மதுரையில் துணிக்கடைகள்

ஹாய் தோழீஸ்.....

ரம்ஜானுக்கு ட்ரஸ் பர்ஷேஸ் பண்ணனும். மதுரைக்கு போகலாம்னு ப்ளான் மட்டும் பக்காவா போட்டு வச்சாச்சு, மத்தபடி எங்கே போகணும்னு ஐடியா இல்ல ;)

மதுரைல பெஸ்ட் டெக்ஸ்டைல் ஷோரூம், எந்த ஏரியா, மாட்டுதாவணில இருந்து போகக்கூடிய பஸ்ரூட் போன்ற விவரங்களை தெளிவா என் மண்டைல ஏறுற மாதிரி வந்து சொல்லுங்கபா....

ஹாய் தோழீஸ்.....

ரம்ஜானுக்கு ட்ரஸ் பர்ஷேஸ் பண்ணனும். மதுரைக்கு போகலாம்னு ப்ளான் மட்டும் பக்காவா போட்டு வச்சாச்சு, மத்தபடி எங்கே போகணும்னு ஐடியா இல்ல ;)

மதுரைல பெஸ்ட் டெக்ஸ்டைல் ஷோரூம், எந்த ஏரியா, மாட்டுதாவணில இருந்து போகக்கூடிய பஸ்ரூட் போன்ற விவரங்களை தெளிவா என் மண்டைல ஏறுற மாதிரி வந்து சொல்லுங்கபா....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மாட்டுதாவணியில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்டு செல்லவும். அங்கே நிறைய கடைகள் உள்ளன. போத்தீஸ், லலிதா,ஹாஜிமூசா, அஹமது, SMTM மற்றும் நிறைய.

KEEP SMILING ALWAYS :-)

பதிலுக்கு நன்றி நாகா

பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து போக கூடிய தூரம் தானா? அங்கிருந்து வேற பஸ்ல போகணுமா? அல்லது ஆட்டோல போகலாமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நடந்தே போகலாம்.

KEEP SMILING ALWAYS :-)

ஆமின மேடம் மதுரையில் mm collections கடையிலும் துணி நல்லார்க்கும் designs நிறைய இருக்கும். எ.கே அஹமத் பக்கம் தான் இந்த கடையும். போய் பாருங்க

ரமலான் வாழ்த்துக்கள்

அன்புடன் அபி

அன்புடன் அபி

அபிராமி M M கலெக்சன் கடை AKஅஹமதுக்கு எந்த பக்கம் எங்க இருக்கு
அபிராமி நீங்க மதுரையா பிறந்த ஊரா
வாங்க ஆமினா மேடம் எங்க ஊருக்கு வாரிங்க அப்படியே எங்க வீட்டுக்கும் வரலாம் வந்துட்டு போலாம் வாங்க ஆமினா மேடம்

எம் எம் கலெக்‌ஷனா.... கண்டிப்பா வந்து விசிட் பண்றேன்.....(மதுரைல என்ன சுத்தி பாத்தன்னு கேட்டா முழிக்க கூடாதில்ல.அவ்வ்வ்வ்வ்வ் ;) எனக்கு பஸ் ரூட் தான் ரொம்ப பிரச்சனை :( என்ன தான் படிச்சுருந்தாலும் பஸ் மாறி போயிட்டா, தெரியாத ஊர்ல வழிய தேட முடியாதே ;)

ரொம்ப நன்றி அபி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஓ அது உங்க ஊரா? அப்ப நாகா ஊர் இல்லையா? :)

கூப்டதுக்கு ரொம்ப நன்றி ராபியா..... கடா வெட்டி குழம்பு வச்சு போன் பொடுங்க. வந்துடுறேன்

மேடம்லாம் வேணாம் ஆமினா மட்டும் போதும் ;)

உங்களுக்கு தெரிஞ்ச கடைய பத்தி சொல்லுங்க ராபியா. போத்தீஸ், ஹாஜீமூஸா நல்லா இருக்குமா? ஹாஜீமூஸா ல எல்லாமே ரேட் ஜாஸ்தின்னு சொல்றாங்களே..... அப்படியா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

http://www.arusuvai.com/tamil/node/19545?page=7 என் போன் நம்பர் இதில் இருக்கு
விளக்குத்தூண் பத்துத்தூண் பக்கம் ஹோல்சேல் கடைகள் இருக்கு.. ஆமினா ஏகே அஹமத் சீப் @ பெஸ்ட்.. டிசைன் வெரைடீஸ் பாக்கனும்னா போத்தீஸ் பாக்கலாம்.. ஹாஜீ மூஸா விலை கூடவும் இருக்கும் தரமாக இருக்கும்..
நாகா ஊர் அமுதா ஊர் எங்க ஊர் எல்லாம் மதுரைதான்
மாட்டு தாவனியில் ஏறி பெரியார்பஸ் நிலையம் இறங்கி 10 நிமிட பயணம் போத்தீஸ் அல்லது போகும் வழியில்கீழவாசல் ஸ்டாப் அஹமத் பத்துதூண் ஹாஜீமூஸா

ஆமினா ராமனாதபுரமா ராமனாட்டில் எந்த ஊர்
ராமனாட்டில் ஆனந்தம் ஜவுளி கடையில் நல்லா இருக்கே
நான் ஊருக்கு போயிருந்தப்போ அங்கே தான் சுடிதார் துணி வாங்கி அங்கேயே ஒருகடையில் தைக்க குடுத்தோம்
மதுரைதான் உங்க ஐடியான்டா பசரியாக்கா சொன்ன விளக்கு தூண் கடை விலை மலிவு தரமும் நல்லா இருப்பதா இங்கே ஒரு தைய்யல் காரர் சொன்னார் முயற்ச்சி பன்னி பாருங்க ஆமினா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்