பால் காய்ச்சும் குண்டான் அடிபிடித்து விட்டது

பால் காய்ச்சும்குண்டான் நன்றாக அடிபிடித்து (தீய்ந்து )விட்டது ,
எவ்வளவு தேய்த்தாலும் போகவே மாட்டுகிறது ,,
வழி சொல்லுங்கள் தோழியரே

எனக்கு சரியா தெரியல... அந்த காலத்தில் கோலப்பொடி வைத்து தேங்காய் நார் கொண்டு தேய்ப்பாங்க... பாத்திரம் பளிச் பளிச். இப்போ அந்த மெடல் ஸ்க்ரப் இருக்கு... பயன்படுத்துங்க. இருந்தாலும் வினிகர் அல்லது எலுமிச்சை விட்டு ஊர வைத்து தேய்த்து பாருங்களேன். ஒரு யோசனை தான்... எந்த அளவு போகும்னு தெரியல. :) ஆனா ஒன்னு ... அடிக்கடி தேய்க்க தேய்க்க அந்த கறுப்பா பிடிச்சது போயிடுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிளேடு அல்லது ஸ்பூன் கொண்டு சுரண்டவும் பின்பு சில்வர் ஸ்கிரப்பர் கொண்டு விளக்கவும்

பதில் அளித்த தோழியர்க்கு நன்றி ,செய்து பார்த்து பதில் கூறுகிறேன்
எனது பக்கத்து வீட்டு தோழி புளித்ததயிர் அடி பிடித்த குண்டானில் ஊற்றி ,கொதிக்க வைக்க சொன்னார் .. அப்படி செய்யலாமா ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

செய்து பாருங்க... தப்பில்லை. புளிப்பு தன்மை உள்ளது தானே... அதுக்கு தானே நானு எலுமிச்சை, வினிகர் பயன்படுத்த சொன்னேன்... அதனால் தைரியமா செய்து பாருங்க. அரிசி கழுவின நீர் ஊற்றி 1 நாள் வைத்திருந்து தேய்த்தால் கூட போகும். ட்ரை பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

சபீனாவை இரும்பு ஸ்க்ரப்பர் வைத்து தேய்க்கலாம் அல்லது கோலப்பொடி சாம்பல் போட்டு தேய்க்கலாம் அதற்கு முன்பு பாத்திரத்தை அலசி கவிழ்த்து விட்டால் ஈசியாக இருக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்