வாந்தி வர இல்லை

நான் கர்ப்பம் ஆகி 8 வாரம் முடிந்து விட்டது. அனால் எனக்கு இன்னும் வாந்தி வரவில்லை. குமட்டல் மட்டும் இருக்குது. இதுக்கு என்ன காரணம்.

எனக்கு கர்ப்பம் ஆகி 7 வாரம் வரை வாந்தி வரவில்லை. பிறகு தொடங்கியது தினமும் இரண்டு முறை வாந்தி. எனக்கு இப்போது 9 வது வாரம்.

முதல் மாதம் scanning ரொம்ப முக்கியம். Baby growth & Position பத்தி சொல்லுவாங்க . வேற hospital போய் பாருக. கோயம்புத்தூர் - ல நல்ல hospital நெறைய உள்ளது.

வாழ்க வளமுடன்

ஹாய் மஹா, வாழ்த்துக்கள்.நான் மேட்டுர் டேம். எனக்கு 3 monthல் தான் scane எடுத்தார்கள். உங்களுக்கு வேற எந்த problem மும் இல்லை என்றால் அவர்கள் சொன்ன dateல் செக்கப் செய்தால் போதும். நானும் கோவையில் தான் பார்த்தேன். KMCH - டாக்டர் ரேணுகாதேவியிடம், நல்லா பார்க்கிறார்கள். முடிந்தவரை நார்மல் டெலிவரிக்கு முயற்சி செய்கிறார்கள். நல்ல புத்தகம் படியுங்கள். கந்த சஸ்டி கவசம் தினமும் படியுங்கள்.

உழைப்பால் கிடைக்காத வெற்றியும் இல்லை!
உழைப்பால் கிடைக்காதது வெற்றியும் இல்லை!!

தேன்மொழி பாலா..

தேங்க்ஸ் நித்யா அண்ட் தேன்மொழி. நான் நாளைக்கு வேற டாக்டர் கிட்ட போறேன். எனக்கு முதுகு மட்டும் வலிக்குது. ரொம்ப நேரம் உட்கார முடில. முதுகு படுக்க போட்ட தான் கஷ்டம் இல்லாம இருக்கு. இதுக்கு என்ன ரீசன் பா தேங்க்ஸ் நித்யா அண்ட் தேன்மொழி. நான் நாளைக்கு வேற டாக்டர் கிட்ட போறேன். எனக்கு முதுகு மட்டும் வலிக்குது. ரொம்ப நேரம் உட்கார முடில. முதுகு படுக்க போட்ட தான் கஷ்டம் இல்லாம இருக்கு. இதுக்கு என்ன ரீசன் பா

madhu

சிலருக்கு கர்ப்பமாக இருக்கும் போது சில வலிகள் இருப்பது சகஜம்... ஆனால் அதை மருத்துவரை பார்த்து கன்ஃபர்ம் பண்ணிக்கங்க... சாதாரணமா எல்லாருக்கும் ஏற்பட கூடிய வலி தானா என்று. கவலை வேண்டாம். என் தங்கைக்கு உட்கார முடியாத அளவுக்கு வலி இருந்தது. டெலிவரி வரை. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் மஹா, எனக்கும் கூட முதுகுவலி இருந்தது. நீங்கள் உட்காரும்போது முதுகு வலையாமல் நிமிர்ந்து உட்கார பழகுங்கள். முதுகுக்கு தலையணை வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அமராமல் 10 நிமிசத்திற்கு ஒருமுறை சிறிது நடங்கள். தூங்கும்போது இரு கால்களுக்கும் இடையில் பின் வரும் மாதங்களில் தூங்கும்போது நன்றாக இருக்கும்.

உழைப்பால் கிடைக்காத வெற்றியும் இல்லை!
உழைப்பால் கிடைக்காதது வெற்றியும் இல்லை!!

தேன்மொழி பாலா..

ஹாய் வாணி அண்ட் தேன்மொழி... தேங்க்ஸ் பா மோர்னிங் vomit இருந்தது. inaaiku கொஞ்சம் tired அஹ இருக்கு. அப்புறம் sapadrathuku ethum புடிக்கல. liquid items தான் குடிக்க புடிக்குது.

madhu

தோழிகளே, நலமாக இருக்கிறீர்களா? மீண்டும் உங்களுடைய ஆலோசனை எனக்கு தேவை. எனக்கும் 11 வாரம் தொடக்கி விட்டது. எதுவுமே சாப்பிட முடியவில்லை. ஒரே குமட்டலும் வாந்தியும். சாப்பிடுவதில்லை. இதனால் குழந்தைக்கு எதாவது பாதிப்பு உண்டாகுமா? பயமாக இருக்கிறது. சில நேரங்களில் உடம்பு வீக் ஆக இருக்கின்றது. இந்த அனுபவம் யாருக்காவது இருக்கிறதா? 12 வாரத்தின் பின்பு சரியாகி விடுமா தோழிகளே???
நன்றி தோழிகளே,
மீனா.

நான் கர்ப்பமா இல்லையா என்று ஒரே குழப்பமா இருக்கு.plz யாராவது help பண்ணுங்கப்ப சிறுநீர் பரிசோதனை பண்ணி பார்த்தேன்.அதில ஒரு கோடு தெளிவாயும் மற்ற கோடு மங்கலாயும் இருக்கு இதால குழப்பமா இருக்கு யாரும் பதில் சொல்லுங்க friends plzzzzz

நான் கர்ப்பமா இல்லையா என்று ஒரே குழப்பமா இருக்கு.plz யாராவது help பண்ணுங்கப்ப சிறுநீர் பரிசோதனை பண்ணி பார்த்தேன்.அதில ஒரு கோடு தெளிவாயும் மற்ற கோடு மங்கலாயும் இருக்கு இதால குழப்பமா இருக்கு யாரும் பதில் சொல்லுங்க friends plzzzzz

நீஙகள் last period date குறிப்பிடவில்லை. 45 நாட்களில் சிறுநீர் பரிசோதனை செய்து பாருங்கள். கோடுகள் தெளிவாக தெரியும். நல்லதே நடக்கும்.

M Esakki

மேலும் சில பதிவுகள்