3 வயது குழந்தைக்கு என்ன உணவு ஸ்பெஷல் ஆக செய்வது ?

ஹாய் அக்கா
நான் நீண்ட நாள்களுக்கு பின் தொடர்பு கொண்டு உள்ளேன் .
எனக்கு 3 வயதில் குழந்தை உள்ளது குழந்தையை நன்றாக கவனிக்க டிப்ஸ் மற்றும் உணவு டிப்ஸ் ம் குடுங்க நான் இன்றைக்குள் உங்களோட பதிலை எதிர் பாக்குறேன் .
நன்றி .

ruffi ,

குழந்தை உணவுக்கு இந்த லிங்கை பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/5055
http://www.arusuvai.com/tamil/node/14967
thyroid பற்றி பின்வரும் லிங்கை பாருங்க..உங்களுக்கு உதவும்
http://www.arusuvai.com/tamil/node/8742
எனக்கும் இந்த கேள்விக்கான பதில் தெரிந்தால் ரொம்ப நல்லா இருக்கும்..மற்ற தோழிகள் என்ன சொல்ராங்கன்னு பார்ப்போம்..

என்றும் அன்புடன்,
கவிதா

குழந்தையை நன்றாக கவினிக்க என்றால் சாப்பிட வைக்கவா அல்லது படிக்கவைக்கவா அல்லது நல்ல பழக்கவழக்கம் சொல்லிகொடுக்கவா என்று புரியவில்லை தோழி. தெளிவாக இருந்தால் இன்னமும் தெளிவாக பதில் தந்திருப்பேன்.

குழந்தையை அவர்களாக சாப்பிட செய்யுங்கள். அவர்களாகவே எடுத்து சாப்பிடும் இரண்டு கவளம் கூட அவர்களுக்கு போதும், உடம்பிலும் ஓட்டும். அவர்களுக்கு சாப்பாட்டின் மேல் ஒரு பிரியம் வர வேண்டும் வெறுப்பு வரக் கூடாது. அதனால் சாப்பிடவில்லைஎன்றால் திணிக்கவோ திட்டவோ கூடவே கூடாது. என் சாப்பிட வேண்டும் அதனால் என்னாகும் என்று அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு என் மகளுக்கு நீளமான தலைமுடி பிடிக்கும். அதனால் நான் எப்பொழுதுமே சொல்லுவேன்...தண்ணீர், காய்கறி, கீரைகள் சாப்பிட்டால் நீளமான தலைமுடி வளரும் என்று.....முக்கால்வாசி நேரங்களில் அது வொர்க் அவுட் ஆகும். அவள் கீழே விழுந்தாள் அல்லது இங்கே வலிக்குது அங்கே வலிக்குது என்றால் நீ சாப்பிடவில்லை அதனால் தான் வீக்காக இருக்கிறாய் அதனால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்றும் சொல்லுவேன். சமையல் செய்யும் போது அவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த காயை கொண்டு, இது உனக்கு பிடிக்கும் தானே இதை நான் உனக்கு சமைத்து தரட்டுமா, வா சேர்ந்து சப்பாத்தி மாவு பிசையலாம் என்று விளையாடி அவர்களின் ஆர்வத்தை கூட்டனும்.

பழக்கவழக்கம் நாம் எப்படி அவர்களிடம் நடந்துக் கொள்கிறோமோ அதன் படி தான் அவர்களும் நடப்பார்கள். அதனால் அவர்களுக்கு நாம் தான் ஒரு முன்னுதரணமாக இருக்க வேண்டும். ஒரு பொருளை எடுத்த இடத்தில் நானும் வைத்தால் அவர்களும் அதையே செய்வார்கள். அதனால் குழந்தைகள் இருக்கும் போது என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்று மிகவும் ஜாக்கிரதையாக செயல் பட வேண்டும். ஒரு நல்ல குடிமக்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்