நீங்க எப்படி உங்க வீட்டை சுத்தமா வச்சிருக்கிங்க?

தோழிகளே ,வீட்டை க்ளீன் பன்னுவதற்கு ஏதாவது ஐடியா சொல்ல்ங்களேன்.ஏதாவது டைம்டேபிள் (time table)மாதிரி.எனக்கு தலையே சுத்துது.நீங்க எப்படி உங்க வீட்டை சுத்தமா வச்சிருக்கிங்க?என்னுடைய தோழிகள் வீட்டுக்கு எப்போ போனாலும் வீடு சுத்தம்மா இருக்கு.அவங்க கிட்டயே நேரடியா கேக்கவும் முடியலை.இத்தனைக்கும் அவங்களுக்கு 2 குட்டிஸ்.வீட்டையும் சுத்தமா வச்சுக்கிட்டு குட்டிஸையும் வெளியே கூட்டி போய் வரங்க.எனக்கு வீடு க்ளீன் பன்னினா அவ்வளவு தான். வெளியெ எங்கயும் போகமுடியாது.தினமும் டென்சன் .பசங்க கிட்ட கூட கோவப்படறேன். நீங்க எப்படி செய்ய்ரிங்க?ஏதாவது ஐடியா ப்ளிஸ்.அறுசுவையில் இந்த டாபிக் ஓடியிருக்கா?நான் தேடினேன் கிடைக்கவில்லை.
என்றும் அன்புடன்
மனோரஞ்சிதா

அப்பப்போ குழந்தைகள் எடுத்து விளையாடும் பொருளை அப்பப்போவே எடுத்து வெச்சுடனும். அவங்களுக்கும் சொல்லி கொடுக்கனும்... எந்த பொருளை எங்க வைக்கனும், எடுத்த பொருளை எடுத்த் இடத்திலேயே வைக்கனும் என்றெல்லாம்... அடுப்படியை சமையல் முடித்ததும் சுத்தம் செய்து வைத்து விடுங்க. சமைக்கும் முன்பே தேவையான காய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை என எல்லாத்தையும் சுத்தம் பண்ணி குப்பையை ஒரு பேஸ்கட்டில் போட்டுட்டு வேலையை ஆரம்பிங்க. இதை பண்ணாலே சமைக்கும் போது அடுப்படி குப்பையாகாது. வீட்டில் உள்ள எல்லா பொருளுக்கும் இது இங்க தான் இருக்கனும்னு ஒரு இடத்தை முடிவு பண்ணி அதை அங்கையே எப்பவும் வைத்து பழகுங்க. எனக்கு தெரிஞ்சு சிம்பிலான ஐடியா இது தான்!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிங்க வனிதா அக்கா.முதல் ஆளா வந்து பதிலும் சொல்லிட்டிங்க.வனிதாஅக்கா,நீங்க சொன்ன மாதிரி இனி அடுப்பையும் உடனே சுத்தம் பன்னனும்ன்னு நினைத்திருக்கேன்.நான் சமைச்சுட்டு அப்புறம் அடுப்பு க்ளீன் பன்னலான்னு விடுவேன்நீட்டாவே இருக்காது.எனக்கு என்ன சந்தேகம்ன்னா நான் ஹால் சுத்தம் பன்னினா கிச்ச்சன் அன்னைக்கு சுத்தமா இருக்காது.கிச்சன் சுத்தம் பன்னினா மத்த ரூம்ஸ் சுத்தம்மா இல்லை.அதான் என் கவலையே.திங்கள் கிழமை-இந்த வேலை,செவ்வாய்- இந்த வேலை அதுமாதிரி ஏதாவாது டைம்டேபிள் போட்டு பன்னுவீங்களா?எப்போதும் வீடு எப்படி நீட்டா வெச்சுக்கது?கிண்டல் பன்றேன்னு நினைக்காதிங்க.எனக்கு உண்மையிலே தெரியலை.அதான் கேட்டேன்.
என்றும் அன்புடன்,
மனோரஞ்சிதா.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

இதுக்கு நான் பதில் சொல்லலாமா.... டைம் டேபிள் போட்டு வீட்டை கிளீன் பண்ண முடியாது.... எதாவது self, showcase, tables இதுபோல வேனா day fix பண்ணிக்கலாம்...(EX : Sunday, holidays ) மத்த படி வீடு பூரா னா நம்ம வேலை செய்யும் போதே எல்லா சாமானமும் அப்பபோ எடுத்து வெச்சா தான் சுத்தமா இருக்கும்... புக் படிச்சா அதை எடுத்த இடத்திலேய வெக்கணும் like that.. ஒரு வாரம் பத்து நாள் ட்ரை பண்ணா அது நமக்கு பழக்கம் ஆகிடும்... ....

ப்ரியா சொல்ற மாதிரி ஒட்டடை அடிக்க, வீடு தொடைக்க, ஸ்க்ரீன் சுத்தம் செய்ய, ஃபேன் தொடைக்க இதுக்கு தான் டைம் டேபில் போடலாம்... கண்டிப்பா வீட்டை ஒழுங்கா வைக்க போட முடியாது. அது தினமும் ரெகுலரா ஹேபிட்ட வெச்சா தான் வீடு சுத்தமா இருக்கும். கொஞ்ச நாள் அதுக்கே நேரம் ஆகுற மாதிரி இருக்கும்... அது ஹேபிட் ஆயிட்டா அதன் பின் நேரம் ஆகாது... வீடும் எப்பவுமே ஒழுங்கா சுத்தமா இருக்கும். :)

மற்ற டைம் டேபில் போடும் வேலைகளை சனி, ஞாயிறு கணவர் வீட்டில் இருக்கும்போது செய்யுங்க... சாப்பாடு வெளிய, குழந்தைகளை பார்த்துக்க, கூட உதவ உங்க கணவர்... சுலபமா முடியும். அதையும் மாசத்தில் ஒரு நாள் ஒட்டடை அடிப்பது, ஸ்க்ரீன் துவைப்பது போதும். வாரத்தில் ஒரு நாள் வீட்டை துடைக்க ஒதுக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்களே தான் பாத்திரமும் தேய்க்கிற மாதிரி இருந்தால், சமைக்கும் போதே பாத்திரத்தை தேய்த்து விட வேண்டும். கட்டாயம் எந்த ஒரு டப்பாவை எடுத்தாலும் அதை அதே இடத்தில் உடனே வைத்துவிட வேண்டும். அப்பொழுதும் சமைத்து முடித்த பின்னர் சுத்தம் செய்ய சுலபமாக இருக்கும். காய் முதலிலே நறுக்கி வைத்து சமைக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் காய் நறுக்கியவுடனே கழிவையும் சுத்தம் செய்துவிட வேண்டும். இப்படி செய்தால் அடுபங்கரையை தனியே சுத்தம் செய்ய தேவையே இல்லை. சமைத்து முடிக்கும் போதே எல்லாமே சுத்தமாகிவிடும்.

குழந்தைகள் விளையாட்டு சாமானுக்கென்று ஒரு பெரிய தொட்டியோ அல்லது கூடையோ வைத்துகொண்டால் அவர்களின் பொம்மைகளை அள்ளி அதில் போட்டு ஓரமாக எடுத்து வைக்க வசதியாக இருக்கும். நீங்கள் முதலில் சுத்தம் செய்யுங்கள் பிறகு அவர்களுக்கும் அதை அறிமுக படுத்துங்கள்.....உள்ளே தூக்கி தானே போட வேண்டும் என்று அதையும் ஒரு விளையாட்டாக செய்வார்கள். அதற்காக வர்கள் விளையாடி முடிக்கும் முன்னரே செய்யாதீர்கள். குழந்தைகள் என்றால் வீட்டில் எல்லாம் இறைந்து தான் கிடக்கும் :) நான் அவர்கள் போதும் என்று விடும் வரையில் எதையுமே எடுத்து வைக்க மாட்டேன். ஏனென்றால் ஒன்றில் விளையாடுவார்கள் அதை விடுத்து அடுத்ததை எடுத்து விளையாடுவார்கள் திரும்பவும் வந்து முன்னர் விளையாடியதை தேடுவார்கள்.....அவர்கள் விளையாடுவதற்கு தானே...அதனால் விளையாடும் மட்டும் விடுங்கள்....பிறகு எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

குழந்தைகள் விளையாடும் அல்லது தூங்கும் போது நீங்கள் மற்ற சுத்தம் செய்யும் வேலைகளை கவனிக்கலாம். அவர்கள் முழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் அதிகம் நேரம் செலவழிக்கவேண்டும். தோழிகள் சொன்னது போல் சில வேலைகளை வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது பிரிட்ஜ் சுத்தம், பேன் துடைப்பது, அலமாரியை சுத்தம் செய்வதும், ஜன்னல் துடைப்பது, தீரைசீலை, தலையணை உறை, போர்த்தி துவைப்பது என்று எல்லாவற்றையும் வாரத்திற்கு ஒரு முறை வைத்துக் கொள்ள வேண்டும். பாதி வேலைகளை இந்த வாரம் செய்தால் மீதியை அடுத்த வாரம் என்று அதற்க்கு அட்டவணை போட்டு வேலை செய்யலாம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நல்ல டாபிக்..நான் செய்யுறதை சொல்கிறேன்..எனக்கு இரு சின்ன குழந்தைகள் இருக்காங்க அதனால் முடிந்த மட்டும் சுத்தமாக வைப்பேன்

முதலில் patio :

வாரம் இரு முறை பெருக்கி ,பூந்தொட்டியை நகர்த்தி,துடைத்து விடுவேன்.
தேவையில்லாத காய்ந்த இலைகள்,சருகு எல்லாவற்றையும் தூக்கி போடுவேன்

லிவிங் ரூம்

டெய்லி அடுப்பில் பால்,சாதம்,குக்கர் வைத்ததும் வாகும் செய்து விடுவேன்.வாரம் ஒரு முறை ஒட்டடை,லைட் இதெல்லாம் அவர் துடைப்பார்.
இங்கே முழுதும் கார்பெட் என்பதால் வாரம் ஒருமுறை நல்ல carpet cleaner பவுடர் தூவி வாகும் செய்வேன்.கரை எதாவது ஆனவுடன் உடனே cleaner கொண்டு துடைத்து எடுப்பேன்
மேலே போடும் ரக்ஸ்க்கும் இதே ட்ரீட்மென்ட் தான்.
couch , கைப்பிடி,டேபிள்,போன்,டிவி சென்ட்டர்,pedestal பேன், இதெல்லாம் டெய்லி ஒரு quick துடைப்பு செய்வேன்

பெட்ரூம்:

தினமும் பெட் மீது இருக்கும் ஷீட்களை உதறி நீட்டாக மடிப்பேன்.தலையணை சரியான இடத்தில் வைப்பேன்
வாரம் ஒருமுறை சுவர்,ஜன்னல்,ஓரங்கள் இதில் பூச்சி எதாவது இருக்கிறதா என்பதை பார்த்து விடுவேன்
வாரம் ஒரு முறை bedcover ,தலையணை உறை மாற்றி லாண்டரி செய்வேன்

கிச்சன்:

லாவண்யா,வனிதா மேடம் சொல்வதை தான் நானும் செய்வேன்
அடுப்பு டெய்லி சமையல் முடிந்ததும்,சற்று சூடாக இருக்கும் போதே துடைத்தால் எல்லா பிசுக்கும் உடனே வந்துவிடும்.இரவு படுக்கும் முன் கண்டிப்பாக துடைத்து வைத்துவிட்டு தான் தூக்கமே!!!(லக்ஷ்மி அப்போது தான் நம் வீட்டில் இருக்குமாம் பாட்டி சொல்வாங்க!!).கிட்சேன் ஹூட்,வலை வாரம் ஒரு சுத்தம் செய்வேன்.
மேடையை சமையல் முடிந்ததும் ஒரு complete spray துடைப்பு நடக்கும்.burner அடியில் அலுமினியம் பாயில் போட்டு வைத்து உள்ளேன்(நன்றி: இமா மேடம் !!!)
சிங்கில் நெடு நேரம் சாமான் போட மாட்டேன்,உடனுக்குடன் பாத்திரம் கழுவி விடுவேன்..சிங்கில் உள்ள சின்க் strainer களை கூட கழுவி காய வைப்பேன்.தண்ணீர் சிதறல்களையும் துடைத்து விடுவேன்.அப்புறம் பாத்திரம் கழுவும் நார்களை தண்ணீர் இல்லாமல் பிழிந்து காய விடுவேன்.தினமும் சிங்கையும் ஒரு வாஷ் செய்வேன்

டிஷ்வாஷேர் உள்ளதால் வாரம் இருமுறையாவது அதை உபயோக படுத்தவேண்டும் இல்லையெனில் உள்ளே உள்ள மோட்டார் freeze ஆகும் (ரிப்பேர் செய்த அனுபவம்
:-( ) .பாத்திரங்களை ரின்ஸ் செய்து சோப்பு+ரின்ஸ் agent வைத்து பாத்திரம் கழுவுவோம்.அதன் ராக்குகளை மாதம் ஒரு முறை வெளியே எடுத்து துடைத்து ஒரு ரின்ஸ் வாஷ் மட்டும் செய்வேன்.

ஓவன் அதிகம் உபயோகம் செய்வதில்லை.அதனால் எப்போது use செய்தாலும் உடனே ஓவன் cleaner கொண்டு சுத்தம் செய்வேன்

மைக்ரோவேவ் தினமும் வெளிப்பக்கம் துடைப்பேன்.வாரம் இருமுறை எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சு தோல்,தண்ணீர் போட்டு பாத்திரத்தில் 2 minutes வைத்து அந்த ஆவியிலே உள் பக்கத்தை ,துடைத்து ஆற வைப்பேன்.

வயர்,plugpoint , இதெல்லாம் செக் செய்து பிள்ளைகளுக்கு எட்டாதவாறு சுவிட்ச் கவர் போட்டு வைப்பேன்.

பாத்திரம் நிறைய இல்லை.முன்பு இந்தியாவில் இருந்தபோது நிறைய இருந்தது.எது தேவையோ அதைமட்டும் வைத்து கொண்டு மற்றதை மேலே வைத்து விடுங்க.இறைவது குறையும்.

fridge :

எக்ஸ்பயரி தேதியை மேலே கண்ணுக்கு தெரியும் படி எழுதி வைப்பேன்
கண்டிப்பாக உள்ளே இருப்பதை வெளியே எடுத்து வைத்து துடைத்து வைப்பேன்.பிரீசரை அடிக்கடி defrost செய்து வைப்பேன்.உள்ளே வைக்கும் அணைத்து பொருட்களும் கண்டிப்பாக நன்கு கவர் செய்து ஜிப்லாக் கவர்,பாத்திரங்களில் வைப்பேன்.வெளிப்புறத்தையும் தினமும் ஒரு துடைப்பு நடக்கும்

காபினெட்:

மாதம் ஒரு முறை ஒட்டடை அடித்து செல்ப் லைனர் மாற்றுவேன்,எந்த container உள்ள பொருள் தீர்ந்ததோ அதை சுத்தம் செய்த பின்பு தான் refill செய்வேன்.எண்ணெய் பாத்திரம்,அஞ்சரை பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்வேன்.எது எடுத்தாலும் அதே இடத்தில் திரும்ப வைக்க வைத்து விடுவேன்

டைனிங் டேபிள்:

தினமும் இரவு complete துடைப்பு
placemat ,ஹோல்டர்,towel ஆகியவற்றை வாரம் இருமுறை மாற்றி துவைத்து விடுவேன்
டேபிள் அடியிலும் வாரம் ஒரு முறை சுத்தம் செய்வேன்

பாத்ரூம்:

தினமும் கண்ணாடி,சின்க்,குழாய், பௌல்களை disinfect செய்வோம்.டப்,tile களை வாரம் ஒரு முறை சுத்தம் செய்வேன்.தினமும் அரோமா candle ,airwick வைப்போம்
தரைகளை வாரம் இருமுறை மோப் செய்வோம்.ஈரமே இல்லாமல் அங்கங்கு ரக் போட்டு வைத்து உள்ளோம்

குழந்தைகள் பொம்மை:

அப்பப்பா!!!என்னிடம் அதிகமாக உள்ள பொருட்களே இது தான் !!
எல்லாவற்றையும் எடுத்து இறைத்து விடுவாங்க,எடுத்தும் வைப்பாங்க ..டென்ஷன் ஆகிடுவேன்..அப்புறம் இதை follow செய்கிறேன்..
எந்த பொம்மை ரொம்ப பிடிக்குமோ அதைமட்டும் வெளியில் வைத்துவிட்டு மற்றவற்றை பிரித்து ஒரு கார்,ஒரு பார்பி,ஒரு செட் பொம்மை என்று தனித்தனியே முட்டை கட்டி வைத்து உள்ளேன்.இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு முட்டையை கொடுத்து விளையாட செய்கிறேன்.அது மட்டும் அவளுக்கு எட்டுவது போலே வைத்து இருக்கேன்.இறைவது கம்மியாகிவிட்டது .

லாண்டரி பாஸ்கட் :

பிதுங்கும் அளவு துணியை அடைக்காமல் அடிக்கடி துவைத்து விடுவேன்,அழுக்குக்கு போடும் போதே whites ,கலர்ஸ்,குழந்தைகள் துணி என்று தனித்தனியே போட்டால் நேரமும் குறையும்.முடிந்தால் இது போலே ராக் கொண்ட பாச்கேட்களை வாங்கலாம்.ஈரமான துணியை தயவு செய்து போடவே கூடாது

என்னடா இவ்ளோ பெரிய லிஸ்டா என்று நினைக்காதீங்க.சின்னதா summarise பண்ணுங்க.
#சமையல் செய்யும் போதே வீடு சுத்தம் செய்வது,துடைப்பது,பாத்திரம் கழுவுவது,சின்க் சுத்தம் உடனே செய்ங்க
#குளிப்பதற்கு முன்பு பாத்ரூம் க்ளியர் செய்ங்க
#ஷேல்ப்களில் உள்ளதை கரெக்டாக அடுக்குங்க,தினம் ஒரு செல்ப் என்று சுத்தம் செய்ங்க ஈஸியாக இருக்கும்
#அடிக்கடி ஊதுபத்தி ,candles போன்றவற்றை ஏற்றி வையுங்க .சந்தோஷமா சுத்தம் செய்யுங்க.கணவரையும் கூட சேர்த்துகோங்க

முடியும் போது திரும்ப வந்து பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கு 2 குட்டிஸ் ஆனதுக்கப்புறம் ரொம்ப ...சோம்பேறி ஆயிடேங்க.கவிதா இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்.ஒவ்வொரு இடத்தைஎப்படி க்ளின் பன்னனும்னு அழகா சொல்லி இருக்கிங்க.நான் housewife தான்.அதனால் மெதுவா பன்னிக்கலாஆன்னு விடுவேன் பாருங்க.அப்படியே சேந்துடும் வேலை.என் கணவர் கூட அடிக்கடி சொல்லுவார்,இங்கிருக்கும் வெளிநாட்டு காரங்க சும்மாவே இருக்க மாட்டாங்க.எப்ப்வும் எதாவது அடுக்கிகிட்டு,க்ளின் பன்னிட்டு இருப்பாங்க.ஆனா எப்படி ப்ளான் பன்னனும்னு ஐடியாவேஇல்லை.அறுசுவையிலும் தேடினேன் கிடைக்கவில்லை.ரொம்ப நன்றிங்க வனிதா அக்கா, ப்ரியா,கவிதா.எனக்கு இப்போ ஓரள்வுக்கு புரிஞ்சிடுச்சு.அம்மா வீட்டில் இருந்தவரைக்கும் எந்த வேலையும் செஞ்சதில்லையா.இங்க தனியா வந்ததும் தலையே சுத்துது.எப்படி செய்யனுன்னு தெரியலை .இப்பொ புரிஞ்சிடுச்சி.இனி பன்னுவேன்.என்கணவர் எந்த உதவியும் என்க்கு பன்ன மாட்டார்.அப்படி செய்,இப்படி செய்யின்னு சொல்லுவதோட சரி.நான் தான் எல்லாமே பாக்கனும்.வேறு ஏதாவது நஞாபகம் வந்தாலும் வந்து சொல்லுங்க.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

super tips kavitha,
very good ideas. and easy to follow.
am a new member to arusuvai

கலக்கிட்டிங்க கவிதா.இதற்கு மேல் டிப்ஸ் இருக்குமான்னு தெரியலை.கற்பனை பன்னி பாக்கும் போது உங்க வீடு நல்ல சுத்தமாக இருக்கும்னு நினைக்கிறேன்.
வனிதா உங்க கிச்சனை நான் போட்டோவில் பாத்திருக்கேன்.நல்ல ப்ளான் பன்னி அழகா அடுக்கி வச்சிருக்கிங்க.
பிரியா, லாவண்யா நீங்களும் அழகா சொல்லி இருக்கிங்க.உண்மை தான் லாவண்யா.பசங்களுன்னு பொம்மை வாங்கி வாங்கி இடம் தான் அடைக்குது.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

கேள்வி கேட்ட மனோவுக்கும் அழகாக பதில் சொன்ன தோழிகளுக்கும் நன்றி.
ஹாய் விவி நல்லா இருக்கீங்களா?கவிதாவின் பதில் ரொம்ப உபயோகமாக இருந்தது. நன்றி தோழிகளே

idhuvum kadandhu pogum.

மேலும் சில பதிவுகள்