குழந்தை பெற்றவர்களை வாழ்த்தலாம் வாங்க! - பகுதி 1.

புதிதாய் குழந்தை பெற்றுள்ள நம் அறுசுவை தோழிகளை வாழ்த்தும் பகுதி இது. தோழிகள் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க...

நானே முதல் பதிவை போட்டுடறேன்... எனக்கு இரண்டாம் குழந்தை, ஆண் குழந்தை சென்ற மாதம் பிறந்து இருக்கிறான். நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

என்னுடைய தொடர் பங்களிப்பு தொடங்குமுன் சொல்லிடனும் இல்ல... அதனால நானே தொடங்கிட்டேன் ஒரு புதிய பகுதி ... அனைவரும் இந்த பகுதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கும் மகனுக்கும் வாழ்த்துக்கள்.

சும்மா சொன்னா எப்படி. மகன் எப்படி இருக்கார்? எத்தனை கிலோ வெயிட் இருந்தார்? பார்க்க அப்பா மாதிரி இருக்காரா? இல்லை அம்மா மாதிரி இருக்காரா?

இப்படி எல்லாத்தையும் சொல்லுங்க. :)

துஷி உங்களுக்கும் மகளுக்கும் வாழ்த்துக்கள்.

இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த உங்களூக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி.

தேன்மொழி, குழந்தை பார்க்க என்னை மாதிரி தான் கொஞ்சம் தெரியறான். மற்றபடி அவங்க அப்பா மற்றும் அண்ணன் மாதிரியே தெரியுது.

எங்கோ ஒரு இடத்தில் அன்பரசி உங்களிடம் என்ன குழந்தை என்று கேட்டதாக ஞாபகம்....பரவாயில்லை....நீங்களே ஒரு தனி இழையில் எங்களுக்கு இந்த சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. சின்னவரின் சேட்டையை ரசிக்கவே நேரம் போதாது.....:)

குழந்தை பெற்றெடுத்துள்ள மற்ற தோழிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இனிய மழலையை ஈன்றயெடுத்த அன்பு தோழிகளுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

மிகவும் நன்றி லாவண்யா...
அன்பரசி எங்கே கேட்டாங்கன்னு எனக்கு தெரியல... அதனால நானே விஷயத்தை சொல்லிட்டு பிறகு மற்ற பதிவுகள் போடலான்னு தான் இதை தொடங்கினேன். சென்ற வாரம் ஓரிரு சமையல் குறிப்பிற்கு பின்னூட்டம் கொடுத்தேன்... அப்போ பார்த்து கேட்டு இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்.
சின்னவர் இன்னும் சேட்டை எதுவும் பண்ணவில்லை...ஆனா நேரம் சரியா போயிடுது.

ஃபெரோசா நன்றி.

அன்புத்தோழிகள் உமா, துஷி, மெர்ஸானா மற்றும் அவர்களின் புதிய மழலைச்செல்வம் பூந்தளிர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தாயும் சேயும் நலமுடனும் வளமுடனும் எப்போதும் இருக்க வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்