***அரட்டை கார்னர் --- சந்தோஷமா இருங்க...***

அப்பப்பப்பா.... என்ன ஒரு வேகமான வாழ்க்கை சூழ்நிலை... எல்லோரும் எப்படி இருகீங்க? நானும் அரட்டை அடிச்சி நாளாச்சு....
இப்போ இருக்கிற மற்றும் காணாமல் போன பல பழைய தோழிகள்,நிறைய புது வரவுகள்...... அனைவருக்கும் ஒரு ஹாய்!!!
அரட்டை அடிக்கலாம் எல்லோரும் வாங்க... இன்று ஒரு நாள் முழுவதும் என்ன என்ன செய்தீங்க என்று இங்கே சொல்லணும்... அதாவது காலை எழுந்தவுடன் தொடங்கி குழந்தைகள்/கணவர், எழுந்து, அவங்களுக்கு டிபன், சாப்பாடு செய்து கொடுத்து, ஸ்கூல் கொண்டு போய் விட்டு திரும்ப வந்து எங்கே போனீங்க/ என்ன சமையல் செய்தீங்க? அல்லது வேற எதுவானாலும்.... பிறகு சாயங்காலம் இதேப்போல என்னவெல்லாம் நடந்தது.... நகைச்சுவையா!, ருசிகரமா!, சுவாரசியமா!... வந்து சொல்லுங்க...

எனக்கு இப்போவெல்லாம் ரொம்பவே குளிர்விட்டு போச்சு... தூங்கவே முடியறதில்லைன்னு சொல்லிட்டு காலையிலயும் லேட்டா தான் எழுந்திருக்கிறேன்.... அப்புறம் காலை உணவு, மதியம் என்ன செய்யலாம்ன்னு யோசனை செய்து ஒரு வழியா செய்து முடிச்சி...திரும்ப இரவு சாப்பாடிற்கான யோசனை இது தினம் தினம் இருக்கு.... இதுக்கு(இந்த குழப்பமான யோசனைக்கு) யாராவது ஈசி வழி சொல்லுங்களேன்!. மதியம் சாப்பிட்டு குழந்தைகள் தூங்கும் பொழுது மிகச்சிறிய குட்டி தூக்கம். இன்னும் சம்மர் ஹாலிடேஸ் இருக்கிறதால இப்போ இவ்வளோ தான் வேலை. வெளியே எங்கவும் போகல...
நான் இதுவரை செய்தது என்னன்னா....எனக்கு தெரிந்த மெயின் டிஷ் அயிட்டங்களை லிஸ்ட் போட்டு வச்சிட்டு அதில ஒவ்வொரு நாளும் ஒன்னு... அதில உள்ள மெயின் மற்றும் சைட் அயிட்டங்கள் என்று செய்தேன். இப்போ அதுவும் ஒரே போரா இருக்கு அதான்.... ஹி... ஹி....ஹி...

என் குழப்பத்திற்கு பதில் கண்டிப்பா சொல்லணும்...

உருப்படியா ஒரு பயனுள்ள இழை தொடங்குமுன் கொஞ்சம் அரட்டை அடிக்கலாமேன்னு இதை தொடங்கினா இன்னும் பலரும் பழைய இழையையே ஓட்டுற மாதிரி இருக்கு... நல்ல வரவேற்பு தான்.
அரட்டை புதுசுன்னு டேட் போடணுமோ!!!

ஓ பொப்ஸ் அப்படியா சங்கதி போட்டால் தானே புரியூம் என்னவோ புதுசா வேறேதாவது இழை ஆரம்பிச்சிருக்கீங்கன்னு நெனச்சேன்,. ம்ம் இனி எல்லோரும் வாங்க பொப்ஸின் அரட்டைக்கு.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் இன்னுமா எல்லோரும் தூங்கிறீங்கா யாராவது வாங்க கொஞ்சம் பேசலாம்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நான் office-ல் இருந்து பதிலளிக்கிறேன்

ஹலோ ஆமினா எப்ப வாரீங்க ம்துரைக்கு

ஹாய் ஹெலோ யாராவது இருக்கீங்களா? கொஞ்சம் பேசுவோமா? ஏன் அரட்டை கார்னறை இப்பிடி காய விடுறீங்க?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் பூங்காற்று நலமா? என்ன உங்கள பார்க்கவே முடியல. பசங்களுக்கு ஸ்கூல் போயிட்டு இருக்காங்களா.

ஹாய் பூங்காற்று, வினோ எப்படி இருக்கிங்க. நானும் வந்துட்டேன் இந்தாங்க டீ சூடா எடுத்துகோங்க வினோ(_)> பூ உங்களுக்கு லேட்டா டீ தரேன்.:)

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி டீக்கு தேங்க்ஸ் என்ன இன்னைக்கு ஆபீஸ் லீவு இல்லையா. ம் நல்லா ஒர்க் பண்ணு. எங்கப்பா மற்ற தோழிகள் எல்லாம் வாங்க தேவிக்கிட்ட இருந்து டீ வாங்கிகோங்க.

மேலும் சில பதிவுகள்