தெரிந்து கொள்வோம் - சோற்று கற்றாழை - மருத்துவ குணங்கள்

Aloe vera எனப்படும் மூலிகை இரண்டாயிரம் ஆண்டுகளாக இயற்கை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதனுடைய பயன்கள் சில:

சோற்றுகற்றாழையின் இலையை கீறி உள்ளே சோற்று பகுதியை எடுத்து, கழுவி சுத்தம் செய்து சிறு துண்டு தினமும் காலை வேலையில் சாப்டு வர, கண்பார்வை கூர்மைஅடையும்.

இரத்த ஓட்டத்தை சீராக்கும். மூலையில் இரத்தம் உறைந்த நிலையினையும் குறைக்கும்.

குப்பை மேனி இலையுடன் சேர்த்து அரைத்து தோல் நோய்கள் மீது தடவி வர குணமாகும்.

மூல நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து, அத்துடன்

கற்றாழை சோற்றை சேர்த்து மென்று தின்று வர, மூல நோய், மலச்சிக்கல், குடல் கோளாறுகள் நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

அல்சர் குணமாகும்.

கற்றாழை சோற்றுடன், இஞ்சி, சீரகம் வைத்து அரைத்து நெல்லிக்காய் அளவு தின்று வர, பித்தம் தீரும்.

சோற்றுக்கற்றழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து நன்கு கழுவி சிறு துண்டுகளாக ஆக்கி, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலந்து தினமும் வெறும் வயிற்றில் நான்கு துண்டுகள் சாப்பிட்டால் உடல் சூடு இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது, இது சித்த மருத்தவர் கூரியது. பக்கவிளைவுகள் இல்லாதது. பயன் படுத்திப்பார்த்து விட்டு கருத்து கூருங்கள் தோழிகளே............

உழைப்பால் கிடைக்காத வெற்றியும் இல்லை!
உழைப்பால் கிடைக்காதது வெற்றியும் இல்லை!!

தேன்மொழி பாலா..

ஆனால் மாசமாக கற்பமாக இருக்குரவங்க கண்டிப்பா சாப்பிடக்கூடாது

அன்பு தோழிக்கு,

கூடுதல் தகவலுக்கு நன்றி.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கறவங்களும் கற்றாழை சாப்பிடலாமா

மேலும் சில பதிவுகள்