடிப்பாகத்தை வெட்டி விட்டு பூவை எடுக்கவும்.
அலிஸ் பாண்டின் ஒரு பக்கத்தில் மட்டும் இந்த பூ மற்றும் வெட்டிய இலைகளை வைத்து ஒட்டவும்.
அலிஸ் பாண்டின் இரு பக்கமும், தலையின் இரு பக்கமும் வருமாறு மார்க் செய்துவிட்டு ரிப்பன் பூக்களை வைத்து ஒட்டவும். இது தலையின் இரு பக்கமும் வரும்.
இவை திருமதி இமா அவர்களின் செய்முறைப்படி செய்த தொப்பி ப்ரோச்கள். (ப்ரோச் செய்முறை : http://arusuvai.com/tamil/node/9847)
அதனை அலிஸ் பாண்ட் உடன் க்ளு வைத்து இவ்வாறு ஒட்டி வைக்கவும்.
இலகுவாக செய்யக்கூடிய அழகிய அலிஸ் பாண்ட்கள் ரெடி. இந்த அலிஸ் பாண்ட் செய்முறைகளை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

விதவிதமான ஹேர் பேன்டுகள் சூப்பரா இருக்கு.ஒவ்வொன்றும் அழகு.தொப்பியுடன் செய்துள்ள ஹேர்பேன்ட் புதுமை.பாராட்டுக்கள்.

இமா,இன்னைக்கும் முந்திட்டேன்.;-)

ஹாய் நர்மதா!! கனகாலத்துக்குப் பிறகு. ;)) சந்தோஷமாக இருக்கு காண. அலிஸ்பாண்ட் எல்லாமே கலக்கல். //குழந்தைகளைக் கொண்டு பட்டன்கள் மற்றும் பூக்களை ஒட்ட வைக்கலாம்.// ம்... விளங்குது. அப்ப... பாதி வேலை குட்டியம்மாதானா! ;) முந்தி மாதிரி அடிக்கடி வரவேணும் நர்மதா, வருவீங்கள் எண்டு எதிர்பார்க்கிறன்.

படம் எல்லாம் பளிச் பளிச்.

//தொப்பி// தாங்ஸ். ;) பழசு எல்லாம் ஞாபகம் வருது. ;)))))) நான் செய்ததை விட உங்கட தொப்பிகள் வடிவா இருக்கு.

பரவாயில்ல ஹர்ஷா, நான் ரெண்டாவதாகவே கமண்ட் போடுறன். ;)))

‍- இமா க்றிஸ்

பாக்கறக்கே அழகா இருக்கே நிலா, அடடா சூப்பரோ சூப்பர் :-)
ஒன்னு ஒன்னும் ஒரு ஒரு அழகு

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சூப்பரா இருக்குங்க இவளோ அழகா செஞ்சு படங்கள் தெளிவோட அனுப்பி அசத்திடிங்க வாழ்த்துக்கள் by Elaya.G

நர்மதா மேடம் ஒவ்வொரு பாண்ட்லையும் அழகா டிசைன் செய்து இருக்கீங்க. ப்ரோச் உள்ளது சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள். குட்டீஸ்கேற்ற க்ராஃப்ட். உங்களோட எல்லா கிராஃப்ட்மே அசத்தலா இருக்கும் ரொம்ப இடைவெளிக்கு பிறகு உங்க கைவினை வந்துள்ளது.

ரொம்ப ரொம்ப அழகா இருக்குங்க. அதுவும் நம்ம இமாவின் தொப்பி ப்ரோச்கள் செய்து வைத்திருப்பது இன்னும் அழகோ அழகு... அட்டகாசமா செய்திருக்கீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi, nilaji the hair bands are so nice to look at. this will be very useful for kutties. very nice. keep creating and keep on creating.bye.