தேதி: August 13, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அரிசி - 2 டம்ளர்
கேரட் - 4
பீன்ஸ் - 4
காலிப்ளவர் - தேவைக்கேற்ப
தக்காளி - 2
வெங்காயம் - 2
சோயாபீன்ஸ் - ஒரு கப்
கரம் மசாலா, மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
அரைக்க:
கொத்தமல்லிதழை - சிறிதளவு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5
பச்சை மிளகாய் - 6
புதினா - சிறிதளவு
கிராம்பு, கசகசா - சிறிதளவு
தாளிக்க:
பட்டை
பிரியாணி இலை
நெய்
சோம்பு
ஏலக்காய்
முதலில் தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

குக்கரில் நெய் விட்டு பிரியாணி இலை, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு இவைகளைப் போட்டு வதக்கவும்.

பிறகு நறுக்கின பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து, இதனுள் போடவும்

10 நிமிடம் சிம்மில் வைத்து நன்கு கலக்கவும். இதனுடன் தக்காளி சேர்க்கவும். தக்காளியும், கலவையும் நன்கு வதங்க வேண்டும்

பின்னர் அதனுடன் கேரட், பீன்ஸ், காலிப்ளவர், சோயாபீன்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

பின் ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

ஒரு விசிலுக்கு பின்னர் கேஸை சிம்மில் வைத்து, பத்து நிமிடத்திற்கு பின்னர் எடுத்து சூடாக பரிமாறலாம்.

Comments
சுகந்தி
ரொம்ப நல்லா இருக்குங்க உங்க சமையல் பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G
hai suganthi
unga vege biriyani super.kandippa nan try panni pakurean.
ஹாய் சுகி
வெஜ் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கு டா. வாழ்த்துக்கள்:))) சுகிமா
உன்னை போல பிறரையும் நேசி.
suganthi
your easy veg biriyani very nice.so plz send home deleivery .regards.g.gomathi.
சுகந்தி
சுலபமா இருக்கு.... செய்து பாக்குறேன்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
சுகி
சூப்பர்.கலக்கலா இருக்கு ;)
வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
சுகி,
சுகி,
ஈசி வெஜ் பிரியாணி நல்லா இருக்கு.கண்டிப்பா செய்துட்டு சொல்றேன்.பிரசன்ட் செய்திருக்கும் விதம் நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.
சுகந்தி
ஹாய் சுகந்தி கடைசி படம் சூப்பரா இருக்கு,பிரியாணியும் சூப்பர் செய்துட்டு வறேன்.
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
சுகி
சுகி செய்முறை சுலபமா இருக்கு. வெஜ் பிரியாணி செஞ்சு ரொம்ப நாளாச்சுப்பா. அடுத்த முறை உங்க ஸ்டைலில் செய்து பார்த்துடுறேன்.
ஹாய் சுகி
ரொம்ப ஈசியா இருக்கு. வாழ்த்துகள் சுகி
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
சுகந்தி,
சுகந்தி,
எளிய பிரியாணி
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
நன்றி!!!!
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க(லேட்) நன்றி!!!!
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
நன்றி!!!!
இளையா - முதல் ஆளா வந்து பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி!!!!
முத்து லக்ஷ்மி - உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி,கண்டிப்பா பண்ணி பாருங்க.
தேவி - எப்படி இருக்க? வாழ்த்துக்கு நன்றி டா
கோமதி - நீங்க இல்லாம என் குறிப்பு ஒன்னு கூட இருக்காது, அந்த அளவு எல்லா குரிப்பிளையும் உங்க பின்னூட்டம் இருக்கு. ரொம்ப சந்தோசம்
ஆமி - ரொம்ப நன்றி
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
நன்றி!!!!
ரம்யா - இன்னும் உங்க அளவு வரமுடியல, வாழ்த்துக்கு நன்றிங்க
ஹர்ஷா - நீங்களே இப்படி சொல்லிடீங்களா, அடடே சந்தோசம் தாங்கல. மிக்க நன்றி
குமாரி - வாழ்த்துக்கு மிக்க நன்றி!!
வினோ - எப்படி இருக்க? ரொம்ப நாள்க்கு பின்னாடி பேசறோம். கண்டிப்பா பண்ணி பாருடா. வாழ்த்துக்கு நன்றி.
மஞ்சுளா -நலமா? வாழ்த்துக்கு நன்றி.
கவிதா - உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சுகந்தி...
ரொம்ப சுலபமா இருக்கு நன்றி சுகந்தி...
KEEP SMILING ALWAYS :-)
நாகா ராம்
முதல் முறையா பதிவுன்னு நினைக்கறேன். மிக்க நன்றிங்க
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சுகி
சும்மா சொல்ல கூடாது... சுலபமான சுவையான குறிப்புன்னா சுகி தான்!!! அசத்தலா இருக்கு சுகி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
மேல பறந்து, கீழ விழுந்து, தத்தி தத்தி நடந்து வந்தேன்!!!
ரொம்ப புகழ்ந்துடீங்க, ஒரே வெக்கமா இருக்கு!!!
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
வெஜ் பிரியாணி
மிக சுலபமான பிரியாணி. நான் இன்று தான் செய்தேன். மிக அருமை. நல்ல சுவை. மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்