ஒரு நிமிடமாவது ப்ராத்தனை செய்யுங்கள்:::((((

அறுசுவை தோழிகளே,,, ரொம்ப மனவேதனையோடு இந்த இழைய போட்றேன் என் கூட அலுவலகத்தில் வேலை பாக்குர ஒருத்தர் ரத்தா அழுத்தம் அதிகமாகி சுயநினைவை இழந்து மூளையில் ரத்தம் ஓட்டம் இல்லாமல் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்பதை வேதனையோடு தெரிவிக்கிறேன்.. அவருடைய குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆக வில்லை என்பது இன்னும் வேதனை அவருக்க தோழிகள் அனைவரும் ஒரு நிமிடமாவது ப்ராத்தனை செய்யுங்கள்:::((((

மனவேதனையுடன் உங்க தோழி...

விமலா ரொம்ப வேதனையான விஷயம் கவலை படாதீர்கள் உங்கள் தோழி நல்ல நலத்துடன் கூடிய விரைவில் குணமடைய அறுசுவை தோழ தோழிகளின் பிரார்த்தனை நிச்சயம் உண்டு by elaya.G

ஹாய் ´விமலா உங்கள் தோழி சீக்கிரம் குணமடய நான் மனமுருகி இரைவனிடம் பிராத்திக்ரேன்.கவலைப் படாதீங்க உங்க தோழி சீக்கிரம் உங்களுடன் எழுந்து பேசுவா

அன்புடன்
துஷி

விமலா, கண்டிப்பாக ஒரு நிமிடம் இல்ல பா அவருக்கு சரியாகும் வரை வேண்டிக்கொள்கிறோம். அவர் சரியாகி விடும். கவலை வேண்டாம் தோழி, உடல்நிலை சரியானதும் கண்டிப்பாக தெரியப்படுத்தவும்.

thusytharun ,,,ganelaya ,,,v.jeevish உங்களுக்கு நன்றி பா நானும் அந்த

நம்பிகைல தான் இருக்கேன் அவருக்கு குணம் ஆனதும் கண்ணடிப்ப தெரியப்படுத்துவேன்,, மிகவும் நல்லவரு பா அவரு,,,, நினைச்சாலே மனசு வலிக்குது,,, ரொம்ப நன்றி பா கண்ணீருடன் உங்கள் தோழி

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

உங்க கொலீக்கு சீக்கிறம் உடம்பு நல்லாயிரும் கவலை படாதீங்க.... நாங்க இறைவனை பிராத்திக்கிறோம்....

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

விமலா... கவலை படாதீங்க... கண்டிப்பா உங்க நண்பருக்கு சரியாகிவிடும்... மேலும் வேலைக்கு போகும் மற்றும் எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும் அனைத்து தோழிகளுக்கும் ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து எவ்வளவு வேலை பளு இருந்தாலும் ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க... அதிக ஸ்ட்ரெஸ் தான் இந்த மாதிரி ரத்த அழுத்தம் அதிகமாக காரணமாகிறது... ரத்த அழுத்தம் அதிகமானதோட விளைவை பார்த்தீங்களா...? கேட்கவே பயமாக இருக்கு... தினமும் குறைந்தது 1 மணி நேரமாவது ப்ரீயா உங்களுக்கு பிடிச்சதை செய்யுங்க...

வித்யா பிரவீன்குமார்... :)

Nichhayamaga vendugirom.ThozhiKootu prarthanaiku valaimai undu

nisarbanu

விமலா உங்க ப்ரெண்டுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் , முகமறியா ஒருவருக்காய் மறைமுகமாய் கேட்கப்படும் ப்ரார்த்தனையை நிச்சயம் இறைவன் அங்கீகரிப்பான்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நிச்சயம் உங்கள் தோழி கடவுளின் கிருபையினால் விரைவில் பூரண குணமடைவார்,

கவலை படாதீங்க விமலா உங்கள் தோழிக்கு சீக்கீரமே குணமடைந்து விடும் , நாங்க எல்லோரும் பிராத்திக்கிறோம்,

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்