தோழீஸ்.....ஏன் இப்படியெல்லாம்......?

ஹாய்... தோழீஸ்...ரொம்ப நாளாக சில விஷயங்களை பற்றி ஷேர் செய்யனும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்ப தான் நேரம் கிடைத்தது.
எனக்கு ஏற்பட்ட அனுபவங்களால் குழம்பிப் போய் உள்ளேன். உங்களுக்கும் அது போல அனுபவம் ஏற்பட்டிருக்கா.
அப்படினா உடனே வந்து இங்க பதிவிடுங்க. அப்படியே அதிலிருந்து தப்பிப்பதற்கான ஐடியாவும் சொல்லனும். ஓகேவா.

ஹாய்.. தோழீஸ்... தலைப்பை பார்த்து குழம்பிடாதீங்க.எனக்கு எப்படி ஆரம்பிக்கரதுன்னு தெரியல. அதனால் தான். சமீப காலமாக என்கூட நட்பாக பழகிய பக்கத்து காம்பௌன்ட் தோழிகள் என்னை ஏமாத்துகிறார்கள். நான் தான் அவர்களின் குணம் தெரியாமல் பழகிட்டேனா....... இல்லை நான் அவர்களிடம் சரியான முறையில் பழக வில்லையா என்று தெரியலை....... சரி என்னதான் உன் பிரச்சனைனு நீங்க கேட்பது புரியுது....... இதுதாங்க.......

நான்பாட்டுக்கு வீட்டுக்குள்ள அமைதியா டைம்பாஸாக ஃபேஷியல் செய்வது, ஃபாஷன் ஜுவல் மேக்கிங் செவது என்று இருந்தேன்.

ஒரு நாள் எங்க பக்கத்து வீட்டுபெண் வந்து நீங்க அழகா ஃபாஷன் ஜுவல்ஸ் செய்யரீங்க. நான் வாங்கிக்குறேன். நான் ஒரு டெய்லர். என் கிட்ட தச்சுக்குங்க என்று சொல்லி போன வருடம் நவம்பர் மாதம் நிறைய வாங்குனாங்க.
அதில் கால்வாசி அமவுன்ட் மட்டும் கொடுத்துட்டு மீதியை அப்பதரேன் இப்பதரேன்னு இழுத்தடித்தார்.
நான் ஏதும் தைக்க கொடுத்தால் மட்டு உடனேயே எனக்கு அவசரமா பணம் வேணும் என்று ஏதேனு ஒரு தவிர்க்க முடியாத காரணம் சொல்லி வாங்கிடரார்.

சமீபத்தில் ஒரு பிளவுஸ் தைக்க கொடுத்தேன் ஒருமாதம் முன்பு. ரெண்டு நாளில் கொடுப்பதாகக் கூறி ஒருமாதம் முன்பு வாங்கினார்.
இன்னும் தைக்கல. தினமும் மற்ற கஸ்ட்டமர்களுக்கு தைப்பதும் டெலிவரி செவதுமாக இஉந்தார். எப்பதான் தச்சு கொடுப்பீங்கன்னு ரெண்டு வாரமாக கேட்கிறேன் இன்னைக்கு நாளைக்குன்னு சொல்லுராங்களே தவிர தச்ச பாடில்லை.

3 நாட்களுக்கு முன்னாடியே வெள்ளிக்கிழமைக்குள்ளெ தாங்க. வெள்ளிக்கிழமை போடனும்னு சொல்லிட்டேன். இன்னைக்கு காலையில வரைக்கும் தைக்கல.

விஷயம் என்னன்னா இன்னைக்கு காலையில போய் கேட்டப்ப இன்னைக்கு கோviலுக்கு போரேன் நாளைக்கு ஊருக்கு போறேன் அதனால செவ்வாய் கிழமை தரேன்னு சொல்ரார். எனக்கு ரொம்ப கோவம் வந்திடுச்சு. நான் ஒன்னும் ஓசிக்கு தைக்க சொல்லலை. தைக்க இஷ்ட்டம் இல்லனா சொல்லவேண்டியதுதானே. அப்படீனு கோவமா என்னோட துணியை வாங்கிட்டு வந்திட்டேன்.

எனக்கு என்னடா இப்படி கோவப் பட்டுட்டோமே........ அவசரப்பட்டுட்டோமோ........... அப்படி கோவமா பேசியிருக்கக் கூடாதோன்னு ஃபீல் பண்ணுரே.

பொதுவா யார் கிட்டேயும் கோவமா பேசியதில்லை நான். எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் கோவப்பட்டது இல்லை. இன்னைக்கு நான் கோபப் பட்டது சரியா..... குழப்பமா இருக்கு.

இது ஒரு பிரச்சனை மட்டு அல்ல....... மற்றொரு தோழியும் கிட்டத்தாட்ட அப்படிதான் நடந்தூகொள்கிறார்.
என் கணவரோ உன்னை பார்த்தால் இளிச்சவாஇதனமா இருக்கு போலன்னு வேற சொல்லிகாட்டரார்.

உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன் தோழீஸ்.......

தோழிகள் என்பவர்கள் நாமே தேர்வு செய்பவர்கள்... தப்பு ஏது நடந்தாலும் அதுக்கும் நாமே பொருப்பு. நம்ம தேர்வு சரி இல்லை என்று தான் அர்த்தம். கவலையை விடுங்க... எல்லா சூழ்னிலையும் நமக்கு பாடம் கற்று தருபவையேன்னு சந்தோஷப்படுங்க. வரேன்... வந்து என் அனுபவத்தை சொல்றேன்... நேரம் இல்லை இப்போ மகளை அழைத்து வர கிளம்பனும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வனிதா. நீங்கள் சொல்வது உண்மைதான் வனிதா........ இருந்தாலும் எனக்கு இன்னைக்கு கோபத்தில டென்ஷன் ஏறி மயக்கமே வந்திடுச்சு. நம்மளோட பொறுமை, இரக்க குணத்தை சோதனைக்குனு கஷ்ட்டப் படுத்துவது போல தான் நடந்துகொள்கிறார்கள்.

கண்டிப்பா உங்களுடைய அனுபவங்களையும் எதிர் பார்க்கிறேன். நன்றி....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

சாய்லக்‌ஷ்மி, இது போன்ற அனுபவங்கள் பல தோழிகளிடம் நிச்சயம் இருக்கும். இது என்னுடைய கருத்து. முதலில் பழகும் தோழிகளை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். குறுகிய கால நட்பை வைத்து கடன் தருவதோ, அவர்கள் உதவியை நாடுவதோ வைத்துக் கொள்ளக் கூடாது. நட்பில் நீண்ட புரிதல் வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நட்பில் வியாபாரம்,கடன் இவை இரண்டையும் தவிர்ப்பது புத்திசாலிதனம் என்பேன். ஏனென்றால் நீங்கள் மூன்றாவது ஆளிடம் வியாபாரம் செய்தீர்களானால் அதில் எந்த லாப நட்டம் வந்தாலும் அவர் ஒரு அந்நியர் என்ற அளவிலே போய்விடும் பெரிய அளவில் நட்டம் ஏற்பட போவது இல்லை. அவரிடம் நீங்கள் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசலாம். ஆனால் பழகியவரிடம் அப்படி பேசமுடியாத தயக்கம் இருக்கும். இந்த நட்பால் கடன் தருவதை தவிர்க்க முடியாது. நட்பை ஆரோக்கியமாக பேண நினைப்பவர்கள் நிச்சயமாக அந்த நட்பிற்கு பங்கமாக கடன் வாங்க மாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் சொன்ன நேரத்தில் திருப்பி தந்துவிடுவார்கள். ஆனால் ஒருசிலர் வியாபார நோக்கத்திற்காகவே நைச்சியமாக பேசி நட்பை வளர்ப்பார்கள். இது போன்ற ஆட்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தபடியாக, நீங்கள் 3வது நபரிடம் உங்கள் பொருட்களை விற்றாலும் அவர்கள் ஓரிரு குறைகளை தவிர பெரிதாக எதையும் சொல்ல போவதில்லை. அப்படியே சொன்னாலும் அது உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால், நட்பிடம் பொருளை விற்றால் அந்த குறையை கடைசிவரை சொல்லிக் காட்டி அவருக்கு தெரிந்தவர் அறிந்தவர்களிடமெல்லாம் சொல்வார்கள். அவளிடம் பொருள் வாங்கினேன் இப்படியாகி விட்டது. இவ்வளவு பணம் தந்தேன். ஒருவாரம் கூட வரவில்லை என்று இப்படியெல்லாம் பேசுவார்கள். அதே அவர்கள் முகம் தெரியாத வேறு ஒரு ஆளிடம் ஆயிரக்கணக்கில் தண்டம் அழுது ஏமாந்து இருப்பார்கள். அதை பற்றி மூச்சே விடமாட்டார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் ஏமாற்றத்தான் செய்வார்கள். இதில் அவர்களை குறை சொல்ல முடியாது. நாம் தான் விழிப்போடு இருக்க வேண்டும். அவர்கள் சாமார்த்தியம் ஏமாற்றுகிறார்கள். நம் அறியாமை ஏமாறுகிறோம்.

சாய்லக்‌ஷ்மி, நீங்கள் அந்த தோழியிடன் ப்ளவுஸ் தைத்து கொடுக்கும்வரை காத்திருந்து விட்டு, அவர் பணம் கேட்கும் போது பழைய கடன் சரியாக போய்விட்டது என்று சொல்லி இருக்க வேண்டும். அவர் தரவேண்டிய பணத்தை இன்று நாளை என்று எவ்வளவு சாமார்த்தியமாக சொல்லிக் கொண்டு வருகிறார் பாருங்கள். வாக்கு தந்தவருக்கு அவர் தந்த ஒரே ஒரு நாள் தான் இருக்கும், ஆனால் தராதவருக்கு தினம் தினம் நாளைகள் வரும். இன்று போய் நாளை வா என்று. அது போல தன் இவர்கள் போன்றவர்கள் கதையும். இனியும் நட்பை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். வியாபார நோக்கோடு வருபவர்களிடம் நட்போடு பழகுங்கள். ஆனால் நட்பை வளர்க்க வேண்டாம். உண்மையான நட்பிடம் வியாபாரத்தை கலக்க வேண்டாம்.

பி.கு :- அன்பு தோழிகளே, அனைத்து நட்பையும் நான் சொல்லவில்லை. இந்த தோழி சந்தித்த வகை தோழிகளை பற்றி சொன்னேன். என் அறுசுவை தங்கங்கள் புடம் போட்டவை அல்லவா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழிகள் வனிதா, ப்ரியா.......கரெக்ட்டா சொல்லிட்டீங்க........ ஏற்க்கனவே அவர்களின் கெட்டகுணத்தை அறியும் சம்பவம் நடந்தது. அதிலிருந்து அவரிடம் எதுவும் கொடுப்பதில்லை. ஆனால் என்னுடைய பணத்தை வாங்குவதற்க்காக தைக்க கொடுத்தால் அந்த பெண் இப்படி நடந்துகொண்டாள்.

கண்டிப்பா இனிமே எந்த டீலும் வச்சுக்கக் கூடாதுதான்..

பேப்பர்லயும், போஸ்ட் ஆபீஸ் வாசலில் கொடுத்த பிரம்மாண்டமான விளம்பரத்தை பார்த்து ஒரு பிரபலமான கோச்சிங் சென்ட்டரில் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டேன். ஏன்னா அங்கே கோச்சிங் செய்வதற்க்கு எந்த ஒரு திறமையான நபரும் இல்லை என்பது கிளாஸ்ல சேர்ந்த பின்புதான் தெரிந்தது. எப்படியெல்லாம் பிளான் பண்ணி ஏமாத்துறாங்க பாருங்க. ஆனால் அந்த சென்ட்டர் விளம்பரத்தை ஊரெல்லாம், தினசரி பேப்பர்களிலும், பிட் நோட்டீஸாகவும் கொடுத்து ஏமாத்திகிட்டு இருக்காங்க.

நான் கல்லூரியில் சேர்ந்து புதிது. என் தோழி ஒருவருக்கு வேறு டிபார்ட்மண்டில் ஃப்ரெண்ட் உண்டு. அவருடன் விடுதியில் அவர் தோழியின் ரூமுக்கு போய் வரும் பழக்கம் உண்டு. அப்படி போகும் போது பழகியவர் தான் நம்ம ஸ்டோரியின் வில்லி. ஹீரோயின் நானே தான் ;) (ஹீரோயின்னு சொல்லலாமா வேண்டாமான்னு கதை முடிவில் முடிவு பண்ணுவோம். வெய்ட்டீஸ்...)

எங்க காலேஜ்ஜில் செமெஸ்டர் ஃபீஸ் 7000. நான் கல்லூரியில் சேர்ந்து முதல் செமெஸ்டெர் முடிந்து இரண்டாவது செமெஸ்டெர் சேர்ந்த நேரம் என் அப்பா வேறு ஊருக்கு மாற்றலாயிட்டார். அந்த ஊரை சேர்ந்தவர் தான் நம்ம வில்லி. அதன் முன்பே தோழியோடு போவதில் நங்கு பழகியவர் என்பதால் வில்லியின் தந்தையை நான் கார்டியனாக என்னை அழைத்து போகும் தகுதி உள்ளவராக கல்லூரியில் போட்டுவிட்டேன். அப்பா, அம்மா உடல் நலம் ஒவ்வொரு முறையும் என்னை வந்து அழைத்து போக முடிவதில்லை... வீட்டுக்கு வராமல் இருக்கவும் முடிவதில்லை... அதன் தாக்கம் தான். விடுதிக்கு அவளை காண வரும்போதெல்லாம் அவர் தந்தை காண அவள் என்னையும் அழைத்து போவது வழக்கம். விடுதிக்கு திரும்ப வரும்போது அப்பா பஸ்டாண்டில் விட்டால் தோழியுடன் (நம்ம கதை வில்லியுடன்) வருவது வழக்கம். மூன்றாவது செமெஸ்டர் நேரத்தில் வரும் போது வழியில் வில்லி ரொம்ப சோகமா இருந்தாங்க... என்னன்னு விசாரித்ததில், அவர் தந்தை வெளினாட்டில் வேலை பார்த்து திரும்பியவர் என்றும், பல வருடங்களாக இந்தியா வந்ததில் இருந்து நிலையான வேலையில் இல்ல என்றும், இந்த செமெஸ்டர் ஃபீஸ் கட்டவே பணம் இல்லை என்றும் அழுதாள். நம்ம கதை ஹீரோயின் (நான் தாங்க) மனசு ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு. உடனே நான் எங்க அப்பாகிட்ட சொல்றேன், நீ அழாதன்னு சமாதானம் சொல்லி ஹாஸ்டல் போன உடனே அப்பாக்கு கடிதம் எழுதி விஷயத்தை சொன்னேன். அவர் நேரில் பணம் கட்ட வந்த போது “கண்ணு.. இதெல்லாம் சரி வருமா??? தேவையா நமக்கு? யோசி...”னு சொன்னார்... “அப்பா பாவம்பா... ஒரே ஊரில் இருக்கோம், நமக்காக என்னை ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு கூட்டிட்டு வரார்... இன்னும் 1 மாதத்தில் திருப்பி கொடுக்குறதா சொன்னா... ப்ளீஸ்ப்பா...” என்றேன். “சரிடா... உன் விருப்பம்.. நான் கட்டுறேன்” என்று சொல்லி கட்டினார் வில்லிக்கும் சேர்த்து. எனக்கு சந்தோசம் தாங்கல தெரியுமா?? அப்போது மனதில் என் தோழி பணம் இல்லை என்று அழ மாட்டாள் இனி என்பது மட்டுமே இருந்தது. என் அப்பா எத்தனை உழைத்து அந்த பணத்தை சம்பாத்தித்தார் என்பது என் புத்தியில் இல்லை.

அடுத்த மாதம் ஒரு காரணத்தை என்னை தேடி என் அறைக்கு வந்து சொல்லிவிட்டு போனார் வில்லி. நம்பினேன். அதுக்கு அடுத்த மாதம் அவள் அப்பா அவளை காண வந்த போது என்னையும் அழைத்து போனாள்... அவர் ஒரு கதை காரணம் சொன்னார்... நம்பினேன். அடுத்த மாதம் அவளாக காரணம் ஏதும் சொல்லவில்லை... நானாக போய் கேட்டேன். அப்பா வரல என்றாள். நம்பினேன். அடுத்த மாதம் அவள் அப்பா வந்து அவளோடு பேசிக்கொண்டிருப்பதை தற்செயலாக காண நேர்ந்தது... எனக்கு பயம் வர தொடங்கியது. அவர் வந்தால் என்னை அழைத்து செல்வாள்... ஏன் இம்முறை விடப்பட்டேன்??? அவளாக பணம் வராததுக்கு காரணம் சொல்வது அடியோடு நின்று போனது. நானாக கேட்க துவங்கினேன்... முடியவில்லை. சண்டை வர துவங்கியது... அவர் அம்மாவிடம் போனில் பேசி கேட்டேன்... அவர் “பணத்தை வெச்சுகிட்டா தர மாட்டங்கறோம்... வை போனை”னு சொல்லி என் பதிலுக்கு காத்திருக்காமல் கட் பண்ணார்... தெளிவா புரிஞ்சுடுச்சு... நாமம் போட்டுட்டாங்கைய்யா.

போனை வைத்துவிட்டு அழுதேன்... அப்பா கேட்டார்... சொன்னேன்...

“எனக்கு முன்பே தெரியும்... அந்த பணம் வராதுன்னு. நான் கொடுக்கலன்னா நீ என்கிட்ட தான் சண்டை போட்டிருப்ப... அதான் கொடுத்தேன், சரி நீ என்னைக்கு வாழ்க்கையை புரிஞ்சுக்குறது... அதுக்கு விலை 7000”னு சொல்லிட்டு சிரிச்சுட்டு போயிட்டார். அவர் மனதில் பணம் போன கவலையை விட இனி இது போல் ஏமாரமாட்டா பொண்ணுன்னு சந்தோஷம் தான் தெரிஞ்சுது.

விசாரித்ததில் அவள் தந்தைக்கு இந்தியாவில் வேலை இல்லாமல் இல்லை... இதே தான் வேலை... வந்ததில் இருந்து ஏமாற்றியே பிழைக்கிறார் என்று தெளிவா காவல் துறை சொல்லிடுச்சு. பணம் இன்று வரை வரல :) போலீஸ்காரரிடமே வேலையை காட்டிய வில்லியையும் அவர் அப்பாவையும் இன்றும் என் நினைவில் இருந்து நீக்கவில்லை. படித்த பாடத்தை மறப்பது தவறு தானே... அதான்.

வாழ்வில் அதுவே நான் நண்பர்களுக்கு கடனாக கொடுத்த கடைசி பணம். இப்போதெல்லாம் உதவி என்று கேட்பவரை கூட நம்புவதில்லை... அதில் எந்த அளவு உண்மை இருக்கு என்று தெரிந்து கொண்டு, நேரடியாக நான் செய்யும் உதவி போய் சேர்கிறதா என்பதையும் தெரிந்து கொண்டு, திரும்ப எனக்கு இந்த பணம் வேண்டாம்... இது கடன் அல்ல உதவி என்று முடிவு செய்த பின்பே கொடுக்கிறேன். அதுவும் என்னால் முடிந்ததை நியாயமான தொகையை மட்டுமே.

ஆனா... இப்போ சொல்லுங்க... இந்த கதையில் நான் ஹீரோயினா??? காமெடியனா??? ;)

மாரல் ஆஃப் தி ஸ்டோரி 1:

நட்புக்கும், உறவுகளுக்கும் நடுவே பணம் தான் சகுனி... விளையாடிடும்.

மாரல் ஆஃப் தி ஸ்டோரி 2:

ஃபீல் பண்ணு... பீலாவை நம்பாதே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புத்தோழிகள் கல்பனா, வனிதா......... முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். கல்பனா........ உங்களுடைய கருத்தும், நீங்கள் சொன்ன விதமும் எங்க அம்மா சொல்வதுபோலவே இருக்கு. என்ன அவர் சொல்லியிருந்தால் "உனக்கு எவ்வளவு சொன்னாலும் இதே பொழப்பா போச்சு போ" அப்படீனு சேர்த்து சொல்லியிருப்பார். கல்யாணத்திற்க்கு முன் இப்படியெல்லாM இருந்ததில்லை. குறிப்ப திருமணத்திற்கு பின்னால் தனிக் குடித்தனம் வந்ததிலிருந்து அதுவும் காம்பவுண்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து தான் இப்படி. "ஐ..எல்லொரும் இப்படி பாசமா பழகறாங்களே" அப்படீனு பழகப் போய் இப்படி ரெண்டு வருஷமா பட்டுக்கிட்டு இருக்கேன். கண்டிப்பா தயவு தாட்சன்யம் பார்க்காமல் லிமிட்டாதான் இருக்கணும்.

வனிதா....... கண்டிப்பா உங்கள் அனுபவத்தை படிக்கும்போது சிரிப்பாக இருந்தாலும் பணத்தை இழந்த வேதனையைஉங்க அப்பா சரியான முறையில் எடுத்து சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது..... பரவாயில்லை. நீங்கள் ஒரே பதிலில் சரி பண்ணிகிட்டீங்க. எனக்கு ரெண்டு வருடமாயிடிச்சு.

மேலும் சில பதிவுகள்