தோழிகள் எனக்கு பதில் சொல்லுங்க

தோழிகள் எனக்கு பதில் சொல்லுங்க சிக்கீரம்.
நான் பிரிட்ஜ், நாளைக்கு வாங்க போறேன், அதில் மாமிச வகைகளை எப்படி வைப்பது, அதாவது சுத்தபடுத்தி வைக்க வேண்டுமா? துர்நாற்றம் ஏதும் வரதா?

வாடை வராது .அவசியமில்லை எதுவாக இருந்தாலும் மூடி போட்ட டப்பாவில் வையுங்கள் ப்ரீசரில் வையுங்கள் அன்றன்று ப்ரஷாக வாங்குவதே நல்லது

ஃப்ரீசரில் அப்படியே வைத்தால் பிறகு எடுத்துச் சுத்தம் செய்வதில் பல சிரமங்கள் இருக்கின்றன. குளிர் இறங்கவென்று முன்பே வெளியே எடுத்து வைக்கவேண்டும். ஒட்டிக் கொண்டு இருக்கும் அழுக்குகள் சுலபத்தில் வராது. வெட்டும் போது கை விறைத்துக் கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலே.. தேவையான அளவு எடுத்து விட்டு மீதியைத் திரும்ப உள்ளே வைக்க முடியாது. ஒரு முறை ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்து குளிர் இறங்க வைத்தவற்றை மீண்டும் ஃப்ரீசரில் வைப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

வாங்கி வந்த உடனேயே சுத்தம் செய்து கழுவி வடியவிடுங்கள். உங்கள் குடும்பத்திற்கு ஒரு முறை சமையலுக்கு எவ்வளவு தேவை என்பதைப் பொறுத்து பிரித்து எடுத்து ஃப்ரீசர் பாக் அல்லது ஸ்னாப் லாக் பைகளில் போட்டு வைத்தால் எடுப்பது சுலபமாக இருக்கும். வாங்கிய தேதியை ஒரு மார்க்கர் கொண்டு பையில் குறித்து வைத்தால் முதலில் வாங்கியவற்றை முதலில் சமைத்து முடித்து விடலாம்.

துர்நாற்றம் வராது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்