தேதி: August 8, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சர்க்கரைவள்ளி கிழங்கு - 1/2 கிலோ
தினை மாவு - 150 கிராம்
பொட்டு கடலை மாவு - 100 கிராம்
வெல்லம் - 50 கிராம்
தேங்காய் - 1 மூடி
ஏலக்காய் - 2
எண்ணெய்
வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து கல், தூசிபோக வடிகட்டவும்.
வேகவைத்த கிழங்குடன் தினை மாவு, பொட்டுக்கடலை மாவு, துருவிய தேங்காய், வெல்ல தண்ணீர், ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போண்டா மாவை ஒரு ஸ்பூனால் எடுத்து ஊற்றி, பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.
தினை மாவிற்கு பதிலாக மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு சேர்க்கலாம்.
Comments
தினை மாவு
மிக அருமையான ரெசிபி
சர்க்கரை வள்ளி கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் சத்தான தினை மாவுடன் சூப்பர்
Jaleelakamal
ஜலீலா - தினை மாவு
பதிவிற்கு நன்றி ஜலீலா. செய்து பார்த்து எப்படி இருந்ததுனு சொல்லுங்க.
KEEP SMILING ALWAYS :-)