தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

தங்கம் விலை உயர்வு பற்றி தான் இப்ப நாட்டில் பேச்சாக இருக்கு.தங்கத்தின் விலை குறையுமா? இல்லை இப்படியே உயர்ந்து கொண்டு தான் இருக்குமா.?தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பாராக எங்கு வாங்கினால் சுத்தமான தங்கம் வாங்கலாம்? இது போல நிறைய கேள்விகள் என் மனதில் உள்ளது.இன்றைய ஹாட் நியுசும் இது தான்.இதை பற்றி தெரிந்த தோழிகள் சொல்லுங்கள்.பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அப்டி என்னைக்கும் நினைக்காதிங்க உமையாள்... முடிந்த அளவு ட்ரை பண்ணுங்க. இல்லைனாலும் நட்க்குறது நன்மைக்குன்னு இருங்க... அடுத்தவங்க பணத்த எடுத்துக்கிட்டு யாராலும் நிம்மதிய வாழ முடியாது நாம் உழைத்த காசு நம்ம கைல வந்து சேரும்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எனக்கு குழந்தை இல்லை என்பது அவனுக்கு தெரிந்திருக்குமோ... இனி அவலுக்கு என்ன குழந்தய குட்டிய னு அவனே எடுத்துக்கிடு போய்ட்டான்

ple apdilam yocikadenga k va mathavangala yemathi valra yarayum kadavul sumavidamatar k va ple just relax pa inga neraya visayam iruku ada elam parunga pa ungaluku pidichada samachi unga kanavarku kodunga hapya irunga k

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அன்பு சுந்தரி,

தங்கம் விலை இது வரைக்கும் குறைந்ததே இல்லை. அதே சமயம், இந்த வேகத்தில் அதிகரித்ததும் இல்லை.

தங்கத்தில் முதலீடு செய்வது நிச்சயம் நல்லதுதான்.

1. சிறிய காயினகளாக, அவ்வப்போது வாங்கிக் கொள்ளலாம்

2. சிறிய லாக்கரில், பத்திரமாக வைத்துக் கொள்ள முடியும்.

3. தேவைப்படும்போது, சுலபமாக பணமாக்கிக் கொள்ள முடியும்.(ஈசி லிக்விடிட்டி)

நிறையப் பேர், நகைச் சீட்டு சேருகிறாங்க. குறைந்த பட்சம், 16 மாதம் சீட்டுப் போட வேண்டியிருக்கு. ஒன்றேகால் வருடம் கழித்து, பார்க்கும்போது, விலை அதிகரித்து விடுகிறது. அதற்குப் பதிலாக, மாதா மாதம், குறைந்த பட்சம் 1 கிராம் எடையில் கூட, காயின்களாகவே வாங்கி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது, நகையாக செய்துக்கலாம்.

வங்கிகளில் விற்கும் காயினை விட, அதே எடையில், நகைக்கடையில் வாங்கினால், விலை குறைவாக இருக்கு. வரி, ஸ்விஸ் தங்கம் என்று காரணம் சொல்றாங்க. நம்பிக்கையான கடைகளிலேயே வாங்கலாம்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அம்மா உங்க அன்பான பதிலுக்கு நன்றி.

நீங்க சொல்வது போல தான் என் சேமிப்பும்.காயினாக வாங்கியிருகேன்.தெரிந்த நகை கடையில் நகை சீட்டும் போடுகிரேன்.நீங்க சொல்வது போல நான் கட்டி முடிப்பதற்க்குள் தங்கம் விலை அதிகமாகிறது.நீங்க சொல்றது போல இனி மாதம் ஒரு கிராம் சேமிப்பது தான் நல்லது என நினைக்கிரேன்.இனி இது போல செய்கிரேன்.

நான் ஒரு பட்டய கணக்காளர், நான் சொல்வது சற்று கஷ்டமாக கூட இருக்கலாம்,இன்னும் சில வருடங்களில் தங்கத்தின் விலை கட கடவென சரியும், மறு படியும் சரிந்த விலை மேலே வரவே வராது. இது நூறு சதவிகிதம் உண்மை. தங்கத்தை பற்றி ஒரு சில உண்மைகள்.
தங்க விலையை பற்றி மேல்தட்டு மக்கள் கண்டு கொள்வதே இல்லை, எவ்வளவு விலை ஏறினாலும் அவர்கள் அதை பற்றி கண்டு கொள்வதே இல்லை, ஏழைகளுக்கு அன்றாட வாழ்கை பிரச்சனையே பெரும் பாடு. இந்த நிலையில் தங்கத்தின் மீது ஈடு பாடு நடுத்தர மக்களுக்கு தான் அதிகம் உண்டு. சேமிப்பாக இருக்கட்டும் என்று வாங்கி வைக்கின்றனர். கடந்த பத்து வருடங்களில் தங்கத்தின் மோகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிக கையிருப்பு காரணமாக விலை கண்டிப்பாக குறையும்.
அது மட்டும் இல்லை தங்கம் மின்ன செய்யும் முறையில் ஒரு விதமான கெமிகல் பயன் பாட்டில் உண்டு,அது மார்பக புற்று நோய் உண்டாக்கும் என்று ஒரு ஆய்வில் நிருபணம் ஆகி உள்ளது. மேல்நாடுகளில் இந்த தகவல் காடு தீ போல் பரவி வருகிறது.
இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின தங்கம் , ஆயிரம் ரூபாய்க்கு வந்தாலும் பணம் தேவையான பட்சத்தில் நடுத்தர மக்கள் வேறு வழி இன்றி விற்கத்தான் செய்வார்கள், இந்த மாதிரி ஒரு சூழலை கண்டிப்பாக உலக அளவில் உருவாகுவார்கள் , அப்பொழுது தெரியும் நான் சொல்வது எவளவு உண்மை என்று. அந்த நாள் இன்னும் சில மாதங்களே.

அப்படியா கேக்கவே காதுக்கு குளிர்ச்சியாவுல இருக்கு
இப்படி ஒரு நம்பகமான தகவலை தந்ததுக்கு மிக்க நன்றி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

என்னோட கணவர் கூட பெரும்பாலும் தங்கம் வாங்க சம்மதிக்க மாட்டார்.மாறாக இடம் தான் வாங்கி போடுவார்.நான் கூட சில சமையம் அவர் மேல கோபபடுவேன்.இப்ப சில நாட்களுக்கு முன்னாடி கூட ஒரு செய்தி படித்தேன்.அதாவது ஒரு வீட்ல நுறு பவுன் நகை இருந்தும் அந்த வீடு பிள்ளைங்க நகையே போட விருப்ப படலையாம்.fashion நகைகள் தான் போடுவான்கலாம்.இப்படி நகைய வாங்கி பெட்டியில வச்சி என்ன பன்றது.இருக்குற நகைய அடகு வச்சி நிறைய பேரு அந்த பணத்துல நகை வாங்குறாங்க.மாறாக எதாவது இடம் வாங்கி போடலாம்.நல்ல ரேட் வரும் பொது வித்து இலாபத்த எடுத்து கிட்டு மீதி பணத்த திரும்பவும் இடம் வாங்கலாம்.இது என்னோட கருத்து.போதுமான அளவு நகை இருந்தா போதும்னு நான் நினைக்கிறன்.அளவுக்கு மீறி சேத்து வக்கிரதுல எனக்கு உடன்பாடு இல்லை.

மேலும் சில பதிவுகள்