தமிழகத்தில் நிலஅதிர்வு :-(

தமிழகத்தில் இன்று காலை திடீர் நில அதிர்வு வந்து இருக்கு. குறிப்பா திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் தான் வந்து இருக்காமா. நம் அறுசுவை தோழிகளே, எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
உங்க ஊரில் இந்த மாதிரி ஏதேனும் உணர்தீங்களா??

ஹாய் சுகி..... எப்ப பா நிலநடுக்கம் வந்துச்சு........ இங்க திருப்பூர்ல காலையிலிருந்து வ்ந்யிலும் இப்ப மழைவௌவது போல மேக மூட்டமா இருக்கு. இங்க ஏதும் உணரவில்லையே நான். அங்க கோவையில் உணர்ந்தீங்களா.......... நம்ம தோழி களும் என்ன சொல்ராங்கன்னு பார்ப்போம்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

உங்களோட இழைப் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்.... பெருசா ஒன்னும் இல்லையே...???? அந்த ஊர்க்கார தோழிகளே... வந்து எதாவது சொல்லுங்க.... மனசு பதை பதைக்குது.... எந்த பேப்பர் ளையும் பாக்க முடிலையே/....

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

ப்ரியா, திருப்பூர் ல ஒன்னும் இல்லையா?சந்தோசம். இங்க ஒண்ணுமே இல்ல. கரூர் ல குட லேசா வந்ததா சொல்றாங்க. தெரியல. நியூஸ் கேள்வி பட்ட உடனே பயந்துட்டேன்,அதான் நம்ம தோழிகள் நிலை அறிய இதை தொடங்கினேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பெருசா ஒன்னும் இல்லைன்னு தான் நினைக்கறேன், எல்லாரும் நிலம் அதிர்ந்ததை உணர்ந்ததா தான் சொல்லி இருக்காங்க. கொஞ்ச வீடு கிராக் விட்டு இருக்காம்.
இந்த லிங்க் கொஞ்சம் பாருங்க.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=293595

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அச்சசோ! என்ன சுகி சொல்லுர இந்த இழை பார்த்ததும் பயந்துட்டேன் டா;( ஆனா எங்க ஊர் பக்கம் எதுவும் இல்லமா. ஆனா கடல் ஓரம் இருக்கிறோம் கொஞ்சம் பயம் இருக்கு டா

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்