ப்லீச் பற்றி விவரம் வேண்டும்

தோழிகளே, இதற்காக ஒரு இழை ஆரம்பிக்க வேண்டுமா என்று தெரியலை. ஆனால் வேறு எங்காவது கேட்டால் தோழிகள் அனைவரும் பார்ப்பார்களா’னு தெரியலை. அதனால தான் வேறு வழியில்லாமல் இழை ஓபன் பண்ணிட்டேன். மன்னிக்கவும்.

ஃபேஷியல் பண்ணும் போது ப்லீச் பண்ணுவது பற்றி கேட்கிறாங்க இல்லையா? ப்லீச் என்பது எதற்காக, அதனால் என்ன நன்மை, என்ன தீமை. ஏன் என்றால் என் தோழி ஒருத்தி ப்லீச் செய்வதால் ஸ்கின்’கு பிரச்சனை என்று சொன்னால், அதனால் தான் நம் தோழிகளிடம் கேட்கலாம் என்று தான். தெரிந்தவர்கள் உதவவும் ப்ளீஸ்

சாரி பவித்ரா,முழுமையாக தெரியவில்லை.ஆனால் ப்ளீச் செய்வதால் சருமத்தில் உள்ல அழுக்கு நீங்கிவிடும்.ப்ளீச் செய்துவிட்டு facial செய்தால் தான் bright ஆக இருக்கும்.

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி அனிதா. நானும் கேள்விப்பட்டிருக்கேன் அனிதா. ஆனாலும் முதன்முறை ஃபேஷியல் பண்ணும் போது ப்லீச் பண்ணினா போதும்னு சொல்றாங்க அதனால தான் ஒரு சந்தேகம்.

வனிதா’கு இதை பற்றி தெரியும்னு நினைக்கிறேன். அவங்க பார்த்தால் பதில் போடுவாங்க.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்