இடியாப்பம் செய்வது எப்படி

இடியாப்பம் செய்வது எப்படி, அதற்கு என்ன பொருட்கள் தேவை.மாவு எப்படி தயாரிப்பது? தயவு செய்து சொல்லுங்கள் .

http://www.arusuvai.com/tamil/node/3868
இந்த இழை உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன் . சந்தேகம் இருந்தால் கேளுங்கள் .

தோழி, அதில் என்ன பொருட்கள் வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. அதில் இருக்கும் செய்முறை புரியவில்லை.

முதலில் பச்சை அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் . பிறகு களைந்து காய போடவும் . அரிசி அளவு அதிகமாக இருப்பின் மாவு மில்லில் அரைக்கவும் , அல்லது மிக்ஸ்யில்அரைக்கலாம் . பிறகு ஒரு சட்டியில் சிறிது சிறிதாக கொட்டி அடுப்பில் வறுக்கவும் . அதன் ஈரத்தன்மை போனதும் மாவு வெளியே தெறிக்க ஆரம்பிக்கும் . பிறகு அதை வேறு பாத்திரத்தில் கொட்டி ஆறவிட்டு சலிக்கவும். மாவு வருக்கும் போது மரக்கரண்டி உபயோகித்தால் கை வலிக்காது (நிறைய செய்யும் போது ) கை விடாமல் வருத்துகொண்டே இருக்க வேண்டும் . இல்லாவிட்டால் மாவு சிவந்து விடும் . மாவு வெளியே தெறிக்கும் வரை செய்ய வில்லை என்றாலும் சீக்கிரம் மாவில் பூசனம் வந்து விடும் . நீண்ட நாட்கள் வைக்க முடியாது . இந்த மாவில் ஒரு ஆழாக்கு போட்டால் ஒன்று அல்லது 1 .5 தம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து (தண்ணீரில் உப்பு சேர்த்து விடவும்) மாவில் ஊற்றி பிசையவும் . மரகரண்டியின் பின்புறமாக கிளறவும் . சிறிது தளர்த்தியாக வைத்தால் தான் பிழிய முடியும் . பிறகு இடியப்ப அச்சில் போட்டு பிழியவும் .

வேறு சந்தேகம் இருப்பின் கெள்ளுங்கள் .

ரொம்ப நன்றி பா. அரிசி வறுக்கும் போது நெய், அல்லது எண்ணெய் விட்டு வறுக்கலாமா?

Hi, v.jeevish

நெய் ,எண்ணெய் எதுவும் சேர்க்க வேண்டாம்.வெரும் வாணலியில் மாவை வருக்க வேண்டும்.

ரொம்ப நன்றி உமா. நீங்க புதிய உறுப்பினரா?

அரிசியை வருக்க வேண்டாம் . அரிசி மாவை தான் வருக்க வேண்டும் . உமா சொன்னபடி நெய் எதுவும் சேர்க்க வேண்டாம் வெறும் மாவாக வறுத்தால் போதும்.

ரொம்ப நன்றி ரம்யா.

என்னிடம் 2பாக்கெட் புட்டு மாவு(ரெடிமேடு),அரிசி மாவும் (ரெடிமேடு)இருக்குது.அதை வச்சு இடியாப்பம் பன்னலாமா?எப்படி செய்யனும்?எனக்கு இடியாப்பம்னா நல்ல இஸ்டம்.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

yes v.jeevish

மேலும் சில பதிவுகள்